சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூர் சாலையில்
ஸ்ரீராம் நகரில் ரயில் கடக்கும் தடத்தில் ரயில்வே மேம்பாலம் இல்லாததால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன.

இது தவிர வாராந்திர ரயில்கள், சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. அடிக்கடி ரயில்வே தடுப்புக் குறுக்குக் கம்பி மூடப்படுவதால் காரைக்குடியிலிருந்து, சாக்கோட்டை, புதுவயல், பள்ளத்தூர், கண்டனூர், அறந் தாங்கி, பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி பகுதிகளுக்குச் செல்லும் மற்றும் வரும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன.
அதனால், போக்குவரத்து நெரிசலும் பயணிகளுக்கு சிரமமும் ஏற்படுகிறது.
அதையடுத்து அந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த 25 ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் நிதி, வர்த்தகம், உள்துறை போன்ற முக்கிய இலாகாவில் பதவி வகித்த ப.சிதம்பரம்
அவரது பிறந்த ஊரான கண்டனூர் 3 கிலோமீட்டர் தொலைவில் இருந்த போதிலும் அதற்கு சரியான உத்தரவு பெற வில்லை தற்போது அதற்கு 2021 ஆம் ஆண்டு தான் அதற்கு சரியான அரசின் முதல் அறிவிக்கை வந்தது அதில் நில எடுப்பு குறித்து நில அளவை செய்து வரைபடம் வெளியிடப்பட்ட நிலையில். -விளம்பரம்- -விளம்பரம்-
நில ஆர்ஜித நடவடிக்கைகள் இன்னும் துவங்கவில்லை, அதன் பின்னர் தான் மேல் பாலத்திற்கான வேலைகள் நடக்கும் இதனால் வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு உள்ளாகும் நிலையில் தொடர்ந்து வலியுறுத்தி வரும் காரைக்குடி தொழில்வணிகக் கழகத்தினர் கூறியதாவது: ஸ்ரீராம் நகர் ரயில்வே பாதை கடக்கும் சாலை வழியாக தினமும் பல்லாயிரம் வாகனங்கள் செல்கின்றன. ரயில்வே பாதையை அடைக்கும் போது இரண்டு புறமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. சில சமயங்களில் ஆம்புலன்ஸ்களும் மற்ற வாகனங்களோடு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.
இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க எடுத்த நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும், என்கின்றனர். முன்னர் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த பி.மதுசூதன் ரெட்டி, கோட்டையூர் ஸ்ரீ ராம் நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதென்றார். அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது அதை உடனே அமைக்க வேண்டுமென அப் பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். -விளம்பரம்- -விளம்பரம்- அது குறித்து கல்லூரி மாணவர்கள் பலர் கூறுகையில் ஸ்ரீ ராம் நகர் ரயில்வே பாதை வழியாக தினமும் பல ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார். ஆனால் இதற்கு ஆய்வு செய்து வரைபடம் தயாரிப்பு நடந்த நிலையில் அதற்கு சர்வே பணி செய்து பணியில் இருந்த அலுவலர் ஒருவர் நில எடுப்பில் வரும் தனது வீட்டை மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றம் நிகழ்வு வராமல் காப்பாற்றி விட்டார் எனவும் மற்றவர்கள் பகுதிகள் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்வதில் மேற்கில் ஒரு பக்கம் அதிகமான அளவீடு செய்த இடமும் கிழக்குப் பகுதியில் குறைந்த இடமும் வரும்படி செய்த நிகழ்வு அவரால் தான் நிகழ்ந்ததென கூறும் அப்பகுதியில் உள்ள மக்கள் தற்போது வரை அப் பகுதியில் விவாதிக்கும் நிலை உள்ளது. மேலும் அப் பகுதியில் கட்டிடங்கள் கட்டியுள்ள பலர் தங்கள் நிலம் பரிபோகாமல் தடுக்க சில அரசியல் செல்வாக்குகளைப் பயன்படுத்தி தடுத்து வந்த நிலை தற்போது மாறிவிட்டது ஆகவே இனி பாலம் அமைக்க நில ஆர்ஜித நடவடிக்கைகள் துவங்கி நடக்கும் என்பது தான் ஆகவே விரைவில் பாலம் அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் பிரிவு 15 (2) இன் கீழ் நிலம் கையகப்படுத்தும் அதிகாரத்தை நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு நிலம் தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்த முடியும்
மேல் பாலம் அமைக்க நிலத்தை கையகப்படுத்துவதற்கு இந்திய அரசு நிலம் எடுப்புச் சட்டம் 1894 (மத்திய சட்டம் 1/1894) ன் படி அமைகிறது. பின் 24.9.1984 ல் இச்சட்டத்தின் பல முக்கிய பிரிவுகளுக்கு முக்கியத் திருத்தங்கள் அளித்து இந்தச்சட்டம் நிலம் எடுப்பு திருத்தச் சட்டம் 68/1984 ஆக சட்டம் திருத்தப்பட்டது.
பொதுக் காரியம் என்பதற்கு சட்டப்பிரிவு 3(F) ன் கீழ், எட்டு இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் துறை நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை பொதுக் காரியமாகக் கருத முடியாது. நிலம் என்பது அதில் உள்ள கட்டிடங்கள், மரங்கள் மற்றும் நிலுவையில் உள்ள பயிர்கள் சேர்த்து அடங்கும்.
அரசின் சார்பில் தனியார் நிலங்களை கையகப்படுத்துவதற்கு வருவாய் துறையில் நில எடுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1978-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பின் நாற்பத்தி நான்காவது சட்டத் திருத்தம் 19(1)(f) பிரிவை விலக்கியதன் அடிப்படையில். நியாயமான இழப்பீட்டு உரிமை மற்றும் வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம், 2013 ன் படி நில மதிப்பு 50 லட்சத்திற்கு மிகைப்படாமலும் இருந்தால் நில நிர்வாக ஆணையரின் ஒப்புதல் பெற்று தமிழ்நாடு அரசிதழிலும் உள்ளுர் தினசரி செய்தி பத்திரிக்கைகளிலும் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.
விளம்பர அறிவிப்பு என்பது மூன்று முறைகளில் செய்யப்பட வேண்டும். 1 அரசிதழ், 2 நில எடுப்புப் பகுதியில் பிரசுரமாகும் இரண்டு நாளேடுகள், 3 மற்றும் நில எடுப்புப் பகுதியில் இவ்விளம்பரத்தின் சுருக்கத்தினை விளம்பரப்படுத்த வேண்டும். ஒப்புதல் பெறப்பட்ட 4 (1) அறிவிக்கை நகல் ஒன்றினை நில உரிமையாளரிடம் கொடுத்து 30 நாட்களுக்குள் ஆட்சேபனை ஏதும் இருந்தால் பெற வேண்டும்.
அதில் உடன்பாடு ஏற்பட்டால் இழப்பீடு வழங்க முடியும் இல்லை கூடுதல் தொகை கேட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்தால் குறைந்த கால அளவில் தற்போது தீர்வு ஏற்படும்.
நில எடுப்பு பணியில் முதன்மைப் பணி என்பது நில மதிப்பு நிர்ணயம் செய்வதேயாகும். இதற்கான விலைப்புள்ளி விவரங்கள் தயாரிப்பது வருவாய் ஆய்வாளர்களின் முக்கியமான கடமையாகும்.
கருத்துகள்