கள்ளக்குறிச்சி கருணாபுரம் விஷமான கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழ்நாட்டில் ஜூன், ஜூலை மாதங்களில் 69 பேர் உயிரிழந்தது குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (நவம்பர் 20, 2024) ல் மத்திய குற்றப்
புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டது.
மாநில குற்றப் புலனாய்வுத் துறை (சிபி-சிஐடி) வழக்கை மத்திய ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர் ஐ.எஸ்.இன்பதுரை, பாமக கே.பாலு, தேமுதிக பார்த்தசாரதி, பாஜகவின் ஏ. மோகன்தாஸ் உள்ளிட்ட பலரும் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் மீது
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய 2 வது டிவிஷன் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்தது. தமிழ்நாட்டில் முந்தைய வழக்குகளில் சிபி-சிஐடி நடத்திய விசாரணைகள் குற்றத்தைச் செய்தவர்களைத் தடுக்க போதுமானதாக இல்லை என்று வாதிகள் தரப்பில் வாதிட்டனர்.
ரிட் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.எல்.ராஜா, வி.ராகவாச்சாரி, 'யானை' ஜி.ராஜேந்திரன் மற்றும் பலர் தாக்கல் செய்த கூடுதல் விபரங்கள் வழக்கில் வலு சேர்க்கும் வகையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதுதான் பொருத்தமானது என டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித்தது.
ஒரு இணக்கமான தீர்ப்பை எழுதிய நீதிபதி பாலாஜி, மதுவின் தீமைகளை சமூகம் உணர ஒரு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்றார். இதுபோன்ற கள்ள மதுபான விற்பனை மாநிலக் காவல்துறையின் கவனத்திற்கு வராமல் போனது எப்படி என்பதைக் கண்டு நீதிமன்றம் திகைப்பதாக அவர் கூறினார்.
உள்ளூர் காவல்துறையினரின் ஆதரவு காரணமாக விற்பனை நடந்ததாகத் தோன்றினாலும், பிந்தையவர் கண்ணை மூடிக்கொண்டதாக நீதிபதி கூறினார். எனவே, இந்த துயர சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றார்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்குமார் தரப்பில் மாநிலத்தின் சபாநாயகர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்
அடுத்ததாக, மாண்புமிகு சபாநாயகர் அவர்கள் அரசின் நிலைப்பாடு
எம்.எல்.ஏ., திரு. செந்தில்குமார் முன்வைத்த கவன ஈர்ப்பு தீர்மானம் அனுமதிக்கப்படவில்லை
கள்ளக்குறிச்சி தொகுதியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கும் வகையில்
கள்ளக்குறிச்சியில் இருந்ததால், இந்த விவகாரம் அ.தி.மு.க.வின் கவனத்திற்கு வரவில்லை
குறிப்பாக உண்மையின் வெளிச்சத்தில்
கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் தயாரிப்பது குறித்து விபரம்
கள்ளக்குறிச்சிக்கு அருகிலுள்ள மலைகள் வாழும் மக்கள் நிலை மட்டுமின்றி, முன்வைத்துள்ள முக்கிய குற்றச்சாட்டு
மனுதாரர்கள் மெத்தனால் கலப்பது தொடர்பாக மட்டுமே காவல் துறையினர் கவனத்தில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ள நிலையில்,அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, “இந்த சம்பவத்துக்கு காரணமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் ஓய்வு பெற்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கை விசாரிக்க சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையில் 50 பேர் அடங்கிய 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 24 பேரில் 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை,” என வாதிட்டனர்.அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு
தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் டி. செல்வம்,கே.பாலு ஆகியோர் தங்களது வாதத்தில், “கடந்த ஆண்டு மரக்காணத்தில் இதேபோல விஷச் சாராயம் குடித்து 30 பேர் பலியானர். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்தாண்டு கள்ளக்குறிச்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கெனவே கள்ளச் சாராயம் அப்பகுதியில் அதிகரித்து வருவதாக கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். பொதுமக்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடையின்றி கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்காரணமாக காவல்துறை அதிகாரிகளை அரசே இடைநீக்கம் செய்துள்ளது. இதனால் சுதந்திரமான விசாரணை அமைப்பு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் துணையில்லாமல் கள்ளச் சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்ய முடியாது. ஆனால் இந்தச் சம்பவத்துக்கு காவல் துறை மற்றும் அரசியல்வாதிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என அரசு கூறுகிறது. விஷச் சாராயத்தை காய்ச்சியவர்கள் மற்றும் விற்பனை செய்தவர்கள் மீது மட்டும் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீதும், தொடர்புடைய முக்கிய நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சம்பவத்தில் 69 பேர் வரை பலியாகியுள்ளதால் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்,” என வாதிட்டிருந்தனர்.
அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, “இந்த சம்பவத்துக்கு காரணமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் ஓய்வு பெற்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கை விசாரிக்க சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் 50 பேர் அடங்கிய 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 24 பேரில் 11 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை,” என வாதிட்டனர். அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு கள்ளக்குறிச்சி விஷமான கள்ளச்சாராய பலி தொடர்பான இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தீர்ப்பளித்தனர். ‘சமுதாயத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும், தீங்குகளுக்கும் மதுதான் முக்கியக் காரணியாக உள்ளது. அதற்கு கள்ளக்குறிச்சி விஷமான கள்ளச் சாராய மரணங்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. உள்ளூர் காவல்துறைக்கு எதுவும் தெரியாமல் கள்ளச் சாராய மரணங்கள் நடந்துள்ளது எனக் கூறுவதை ஏற்க முடியவில்லை.
தமிழ்நாடு காவல்துறை கண்டும், காணாமலும் இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. காவல்துறை உயரதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்பப் பெற்றதும் தவறான நடவடிக்கை. எனவே, இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி காவல்துறையினர் உடனடியாக சிபிஐ அதிகாரிகள் வசம் ஒப்படைக்க வேண்டும். அதன்பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷமான கள்ளச்சாராயச் சாவுகள் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என சட்டம் ஊழல் தடுப்பு மற்றும் நீதித்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
கருத்துகள்