முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தில்லை பொது தீட்சிதர்கள் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கையில் தலையிட HR&CE க்கு அதிகாரமில்லை சென்னை உயர்நீதிமன்றம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம்  சபாநாயகர் ஆலயம் (தில்லை நடராஜர் கோவில்) நிர்வகிக்கும் பொது தீட்சிதர்கள் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கையில்


தலையிடுவதற்கு ஹிந்து சமய அறநிலையத் துறையி (HR&CE) க்கு அதிகாரமில்லை  என சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணையில் சந்தேகித்தது. , அதன் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக. நீதிபதி எம்.தண்டபாணி, ஹிந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் தனக்குச் சாதகமாகப் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி 2023 ஆம் ஆண்டில் ஜி.நடராஜ தீட்சிதர் தாக்கல் செய்த ரிட் மனுவிலும் மற்றும் பொது தீட்சிதர்கள் சார்பில் செயலாளரால் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு ரிட் மனு மீதான விசாரணையிலும் சந்தேகம் எழுப்பப்பட்டது. அதிகார வரம்பில்லாத காரணத்தால் ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய குழு கமிட்டியின் சார்பில் ஆஜரான ஜி. சந்திரசேகர்  மற்றும் மூத்த வழக்கறிஞர் கே. ஹரிசங்கர், நீதிபதியிடம், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி எதிர் தமிழ்நாடு அரசு 2014 ஆம் ஆண்டு தீர்ப்புள்ள வழக்கில் சபாநாயகர் கோவிலை நிர்வகிப்பதற்கான பொது தீட்சிதர்களின் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. , ஹிந்து சமய அறநிலையம் நிர்வாகிக்கும் HR&CE துறைக்கு ஒழுங்கு நடவடிக்கைகளில் தலையிட எந்தவிதமான அதிகாரமும் இல்லை.


என வாதிட்டனர், எதிர் தரப்பினருக்கு சிறப்பு அரசு வழக்கறிஞர் ஹிந்து சமய அறநிலையத் துறை (HR&CE) NRR அருண் நடராஜன், ஏதேனும் முறைகேடு அல்லது நிர்வாகச் சீர்கேடுகள் இருந்தால், கோவில் விவகாரங்களில் ஹிந்து சமய அறநிலையத் துறை தலையிடலாம் என வாதிட்டார். இருப்பினும், அதன் உறுப்பினருக்கு எதிராக கமிட்டி எடுத்த ஒழுங்கு நடவடிக்கை கோவிலின் 'தவறான நிர்வாகம் அல்லது முறைகேடு' என்று எப்படியாகும் என நீதிபதி வினவினார் .

பொது தீட்சிதர்கள் கமிட்டி இயற்றிய இடைநீக்க உத்தரவை திரும்பப்பெற உத்தரவிடும் அதிகாரம் ஹிந்து சமய அறநிலையம் சார்ந்த HR&CE துறைக்கு எங்கிருந்து வந்தது என்பதையும் நீதிபதி அறிய விரும்பினார். “ஒழுங்கு நடவடிக்கைகளில் தலையிட ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டம் மற்றும் விதிமுறைகள் மற்றும் அரசாணை சார்ந்த உங்களின் அதிகார ஆதாரம் எங்கே? எனவும் ஹிந்து சமய அறநிலையத் துறை HR & CE சேவை விதிகள் துறையால் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களுக்கு மட்டுமே அது பொருந்தும், பொது தீட்சிதர்களுக்கு அது பொருந்துமா?, ”என நீதிபதி வினவினார்.    மேலும், கமிட்டியால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு தீட்சிதர் இடைநீக்கம் அல்லது பிற தண்டனையை எதிர்த்து ஹிந்து சமய அறநிலைய HR & CE துறையை எவ்வாறு அணுக முடியும் என்று கேட்ட நீதிபதி, அத்தகைய நபர், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றத்தை மட்டுமே அணுக முடியும் எனத் தெரிவித்தார். "ஒரு தீட்சிதர் ஹிந்து சமய அறநிலையத் துறையை அணுகினாலும்  HR&CE துறை  அத்தகைய வேண்டுகோளை நிராகரித்து ஏற்க முடியாது என மறுத்திருக்க வேண்டும்," எனக் கூறினார்.  நட்ராஜ தீட்சிதர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.கனகராஜு, சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள தில்லை சபாநாயகர் கோவிலுக்குப் பொருந்தக்கூடிய ஆகம விதிப்படி சாஸ்திரங்களை மீறியதாகக் கூறப்படுவதைத் தவிர வேறு காரணங்களுக்காக இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் ஹிந்து சமய அறநிலையத் துறை தலையிடலாம் என வாதிட்ட போது, ​​பதிலளித்த நீதிபதி. இந்தப் பிரச்சனையை உச்சநீதிமன்றம் தான் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.


தற்போதைய வழக்கில், சக தீட்சிதர்கள் மீது ஒன்றிரண்டு கிரிமினல் குற்றம் குறித்து வழக்குகளைப் பதிவுசெய்து அதன் மூலம் நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக நட்ராஜ தீட்சிதர் மார்ச் 21, 2022 ஆம் நாள் அன்று பொது தீட்சிதர் குழு இடைநீக்கம் செய்தது. இடைநீக்கம் செய்யப்பட்ட காலம் ஒரு வருடம் மட்டுமே. இருப்பினும், இணை ஆணையர் ஜூன் 23, 2023 ஆம் தேதி அன்று இடைநீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்."இடைநீக்கக் காலம் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், திரும்பப் பெறுவதற்கான கேள்வி எங்கே? கோயில் நிர்வாகத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் வேகம் மற்றும் ஆர்வத்தை இதுவே காட்டுகிறது,” எனக் கூறிய நீதிபதி, நடராஜ தீட்சிதர் ஏற்கனவே மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டு அவருக்கு பணிகள் ஒதுக்கப்பட்டதாக  ஹரிசங்கரின் மனு சமர்ப்பிப்பைப் பதிவு செய்து, அவருக்கு முன்னிருந்த இரண்டு ரிட் மனுக்களையும் முடித்து வைத்தார். . ஹிந்து சமய அறநிலைய

HR & CE துறையின் அதிகார வரம்பு குறித்த கேள்வியை நீதிபதி எழுப்பியுள்ளார், ஒழுங்கு நடவடிக்கைகளில் தலையிட, வேறு ஏதேனும் பொருத்தமான வழக்கில் முடிவு எடுக்கப்படும். எனவும் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...