சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, பெண்களின் மாண்பைக் குலைக்கும் விதத்தில் பேசியுள்ள திராவிடர் கழகம் சார்ந்த மதுவதனி என்பவர் மீது,
சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பர் என நம்பிக்கை உள்ளது. இல்லையேல், நீதிமன்றம் வாயிலாக பரிகாரம் தேடப்படுமென அவர் கூறினார். அதுபோல பொது மேடையில் ஒரு ஜாதி சார்ந்து பார்ப்பனர்கள் என மதிவதனி சொன்னது தவறு மிகவும் அதிகப்படியான வார்த்தைகளை உபயோகித்து விட்டார்,
அதனால் தான் ஹிந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் திராவிடர் கழக மதிவதனிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் அவரது பேச்சுக்கு கண்டனமும் உடனடியாகத் தெரிவித்தார் அதில் நியாயம் உள்ளது. பார்பணர்கள் என்பது கெட்ட வார்த்தையா? நல்ல வார்த்தையா என்பதை விட எந்த ஜாதியப் பெயரையும் இப்படிக் கூறுவது தவறு தானே.
அவர் சொன்னது 3 சதவீதம் உள்ள பார்பணர்கள் மட்டுமே அனுபவிக்கிறார்கள் என பேசியது தவறு, அர்ஜுன் சம்பத் அதை அந்த இடத்தில் சுட்டிக்காட்டியது தவறில்லை, இப்படி பொது மேடையில் விஷமத்தனமாகப் பேசி விட்டு இப்போது திராவிடர் தலைவி என கொண்டாடிக் கொண்டிருக்கீங்களே இது எவ்வளவு பெரிய ஆபத்திலா போய் முடியும்னு தான் எதோ ஈனப் பிறவி என்று நினைத்து பார்ப்பனர்களை திட்டினால், தான் உயர்ந்தவளாகலாம் என நினைக்கும் தருணம். இதுதான் உங்களோட கருத்தா? அது தவறு. ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறாக பேசியதாக தற்போது திராவிடர் கழக நிர்வாகி மதிவதனி மீது பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் அ.அஸ்வத்தாமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகார் மனுவில், “உலகின் மிகப் பெரிய தன்னார்வலர்கள் அமைப்பான ஆர்எஸ்எஸ் பற்றி திராவிடர் கழக நிர்வாகி மதிவதனி என்பவர் அவதூறாக பேசிய பதிவு செய்த காணோளி ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேர்ந்தது. அதில், “பள்ளி கல்லூரிகள் இருக்கும் இடத்தில் போதைப் பொருள் அதிகமாக விற்கப்படுகிறது. இது ஆர்எஸ்எஸூடைய வெளிப்படையான திட்டம். ஏன் தன்னுடைய சொந்த மக்களை போதைக்கு அடிமைப்படுத்தச் சொல்கிறார்கள்? ஏனென்றால் போதைக்கு அடிமையானால் பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்வார்கள்” எனப் பேசியுள்ளார்.
வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப்படுத்தும் நோக்கத்திலும், குறிப்பிட்ட மதத்தின் ஒரு ஜாதிய பிரிவினரை அவமானப்படுத்தியதன் மூலம் அவர்களைத் தூண்டி, பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், உண்மைக்குப் புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே மதிவதனி பரப்பி இருக்கிறார். மேலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் வகையில், பெண்களின் மாண்பை குலைக்கும் விதத்திலும் அவரது பேச்சு அமைந்துள்ளது. எனவே, மதிவதனி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கைகள் எடுக்காமல் போனால் உரிய நீதிமன்றத்தில் பரிகாரம் தேடி வழக்கு தாக்கல் செய்வோம் எனவும் தெரிவித்தார்.
கருத்துகள்