ரூபாய்.11.70 லட்சம் லஞ்சப் பணத்துடன் சிக்கிய உதகமண்டலம் நகராட்சி ஆணையர்.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் நகராட்சி ஆணையரது காரில் ரூபாய் 11.70 லட்சம் தரகு பங்கு பணம் லஞ்சமாகப் பெற்று அதை எடுத்துச் சென்ற போது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் சிக்கிய நிலையில் பணம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் விபரம் வருமாறு:-
நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் நகராட்சி ஆணையராக ஜஹாங்கீர் பாஷா தற்போது பணிசெய்து வருகிறார். நேற்றிரவு ஒரு வாடகைக் காரில் அவரது சொந்த ஊரான சென்னைக்கு, 11:70 லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கிய பணத்தை எடுத்துச் செல்வதாக நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் துணைக் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், ஆய்வாளர் பரிமிளா தேவி மற்றும் குழுவினர் உதகமண்டலம் தொட்டபெட்டா சாலை சந்திப்பில் அவர் சென்ற காரை இடை மறித்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஆணையர் ஜஹாங்கீர் பாஷா வந்த காரை சோதனையிட்டதில், 11. 70 லட்ச ரூபாய் இருந்தது தெரிய வந்தது. அப்போது விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியதால் சந்தேகமடைந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் மற்றும் காரைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர், நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவை நகராட்சி அலுவலகத்திற்கு விசாரணைக்காக இரவு, 8:00 மணிக்கு அழைத்துச் சென்றனர். விசாரணை இரவு, 11:00 மணிக்கு மேல் தொடர்ந்தது. இந்தச்சம்பவம் கேள்விப்பட்டு உதகமண்டலத்தில் பரபரப்பாகப் பேசும் நிலையில் .
இந்த விசாரணை குறித்து தெரிவித்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர்:- பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவரிடமில்லை. கட்டிடங்கள் புனரமைப்பு, அனுமதி போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு லஞ்சம் வாங்கியதாக புகார்கள் வந்திருக்கிறது. அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். ஏற்கனவே இவர் திருவேற்காடு நகராட்சி, தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிகளில் ஆணையராகப் பணியாற்றி அங்கும் லஞ்சப் பெருச்சாளியாக மக்களால் பார்க்கப்பட்ட நிலையில் தான் பணியில் இருந்தார் . இதே போல் திருவேற்காடு, கொடைக்கானல், கரூர், சிவகாசி, விழுப்புரம், சத்தியமங்கலம், காரைக்குடி நகராட்சி ஆணையர்களும் தினசரி ” டீ மற்றும் டிபன் ” செலவுக்குத் தான் வாங்குகிறார்களாம். அங்கும் பார்வை வைத்தால் நல்லது என்பது பொதுவான கருத்து.
கருத்துகள்