தமிழ்நாடு அரசால் ராணுவ ஓய்வூதியர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு அரசாணை. நடப்பு நிதி ஆண்டிலிருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் சொத்து வரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதிலிருந்து முழுமையாக விலக்களித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், இந்தியத் தாய்நாட்டிற்காக நம் நாட்டினுடைய பல்வேறு எல்லைகளில் தன்னலமற்ற சேவைகளை செய்து வரும் நமது முன்னாள் படை வீரர்களின் நலனுக்காக இந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்களித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.அதன்படி நடப்பு நிதி ஆண்டிலிருந்து சொத்து வரி வீட்டு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த வரி விலக்கு அளிப்பதன் மூலம் 1.2 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் தேவையான செலவினத்தை தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர்கள் நல நிதியிலிருந்து மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.மேலும் இந்ததிட்டத்திற்கான செலவினம் தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர்கள் நல நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுவதால், இந்த உத்தரவுக்கு நிதித்துறை இசைவு பெறத் தேவையில்லை என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கான புதிய சிறப்பு சலுகை நிபந்தனைகள்
அதே சமயம் இந்த திட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது முன்னாள் ராணுவ வீரர்கள் தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருத்தல் வேண்டும்.
முன்னாள் ராணுவ வீரர்களுடைய சொந்த வீட்டிற்கும் அவர்களின் சொந்த பயன்பாட்டில் குடியிருப்பாராக பயன்படுத்தப்படும் கட்டடத்திற்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும்.
முன்னாள் ராணுவ வீரர்கள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது.
ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் மறுவேலைவாய்ப்பு முறையில் தமிழ்நாடு அரசுத்துறைகள், மத்திய அரசுப் பணிகள், மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் இந்த மறுவேலைவாய்ப்பு பணியிலிருந்து ஓய்வூதியம் பெறுபவராக இருத்தல் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கக்கூடிய புதிய சிறப்பு சலுகையை முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் இது இப்போது அறிவிப்பு வெளிவரக் காரணம் அமரன் திரைபடம் வந்த பின்னர் உள்ள நிலைப்பாடு என்பதை இங்கு உணரலாம்.
கருத்துகள்