புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரியை அவர் வழக்கறிஞர் குழுவினர் நேற்று சந்தித்துப் பேசினர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் பிரபாகரன்:- நடிகை கஸ்தூரிக்கு முறையாக சம்மன் வழங்கப்படாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள வீட்டில் சம்மனை ஒட்டி விட்டு ஹைதராபாத்தில் வீட்டிலிருந்த போது கைது செய்துள்ளனர். முறையாக வழக்கு விசாரணைக்காக அழைக்காமல் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கோரி நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை 8-XIV Metropolitan மாஜிஸ்திரேட் M.தயாளன் முன்னிலையில் விசாரணை நடத்தி F-2 எழும்பூர் காவல்நிலையத்தில் பதிவான
FIR குற்ற எண் 480/ 2024 க்கு CRLMP 69448/2024 மனு ஜாமீன் வழக்கில் வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார். அப்போது கஸ்தூரிக்கு ஜாமீன் மனு இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மதியம் 12 மணிக்கு விசாரணைக்கு வந்த போது சென்னை காவல்துறை தரப்பில் ஜாமீனுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்படவில்லை. இந்த வழக்கில் மாலையில் நீதிமன்றம் கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிடடது. இதன்மூலம் புழல் சிறையில் இருந்து இன்று அல்லது நாளை காலையில் வெளியே வருவார். புழல் சிறையின் கோரன்டைன் வார்டில் அறை எண் 10-ல் நடிகை கஸ்தூரி அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் சாப்பிடவில்லை. இன்று முதல் சாப்பிடுகிறார்.
நடிகை கஸ்தூரி நல்ல மன நிலையில் உள்ளார். அவரது மகனுடன் பேச வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். சிறை கைதிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது போன்று அவரது மகனுடன் பேச அனுமதி வழங்கப்படும் என சிறை அலுவலர்கள் தெரிவித்தனர். ஏற்கெனவே அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு பிணை கிடைத்துள்ள நிலையில், அந்த வழக்குகளை எல்லாம் ஜாமீன் மனுவில் மேற்கோள் காட்டியுள்ளதால் கஸ்தூரி மீதான வழக்கு உயர்நீதிமன்றம் மூலம் தள்ளுபடியாக வாய்ப்பு உள்ளது. என வழக்கறிஞர் பிரபாகரன் தெரிவித்தார். புழல் சிறைக்கு ஒவ்வொரு நாளும் அழைத்து வரப்படும் கைதிகள் முதல் நாளில் அங்குள்ள ஹாலில் மொத்தமாக தங்க வைக்கப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் சுமார் 15 பெண் கைதிகளுடன் ஹாலில் நடிகை கஸ்தூரி தங்கவைக்கப்பட்டார். பின்னர், வழக்கமான சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு சிறையில் தூக்கமின்மை காரணமாக அவதிப்பட்டுள்ளார்.
நேற்று காலை உணவை தவிர்த்துள்ளார். சிறைத்துறை அலுவலர்களின் வற்புறுத்தலுக்கிணங்க அவர் மதிய உணவை குறைந்த அளவே சாப்பிட்டதாகவும் வழக்கறிஞர் தரப்பில் தகவல்.நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் மனைவி காமாட்சி சுவாமி நாதன் கோரிக்கை வைத்தார்.காமாட்சி சுவாமிநாதன் தற்போது சக்ஷம் (மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு) அமைப்பின் அகில இந்திய துணை தலைவராக உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக ஒரு கோரிக்கை. நடிகை கஸ்தூரிக்கு எதிராக பதிவான குற்றவியல் வழக்கு குறித்து நான் கருத்து கூறுவது முறையாக இருக்காது.
அதேசமயம் அவருக்கு ஆட்டிஸம் பாதிப்போடு கூடிய ஒரு மகன் இருக்கிறார் என்றும் அவர் ஒரு தனி மனுஷியாய் அக்குழந்தையை போராடி வளர்த்து வருகிறார் என்றும் அறிந்து கொண்டேன். இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும் அவர் தம் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே ஒரு நித்திய சவால்.
நானும் கஸ்தூரியை போல ஒரு சிறப்பு அம்மா தான் (Special Mother). எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான். என்ற நிலையில் இந்த ஜாமீன் கிடைத்தது.
கருத்துகள்