மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு ரூபாய். 7.5 கோடி லஞ்சம் வாங்கிய திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி இயக்குனர் தலைமறைவு
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மாணவருக்கு மருத்துவப் படிப்புக்கான எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு ரூபாய். 7.5 கோடி லஞ்சம் வாங்கிய
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி இயக்குனர் மீது கர்நாடகா மாநிலத்தின் காவல்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் தலைமறைவானார். கர்நாடகா மாநிலம் மல்லேஸ்வரம் மாணவர் எம்.பி.பி.எஸ்.,மருத்துவ படிப்புக்காக திருவனந்தபுரம் காரகோணம் மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பித்தார். அதன் இயக்குனர் பென்னட் ஆப்ரஹாம் எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு இடம் ஒதுக்கிட ரூபாய். 7.5 கோடி நன்கொடை என்ற பெயரில் லஞ்சம் கேட்டு வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் ‛சீட் ஒதுக்காமல் காலம் கடத்தியுள்ளார். அது குறித்து கர்நாடகா மாநிலத்தின் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் மாணவர் கொடுத்த புகாரில், மல்லேஸ்வரம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்குள் சோதனை நடத்தினர். அப்போது இயக்குனர் பென்னட் ஆப்ரஹாம் அங்கு இல்லை. தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது. அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக பென்னட் ஆப்ரஹாம் பலரிடம் எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு இட ஒதுக்கிட லஞ்சமாக ரூபாய். 500 கோடி வரை பணம் பெற்ற தகவல் வெளியானதையடுத்து அமலாக்கத்துறை யினர் விசாரணையில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. ரூபாய் 500 கோடி என்பதை எளிதாக ஒரு கல்லூரி நிர்வாகம் சம்பாதிக்க முடியுமென்றால் இது ஒரு வகை பொருளாதாரப் பயங்கரவாதம். தமிழ்நாட்டில் இது போல பல மோசடி கல்வித்தந்தைகள் என்ற பெயரில் இருக்கிறார்கள் அவர்களில் சிலர் அரசியல் கட்சிகள் நடத்தும் நிலை உண்டு ரூபாய் 7.5 கோடி லஞ்சம் கொடுத்தார் என்பது உண்மை எனில் அது கணக்கில் வராத கருப்புப் பணமா என்பதை ஆராய்வதோடு லஞ்சம் கொடுத்து மருத்துவ கல்லூரியில் சேர முயற்சித்த குற்றத்திற்கும் சேர்த்து பலருக்கும் தண்டனை பெற்றுத் தர வேண்டியது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அவசியமாகும் . புகார் அளிதவரை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து விட்டிருந்தால் குற்றம் வெளிவந்திருக்காது என்பதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் அது லஞ்சம் அளித்து மற்றவர்களின் உண்மையான உரிமைகளைக் கவர்ந்து கொள்பவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவே அமையும்.
கருத்துகள்