சீனா திடீர் போர் ஒத்திகை தைவானை சுற்றி வளைத்து நடத்தி வருவதால்
அந்தப் பகுதியில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. தைவானைச் சுற்றி ஒன்பது இடங்களில் சீனா போர் ஒத்திகையை நடத்துகிறது.
அதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தைவான், ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் உறுதி செய்யத் தேவையான படைகளை அனுப்பியிருப்பதாக தெரிவிதுள்ளது. தைவானைச் சுற்றிய கடற்பரப்பில் ஜாயின்ட் ஸ்வார்ட் 2024 B எனும் பெயரில் போர் ஒத்திகை தொடங்கியுள்ளது
சீனா. தைவான் மீது தாக்குதல் நடத்துவதை உருவகப்படுத்தி, ஒன்பது இடங்களில் ஒத்திகை நடத்தப்படுவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.தைவான் தீவைச் சுற்றிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட சீன நாட்டுக் கடலோரக் காவல்படையும் சில கப்பல்களையும் அனுப்பி வைத்துள்ளது.
அதில் ஏழு கடற்படை போர்க் கப்பல்கள், 25 போர் விமானங்கள் மற்றும் 4 கப்பல்கள் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக தைவான் தெரிவித்துள்ளது.இந்தப் பயிற்சிகளை "பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான வலுவான தடுப்பு" மற்றும் "தேசிய இறையாண்மையை பாதுகாக்க மற்றும் தேசிய ஒற்றுமையை பேணுவதற்கான சட்டபூர்வமான மற்றும் தேவையான நடவடிக்கை" என சீன ராணுவம் விவரிக்கிறது.
அத்துடன், சீனா ராணுவத்தின் கிழக்குப் படைப் பிரிவு, தைவானைச் சுற்றிலும் செய்யப்படும் போர் ஒத்திகை குறித்த காணொளிக் காட்சியையும் வெளியிட்டுள்ளது.
தைவானின் இறையாண்மையை சீனா அங்கீகரிக்கவில்லை என்பதும், தைவான் தனக்கு சொந்தமானதென சீனா கூறுகிறது என்பதும் தற்போது நினைவு கூறத் தக்கதாகும்
கருத்துகள்