காளையார் கோவில் முன் அறிவிப்பின்றி சட்ட விரோதமாக ஆக்கிரமிப்புகளை அகற்றிய தாசில்தாருக்கு ரூபாய்.5,000 அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை.
முதலில் காளையார்கோவில் காவல் நிலையம், வருவாய் வட்டாட்சியர், வருவாய்த்துறை அலுவலர்கள், ஆகியோருக்கு கே. வள்ளி என்ற மனுதாரர் தாக்கல் செய்த WP(MD)25159/2024WMP(MD) 21389/2024 நிலம் கையகப்படுத்துதல் தமிழ்நாடு அசையாச் சொத்துக்களைப் பெறுதல் மற்றும் கையகப்படுத்துதல் சட்டம் (XLII of 1956) நில ஆக்கிரமிப்பு சட்ட மனு மீது நீதிபதிகள் சம்மன் அனுப்பினர். ஆக்கிரமிப்பை அகற்றும் முன் நிலம் வசிக்கும் நபருக்கு நோட்டீஸ் வழங்கத் தவறியது தான் வட்டாட்சியர் செய்த பிழை.
பொதுச் சொத்தில் வேலி அமைத்ததாகக் கூறி அதை வருவாய் துறை அகற்றுவதை எதிர்த்து, கே.வள்ளி என்பவர் தாக்கல் செய்த மனு மீது, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
முதலில் நீதிமன்றத்தில் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து வருவாய் வட்டாட்சியர் முபாரக் அலி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, கே வள்ளியின் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு முன் நோட்டீஸ் வழங்கவில்லை என்று ஒப்புக்கொண்டார்.
நீதிபதிகள்:- "தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம், 1905 ன் படி, 119 ஆண்டுகள் பழமையானது, பொதுச் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடைமுறையை வழங்குகிறது. அந்தச் சட்டத்தின் விதிகளை செயல்படுத்ததும் அலுவலர், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன் அந்தச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
வேலியைச் சீரமைக்க வருவாய்த்துறை அலுவலர்களுக்கும், காவல் துறையினருக்கும் உத்தரவிட்டனர். கே.வள்ளிக்கு உரிய நோட்டீஸ் வழங்கி, சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையின்படி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் வட்டாட்சியர் சட்ட விரோதமாக நடந்து கொண்ட விதத்திற்காக ரூபாய். 5,000 அபராதம் நீதிமன்றம் விதித்தது, ஆனால் அவரது சேவைப் பதிவுகளில் எந்தப் பாதிப்பையும் இது ஏற்படுத்தாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். வருவாய்த் துறை மூலம் வழங்கும் உள்ளாட்சி நிர்வாகம் வழியாக 5 நம்பர் நோட்டீஸில் குறிப்பிடப்பட்ட தேதிக்கு முன், ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட நபரை அழைக்கும் வகையில், பரிந்துரைக்கப்படும் . (2) நோட்டீஸ் பெறப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள ஆக்கிரமிப்பை சம்பந்தப்பட்ட நபர் அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நபர் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றால் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு அடுத்ததாக 7 ஆம் நம்பர் நோட்டீஸ் 15 நாட்களில் கால அவகாசம் வழங்கும் அதற்கும் அகற்றவில்லை எனில் உள்ளாட்சி நிர்வாகம் வருவாய் துறை மூலம் இறுதியில் 6 நம்பர் நோட்டீஸ் வழங்கிய உடன் 24 மணி நேரத்தில் ஆக்கிரமிப்புகளை அரசு செலவில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து அகற்றி அதை ஆக்கிரமிப்பு செய்த நபரிடம் தண்டமாக வசூல் செய்ய நிர்வாகம் முடிவு செய்யும் அதிகார வழிமுறைகள் சட்டத்தின் படி வகுத்து வழங்கப்பட்டுள்ளது . எவ்வாறாயினும், ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான கேள்வி பிரிவு 183(6) ன் கீழ் வரவில்லை என்றால், பிரிவின் படி ஆக்கிரமிப்பு அகற்றம் செய்த நிகழ்வு பாதிக்கப்படலாம். மேலும் பொது நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அரசாணை 540 ன் படி நேரடியாக நடவடிக்கைகள் எடுக்க வழிவகைகள் உண்டு. இருந்த போதும் உரிய அலுவலர்கள் தாங்களாகவே நடவடிக்கைகள் எடுப்பது சமீபத்தில் குறையக் காரணம் லஞ்ச லாவண்யங்கள் தான். அந்த ஊழல்கள் காரணமாகத் தான் நீதிமன்றத்தில் வழக்குகள் வருகிறது. பணம் லஞ்சமாகக் கொடுத்த நபர்கள் ஆக்கிரமிப்பு எடுக்கக் கூறினால் உடனே நடவடிக்கை எடுப்பது என்பதும், பாதிக்கப்பட்ட நபர்கள் பணம் தரவில்லை எனில் நடவடிக்கைகள் தாமதப்படுத்தும் நிகழ்வும் அதிகம் நடப்பதாக மக்கள் மத்தியில் அறியப்படுகிறது.
கருத்துகள்