பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில்
தொழில்நுட்பப் பிரச்சினைகள், மற்றும் தூக்குப் பாலத்தில் விரிசல் காரணமாக புதிய ரயில்வே புதிய பாலம் கட்ட பிரதமர் நரேந்திர மோடி 1 மார்ச் 2019 ஆம் தேதியன்று அடிக்கல் நாட்டினார். அதன் பூர்வாங்கமான பணிகள் துவங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.
2,078 மீட்டர் நீளம் கொண்ட புதிய பாலம், கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 101 பெரிய தூண்களைக் கொண்ட பாலத்தில் 60 அடி நீளம் கொண்ட 99 இணைப்புக் கர்டர் பொறுத்தப்பட்டு பாலத்தின் மையத்தில் கப்பல்கள் செல்வதற்கு தயாராக 77 மீட்டர் நீளம், 27 மீட்டர் உயரத்திற்கு ஹைட்ராலிக் தூக்கி மூலம் இயங்கும் செங்குத்து தூக்கு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.
கடலில் பாம்பன் புதிய ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள், தண்டவாளங்கள், கர்டர்கள் மற்றும் பாலத்தின் நடுவே கப்பல்கள், படகுகள் கடந்து செல்வதற்கு செங்குத் தூக்குப் பாலத்தை பொறுத்தும் பணிகள் முடிந்து, அதனை தூக்கி இறக்கும் சோதனைகள், ரயில்கள் இயக்கச் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவடைந்து
இறுதிக் கட்டமாக இந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் சார்பாக இரண்டு நாள் ஆய்வுப் பணிகள் பாம்பனில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி தலைமையில் துவங்கியது. இதில் ரயில்வே அலுவலர்கள், பாம்பன் மற்றும் அக்காமடம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டிலிருந்து டிராலிகள் மூலம் சென்று பாம்பன் ரயில் நிலையம், பாம்பன் தெற்குவாடி ரயில்வே கேட், புதிய பாம்பன் பாலம், புதிய பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்துத் தூக்குப்பாலம்,
இதற்காக நடுக்கடலில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, பாலத்தில் உள்ள சிக்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும், சின்னப்பாலம் ரயில்வே கேட்டில் இறங்கி, புதிய வழித்தடத்தின் செயல் பாடுகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். காற்றின் வேகம், நிலையை கண்காணிப்பதற்கான அனிமோ மீட்டர் அமைப்பு மற்றும் பாலத்தின் சிக்னல் அமைப்புகளையும் அவர் ஆய்வு செய்தார். தூக்குப் பாலத்தை இயக்கும் ஆபரேட்டர் அறைக்குள் சென்று பொறியியல் நிபுணர்கள் மற்றும் அலுவலர்களிடம் விளக்கம் கேட்டார்.
பின் தூக்குப்பாலத்திலிருந்து மண்டபம் நோக்கி உள்ள ரயில் பாலத்தை முழுமையாக ஆய்வு செய்து மாலை 6 மணிக்கு முதல்கட்ட ஆய்வை நிறைவு செய்தார். சுமார் 10 மணிநேரம் நடந்த ஆய்வில் புதிய பாலத்தில் ரயிலை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்புகள் குறித்து உறுதி செய்யப்பட்டது. மேலும் தூக்கு பாலத்தை திறந்து அதன் வழியாக கப்பல்களை இயக்கியும் சோதனை செய்யப்பட்டது.
பாம்பன் புதிய பாலத்தில் இரண்டாவது நாளாக அதிர்வுகள்- உறுதி தன்மையை ஆய்வு செய்ய 80 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை
ஹைட்ராலிக் லிப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்கு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.
நடுக்கடலில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறை, பாலத்தில் உள்ள சிக்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
ராமேசுவரம் தீவினை இந்தியாவுடன் இணைக்கும் பாம்பன் ரெயில் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள், தூக்குப் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக புதிய ரயில் பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது
இரண்டாவது நாளான இன்று முக்கிய அம்சமாக மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புதிய பாம்பன் ரயில் பாலம் வழியாக பாம்பன் ரயில் நிலையம் வரையிலும் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. அப்போது 4 பெட்டிகளுடன் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. குறிப்பாக செங்குத்து தூக்கு பாலத்தின் அதிர்வுகள், உறுதித்தன்மை தொடர்பாக பாதுகாப்பு ஆணையர் ரயிலில் பயணம் செய்தவாறு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் தலைமைத் திட்ட மேலாளர் கமலாகர் ரெட்டி, தலைமை நிர்வாக அலுவலர் அமித்குமார் மனுவால், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஷரத் ஸ்ரீவத்சவா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த மாத இறுதிக்குள் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா தேதி முறைப்படி அறிவிக்கப்படுமென்றும் அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது
பின் தூக்குப்பாலத்திலிருந்து மண்டபம் நோக்கி உள்ள ரயில் பாலத்தை முழுமையாக ஆய்வு செய்து மாலை 6 மணிக்கு முதல்கட்ட ஆய்வை நிறைவு செய்தார். சுமார் 10 மணிநேரம் நடந்த ஆய்வில் புதிய பாலத்தில் ரயிலை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்புகள் குறித்து உறுதி செய்யப்பட்டது. மேலும் தூக்கு பாலத்தை திறந்து அதன் வழியாக கப்பல்களை இயக்கியும் சோதனை செய்யப்பட்டது.
பிரிட்டிஷ் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி நிர்வாகத்தில் சேதுபதி மன்னர்கள் ஆதரவில் 1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பாம்பன் கடல் ரயில் பாலத்தில், கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலதின் நடுவில் திறக்கும் கத்திரி வடிவ தூக்குகள் அமைந்தன. 2.3 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தியாவின் முதல் கடற்பாலமாகும். மேலும் 2010 ஆம் ஆண்டு மும்பையிலுள்ள பாந்திரா-வொர்லி கடற்பாலம் திறப்பதற்கு முன்பு வரை இது தான் இந்தியாவின் மிக நீளமான கடல் ரயில் பாலமாகும். பாம்பன் ரயில் பாலத்திற்கு அருகில் 1988 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துப் பாலம் திறக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டில், தற்போதுள்ள பாலத்திற்கு அருகில் ஒரு புதிய பாலத்தை கட்டும் பணி தொடங்கியது. 2022 ஆம் ஆண்டு டிசம்பரில், கடல் அரிப்பின் காரணமாக தொடருந்துப் பாலம் பலவீனமடைந்ததால், பாலத்தின் மீது தொடர் வண்டி போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டில் இலங்கையுடனான வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வழிகளை பிரித்தானிய நிர்வாகம் ஆராய்ந்ததன் விளைவாக 1870 ஆம் ஆண்டு இந்திய நிலப்பகுதியுடன் பாம்பன் தீவை இணைக்கும் பாலத்திற்கான திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதன் கட்டுமானம் 1911 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. 24 பிப்ரவரி 1914 ஆம் தேதியன்று தொடருந்துப் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதன் மூலம் தீவிலுள்ள இராமேஸ்வரம் இந்தியாவின் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டது.1964 ஆம் ஆண்டில் தனுஷ்கோடி இராமேஸ்வரம் தீவைத் தாக்கிய பெரும் புயல் மற்றும் சூறாவளியில் பாலம் பலத்த சேதமடைந்தது விரிவான பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பாம்பன் ரயில் பாலத்திற்கு அருகிலுள்ள சாலைப் போக்குவரத்திற்கான பாலம் 1988 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில், அதிக எடையுள்ள சரக்கு இரயில்களைத் தாங்கும் வகையில் பாலத்தை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. 13 ஜனவரி 2013 ஆம் தேதியன்று ஒரு கடற்படைப் படகு பாலத்தில் மோதியதால் ஏற்பட்ட சேதத்தால் பாலத்தின் சில தூண்களை சரிசெய்ய வேண்டியிருந்தது.இதன் நூற்றாண்டு விழா 2014 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. 2016 ஆம் ஆண்டு இந்திய அரசின் ரயில்வே அமைச்சகம் ரூபாய் 25 கோடி (US$ 3.1 மில்லியன்) செலவில் பாலத்தை நவீனமாக்கும் திட்டத்தை அறிவித்தது.
கருத்துகள்