சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தேவி மாங்குடி இரண்டாம் மேல்முறையீட்டு மனு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி விரிவான விசாரணைக்கு வருகிறது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் அடங்கிய சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தோ்தல் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் மாதம். 16-ஆம் தேதியில் விசாரணை நடைபெறும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தோ்தல் வாக்குகள் எண்ணிக்கை மற்றும் வெற்றி பெற்றவர்கள் குறித்து அலுவலர்கள் செய்த குழப்பம் காரணமாக முன்பே உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அது தேர்தல் விசாரணை நீதிமன்றத்தில் விசாரணைக்கு உத்தரவிடவே வழக்கு சிவகங்கை தேர்தல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது
அதில் வழங்கப்பட்ட தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுவை தேவி மாங்குடி தாக்கல் செய்தார். அதில் விசாரணை நடத்து தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அது மேல்முறையீடு தாக்கல் செய்த பின்னர் விவகாரம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு பின்னர் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில்
டிசம்பர் மாதம். 16-ஆம் தேதியில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தோ்தலில் காரைக்குடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் மாங்குடியின் மனைவி தேவியும், ஜயப்பன் என்பவர் மனைவி பிரியதா்ஷினியும் மற்றும் சிலரும் போட்டியிட்டனா். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த இந்தத். தோ்தலில் 62 வாக்குகள் வித்தியாசத்தில் தேவி வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது. மறு நாள் வாக்கு எண்ணிக்கையில் தேவியை எதிா்த்துப் போட்டியிட்ட பிரியதா்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இப்படி ஒரு முறை தேவியும் மற்றொரு முறை பிரியதா்ஷினியும் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. பின்னா் தேவி வெற்றி பெற்றதாக மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால், இருவருக்குமிடையேயான இந்த தோ்தல் விவகாரம் மாவட்ட தோ்தல் சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணை சென்றது. இதில் தேவியின் வெற்றி செல்லாது என்றும், அவரை எதிா்த்துப் போட்டியிட்ட பிரியதா்ஷினியின் வெற்றி செல்லும் என தேர்தல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
இதை எதிா்த்து தேவி சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்தாா். இதில் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவியாக உள்ள தேவியின் வெற்றி செல்லாது எனவும்
பிரியதா்ஷினியின் வெற்றி செல்லும் என சென்னை உயா்நீதிமன்றம் மதுரை கிளை நவம்பர் மாதம்.14- ஆம் தேதியில் உத்தரவிட்டது. தற்போது இதை எதிா்த்து மேல்முறையீட்டு மனுவை தற்போது காரைக்குடி சட்ட மன்ற உறுப்பினர் மாங்குடி மனைவி தேவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதில் தேவி சாா்பில் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஆஜரானாா். அவா் குறிப்பிடுகையில்,
‘‘இந்தத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற போது முதலில் 62 வாக்குகள் வித்தியாசத்தில் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்னா் அடுத்த நாள் காலையில் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை என்ற பெயரில் தலைவராக வெற்றி பெற்ற தேவியை தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இது ஊழல் மற்றும் முறைகேடாகும். மேலும் இந்த விவகாரத்தில் சில வாக்குப் பெட்டிகள் திறக்கப்படவே இல்லை. இந்த நிலையில் கூட்டுத் தொகையிலும் வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளது. இதனை சென்னை உயா்நீதிமன்றம் மதுரை கிளை கருத்தில் கொள்ளவில்லை.
வாக்குகள் எண்ணப்படாமல் விடுபட்டதை ஒரு விஷயமாக உயா்நீதிமன்றம் கருதவில்லை. எனவே, இதில் முறைகேடு நடைபெற்றுள்ளது எனக் கூறுகிறோம். மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கையை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோருகிறோம்’’
என வாதிடப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் கவனிக்கத் தவறிய விபரங்கள் பட்டியலிடப்பட்டு அதன் சரியான Grounds ஐ மேல்முறையீட்டு விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் கருத்தில் கொள்ளவில்லை. வாக்குகள் எண்ணப்படாமல் விடுபட்டதை ஒரு விஷயமாக உயா்நீதிமன்றம் கருதவில்லை. எனவே, இதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்பதால் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கையை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோருகிறோம்’’
என வாதிடப்பட்டது. முதலில் வெற்றி பெற்ற சான்றிதழ் தேவிக்கு வழங்கிய பின்னர் அடுத்ததாக மறுநாள்
வெற்றி பெற்றதாகக் கூறப்பட்ட பிரியதா்ஷினி என்பவர் தரப்பும் உச்சநீதிமன்றத்திற்கு கேவியட் மனு தாக்கல் செய்து வந்தது. இவா்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி தோ்தல் ஆணையம் செயல்பாட்டை கீழமை தேர்தல் விசாரணை நீதிமன்றம் உறுதி செய்துள்ளதனால், இதில் மறுவாக்கு எண்ணிக்கை என்பதே தேவையில்லை எனவும் வாதிட்டாா். இதைத் தொடா்ந்து நீதிபதிகள் இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு வருகின்ற டிசம்பா் மாதம் 16 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனா்.
முன்னதாக நீதிபதிகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு வழக்கை தள்ளி வைப்பதாகக் கூறினா். அப்போது வழக்குரைஞா்கள் டிசம்பா் மாதமே விசாரணைக்கு எடுக்குமாறு கோரியதை அடுத்து நீதிமன்றம் டிசம்பா் மாதம் 16- ஆம் தேதிக்கு பட்டியலிட சம்மதித்தது. இந்த நிலையில் மேற்கண்ட சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தை காரைக்குடி மாநகராட்சியின் நிர்வாக எல்லைப் பகுதியில் இணைந்து அரசாணையும் வெளியிடப்பட்ட நிலையில் அதற்கான மாநகராட்சியின் நிர்வாக ஆணையர் பணி நியமனம் செய்யப்பட்ட நிலையில் புதிய மேயர் அடுத்த தேர்தல் மூலம் தேர்வாக முடியும், தற்போது நகராட்சி தலைவர் மற்றும் இணைந்த பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் தலைவர்கள் அந்த இடத்தில் அதே பொறுப்புகளை கவனித்து வருகின்றனர்.
கருத்துகள்