"கூவுற சேவல் ஒன்னு, கூவாத சேவல் ஒன்னு, இளம் வெள்ளாட்டு நெஞ்சுக்கறி இல்லைனா கழுத்துக்கறி,
ஆச்சி மட்டன் மசாலா 2, கருப்பன் விரும்பிச் சாப்பிடுற குவாட்டர், வடநாட்டுச் சுருட்டு ஒரு பண்டல், கருப்பனுக்கு வேட்டி சட்டை, கருப்பன் பொண்டாட்டிக்கு சேலை ஜாக்கெட், மூத்த மகனுக்கு லுங்கி சட்டை, நடுமகனுக்கு பேண்ட் சட்டை, இளைய மகனுக்கு 7 ஜாக்கி ஜட்டி, 4 பனியன், 9 ஆம் நம்பர் பேட்டா செருப்பு ஒரு ஜோடி. கடைசியா கருப்பனுக்கு குளோபல் கூலிங் கிளாஸ் ஒன்னு"....
இப்படிப்பட்ட ஒரு பட்டியலை நீட்டும் சாமியார்களும், சோதிடர்களும் வளமோடு நம்முடனே பயணம் செய்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
சமூகத்தின் அவலத்தை திரைப்படத்தில் சாட்டையடி கொண்டு இயக்குனர் அடித்திருந்தார். இச்சமூகத்தில் மூடநம்பிக்கை நிலவும் வரை இப்படிப்பட்ட சாமியார்கள் கூட பரவாயில்லை உண்மையான சாமியார்கள் மத்தியில் சமூகத்தில் சில போலியான நபர்களின் அவலத்தை சாட்டையடி கொண்டு திரைப்படம் மூலம் அடிப்பது ரசிக்க வேண்டுமானால் சரி, ஆனால் நேரில் அப்படி அல்ல யாரும் தலையிடுவதில்லை
அவர்கள் செயலை ஒழிப்பதும் அவ்வளவு எளிதல்ல, போலிச் சாமியார்களையும், வயிற்றுப் பிழைப்புக்காக வாழும் ஜோசியக்காரரையும் பார்க்கும் போது தான் உண்மையான சில நல்ல ஆன்மீக வாதிகள் மீது மக்களுக்கு மரியாதை வருகிறது இவர்கள் வாழ்க்கை வாழ்வாதாரம் அப்பாவி ஏழை எளிய மக்கள் நிலை தான் எங்கும் ஊழல், எதிலும் ஊழல், லஞ்ச லாவண்யங்கள், வரிவிதிப்புக்கள் என எல்லாம் ஈடுகொடுக்கக இயலாத மக்களின் கவலைகள் போக்கிடமாக மாறியதே இவர்கள் கூறும் ஜெகஜால வார்த்தைகள் தான் அவர்களுக்கு நம்பிக்கை, அதில் அவர்கள் அடிமையாகும் போது யார் சொல்வதும் அவர்கள் காதில் விழாது போலியான சாமியார்கள் நமக்கு மட்டுமே.
அவர்கள் பிழைப்புக்காக பொய் சொல்லி வாழ்க்கை நடத்துகிறார்கள். மேலும் தன்னைச் சுற்றி பொய்யான கூட்டத்துடன் வாழ்கின்றனர். அதை போல் கடன் தொல்லை காரணமாக எதிர் வீட்டுக் காரனோடு. ஓடிப்போய் தற்போது பெண் சாமியாராகி நானே கடவுள் அவதாரம் என்ற ஒரு பிழைப்பு வாதி குறித்த கட்டுரை இது:- நாம் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் இவர் குறித்த செய்தியை நமது இதழ் வெளியிட்டது, அப்போது இதை யாரும் ஒரு பொருட்டாகக் கருதவில்லை, ஆனால் இந்த போலிச் சாமியார் போலி ஊடக வாதிகள் மூலம் வெளிச்சம் பெறுகிறார். ஆனால் உண்மை பலரும் அறியவில்லை. உள்ளூரில் விலை போகாத அன்னபூரணியின் சரக்கு அடுத்த மாவட்டத்தில் விலையாகிறது. அன்னபூரணி, இன்று திருவண்ணாமலையில் 4 வது திருமணம் செய்து கொண்டார் அது அவரது சொந்த வாழ்வியல் ஆனால் அவர்
ஆன்மீகத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாகக் கூறுவதை முட்டாள்களைத் தவிர வேறு யாரும் இவர்கள் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நாம் இரண்டு வருடங்களுக்கு முன்பே பதிவு செய்து விட்டோம். ரோஹித் என்பவரை அன்னபூரணி நான்காவது திருமணம் செய்துள்ளார்.
ஆனால் மூன்றாம் திருமணம் செய்ததாக வெளியே பிரஸ்தாபிக்கிறார்.
நடிகை வனிதா திருமணம் செய்தார் நமது இதழ் அது குறித்துப் பேசவில்லை, காரணம் அவர் தொழில் நடிப்பு, ஆனால் இவரை நாம் பேச வேண்டிய அவசியம் இவர் ஒரு இரண்டுங் கெட்டான், கல்வியறிவு இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாத பெண், தன்னை ஒரு சக்தியான சாமியார் என மக்களை நம்ப வைக்க ஒரு போலியான கூட்டம் பின்னணி வேறு மாதிரி உள்ளது. முன்னதாக இந்த நான்காவது திருமணத்தையொட்டி, திருவண்ணாமலை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அன்னபூரணியைத் திருமணம் செய்யும் ரோகித், அவருடைய முன்னாள் மூன்றாம் கணவர் அரசு என்று ஒருவனின் புதிய பரிணாமமாம் என்று அந்த சுவரொட்டிகள் மூலம் தெரிவிக்கும் தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர் கோடீஸ்வரியானது ஒரு கதை. -விளம்பரம்- -விளம்பரம்-
இந்த கந்தல் பெண் சாமியார் அன்னபூரணி யார்? இவர் பின்னணியில் நடப்பது என்ன? சோஃபாவுக்கு அடியில் ஸ்பிரிங் வைத்துத் தைத்து விட்டால், அதன்மீது லேசாக அசைத்தாலும், சோபா குலுங்கும். ஆனால், இது தெரியாமல், அன்னபூரணியின் குலுக்கல் ஆசீர்வாதத்தை பெறுவதற்காகவே மணிக்கணக்கில் அறியாமையால் பலர் காத்துக் கிடக்கிறார்கள். இந்த அன்னபூரணியின் கடந்த கால வாழ்வியல் இது:- இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை கிராமத்தில் தற்போது அது பேரூராட்சி திரைப்பட இயக்குனர் காலஞ்சென்ற இராஜசேகர் மற்றும் பேரரசுக்கும் அதுவே சொந்த ஊர் அங்கு பழனியப்ப செட்டியார்- சீதை அம்மாள் (முதலில் வள்ளி ஆச்சி இரண்டாவது இவர்) என்பவர்களுக்கு 4 வது பெண் அன்னபூரணி இவர் ஆசிரியர் பயிற்சியை முடித்தவர். 19 வயதில் சங்கரநாராயணன் என்பவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார் அந்த வீட்டில் சம்பாதிக்கும் நபராக இருந்தவர் அன்னபூரணியின் கணவர் சங்கர நாராயணன் மட்டுமே,திடீரென சங்கர நாராயணன் மர்மமான முறையில் மரணமடைகிறார்.
இவர்களுக்கு அப்போது இரண்டு வயதில் ஒரு மகள் உண்டு அதையடுத்து, அன்னபூரணி தனியான வாழ்ந்த போது, இவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் சாமிநாதன் என்பவர் குடியிருக்கிறார். அப்போது அன்னபூரணிக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் கடன் அதிகமாக நாட்டரசன்கோட்டையில் தங்களுக்கு சிக்கல் வந்துவிடுமென்று நினைத்து எதிர் வீட்டு சுவாமிநாதனுடன் சென்னைக்குத் தப்பி வந்து விட்டார்கள்.
அப்போது . அன்னபூரணிக்கு அருள் வாக்கு சொல்வது போன்ற பிரம்மை ஏற்பட்டுள்ளது.. அருள்வாக்கு என்பதே ஏமாற்றுத்தனமாகும்.. உங்களது பலவீனத்தைத் தெரிந்து கொண்டு, உங்களிடமே வாக்குமூலம் வாங்கிக்கொண்டு, உங்களையே திருப்திப்படுத்துவது போல பேசினால், அதைத்தான் அருள் வாக்கு என்பார்கள். இதற்கு பிறகு, அன்னபூரணியின் புகழ், பெண்களிடம் விஷமாகப் பரவியது அந்தப் பகுதியில் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்ட பெண்கள் அன்னபூரணியைத் தேடிவரத் துவங்கினார்கள்.
இந்தப் பெண்களுக்கு ஆதரவாக அவரவர் கணவன்மார்களும் வரத் துவங்கிவிட்டார்கள். சுவாமிநாதன் மர்மமான முறையில் போனயிடம் தெரியவில்லை, எதிர் வீட்டில் வேறு குடும்பம் இன்டீரியர் டெக்ரேட்டர் அரசுவுடன் இணைந்து ஒரு குறி சொல்லும் நிறுவனமாக அதை மாற்ற உதவிய அரசுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது மனைவி உண்டு. பிறகு இருவரும் சேர்ந்து "இயற்கை ஒலி" என்ற அறக்கட்டளையை ஆரம்பித்தனர். பணம் லட்சக்கணக்கில் பல ரூபத்தில் வரத் துவங்கியது. மேல்மருவத்தூரைச் சேர்ந்த காலம்சென்ற அடிகளார் பங்காருவின் இளைய மகன்,
அன்னபூரணியுடன் கூட்டு வைத்தால் வருமானம் வரும் என்று நினைத்தார். பிறகு, ஒரு காவல்துறை உயர் அலுவலர் மகளை திருமணம் செய்த மாப்பிள்ளையானவர் உதவி வந்த நிலையில் "மேல்மருவத்தூர் ஆன்மீக அறக்கட்டளை" என்று அது உருவானது. ஆனால், அவருக்கும் 50 சதவீதம் பங்கு தர வேண்டியிருக்கிறதே என்பதால், அவரையும் தவிர்த்து விட்டு, சென்னைக்கு வந்துவிட்டார்கள் அங்கு தான் சொல்வதெல்லாம் (உண்மை) பொய் நடிகை லட்சுமி இராமகிருஷ்ணனிடம் சிக்கிய நிகழ்வு
அரசும் அன்னபூரணியும் மக்கள் மத்தியில் தொலைக்காட்சி மூலம் அறிமுகம் இந்த நிலையில், 3 வது கணவராகப் பணிசெய்து வந்த அரசுவும், மர்மமான முறையில் இறந்துவிட்டார். பிறகு ரோஹித் என்பவர் பாதுகாப்பாக தற்போது இருந்து வரும் நிலையில் பணத்துக்கும் பாதுகாவலனாக ரோஹித் கணவர் பணிக்கு வந்த நிலையில் தான் இவர்கள் இருவரும் திருவண்ணாமலையில் நவம்பர் மாதம் 28 ஆம் தேதி (நேற்று முன்தினம்) திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார்கள்.
காரணம், இதே நவம்பர் 28 ஆம் தேதிதான் அரசு மரணமடைந்தார் என அன்னபூரணி கூறுகிறார். எனவே, 3 வது கணவர் இறந்த அதே நாளில், தன்னுடைய பாதுகாவலரான ரோஹித்தை திருவண்ணாமலையில் நான்காவதாகத் திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார்.
எல்லா தனியார் சமூக வலைத்தளங்களில் யூடியூப் சேனல்களையும் தன்னுடைய திருமணத்துக்கு அழைத்திருக்கிறாராம். நாம் சொல்லும் இந்த தகவல்கள் எல்லாமே நிரூபிக்கப்பட்டவையே. இதனால், திருவண்ணாமலைக்கு ச்செல்ல சிலர் தயாரான போது தான், மலேசியாவில் அன்னபூரணி ஒரு வாரம் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது.
திருமணத்துக்கு முன்பே, மலேசியாவைச் சுற்றிப்பார்த்து விட்டு, தேனிலவு கொண்டாடுகிறார் பெண் சாமியார் அன்னபூரணி. எப்போதுமே, இந்த அருள்வாக்கு என்பது சிலநேரத்தில் பத்தில் ஒன்று பழுதில்லாமல் பளிக்கலாம். சில வார்த்தை வெல்லும் - சில வார்த்தைகள் கொல்லும் என்பார்கள்.
அன்னபூரணிக்கு இந்தத் திருமணம் 4 வது திருமணமாகும். முதல் திருமணத்தின் போது அவருக்கு சங்கர நாராயணன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு கணவர் மர்மமான மரணம் மற்றும் குழந்தையை விட்டுப் பிரிந்து தான் சுவாமிநாதனுடன் ஓட்டம் பிடித்தவர் அவர் மறைந்த பிறகு ஏற்கனவே திருமணம் ஆனவரான அரசுவை 3வதாக திருமணம் செய்திருந்தார். இப்போது அம்மனின் அவதாரம் எனக் கூறிக் கொள்ளும் அன்னபூரணி 4வது திருமணம் செய்துள்ளதும், .
தங்களை அம்மை - அப்பர் என்று அழைக்க வேண்டும் என்றும் அறிவித்திருப்பதும், இந்தத் தற்குறிகள் குறித்து சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. .45 வயதைத் தாண்டிய அன்னபூரணியின் பிறந்தநாளில், அன்னதானம் வழங்கியது மட்டுமே இவரது செயலில் சிறந்த நிகழ்வு ஆனால் அவரது நான் கடவுள் தரிசனம் வழிபாடு, மலர் தூவி பூஜை என எல்லாமே நடத்துவது போலியான கேலிக் கூத்து நிகழ்வு தான். ‘ஹாப்பி ஃபர்த்டே டூ யூ அம்மா அடடே அம்மம்மா.’ என்று அனைவரும் பாட, வாழ்த்தையும் அருளாசியாக அள்ளித் தருவது இந்த பெண் போலிச் சாமியார், சாமியாராக நடிக்கும் நவீன நடிகை ரம்யாகிருஷ்ணன் தான் நாட்டரசன்கோட்டை அன்னபூரணி இவர் பெயருடன் கள்ளக் காதலன் அரசு என்பவனும் அம்மாவாம்.
இதற்கு முன்னர் இவர் குறித்த செய்தியை நாம் அறிந்த வரை அன்னபூரணிக்குச் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் நாட்டரசன் கோட்டையில் தந்தை நாட்டுக்கோட்டை நகரத்தார் இனத்தில் பழனியப்ப செட்டியார் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தாயார் ஆன்டிப்பண்டாரம் சீதை குடும்பம், அருளாசி புரிந்து வரும் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான ஆலயமான அருள்மிகு கண்ணனுடைய நாயகி அம்மன் கோவில் எதிர் பகுதியில் வசித்த பழனியப்ப செட்டியார் குடும்பத்தில் நான்காவதாகப் பிறந்த கடைசி பெண். இவரது 19 வயதில் திருமணம் கணவர் பெயர் சங்கரநாராயணன்.
ஆனால் அவருக்கு இவர் இரண்டாவது மனைவியாம். சங்கரநாராயணன் மரணமடைந்தார் எதிர் வீட்டு நண்பரோடு யாரிடமும் சொல்லாமல் (ஊரைவிட்டு ஓடிப்போன) அல்லது வேலைக்காக சென்னைக்கு மாறி வந்த நிலையில், குடியிருந்த பகுதியில் அன்னபூரணிக்கு சகஜமாக சில ஆண் நண்பர்கள் உருவாகினர். இதனால் அந்த வீட்டுப் பெண்கள் பலர் எல்லா இடத்திலும் புகார் கிளப்பினராம். இவர்களின் எதிர்வீட்டுக்கு நடிகர் வடிவேலு திரைப்பட நகைச்சுவை காட்சிகளில் வரும் மாட்டு ரவி, சாரப்பாம்பு போல அடைமொழி திருமண மண்டபத்தில்
இண்டீரியர் டெக்கரேசன் வேலை பார்க்க வந்தவன் தான் அரசு. இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 19 வயதில் முதல் திருமணம் செய்து கொண்டவர் · 2009 ஆம் ஆண்டில் அரசு என்பவருடன் கள்ளக் காதல் தொடர்பு ஏற்பட்டது அதுவே மூன்றாவது திருமணம், இயற்கை ஒளி என்ற டிரஸ்ட் அல்லது அறக்கட்டளையைத் துவக்கி, அதன் மூலம் ஆன்மிகப் பயிற்சி வகுப்பு ?!நடத்துவதாகவும் மன ஆறுதல் அளிக்கிறேன், குறைகளைத் தீர்க்கிறேன்! என்று பொய் சொல்லி நம்பவைத்து குறைகள் நிறைந்த மக்களை தன்னை அலங்காரம் செய்து கொண்ட பின்னர் கவரத் துவங்கி சமூக வலைதளங்களில் தற்போதைய சென்சேஷனல் அம்மா அய்யோ அம்மம்மா, மற்றும் ஆதிபராசக்தி என்ற பல்வேறு பெயர்களால் நடிகை போல வலம் வரும் அன்னப்பூரணி.
தன்னை ஆதிபராசக்தியின் மறு அவதாரம் எனறே கூறி, நம்பவைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்ததைத் தொடர்ந்து யூ டியூப்பில் ஆன்மீகச் சொற்பொழிவென தனக்கு தெரிந்த விஷயம் கேள்விப்பட்ட விஷயம் உள் வாங்கிய நிலையில் நடத்தி வந்தார். சங்கரநாராயணன்! சுவாமிநாதன்! அரசு! செந்தில் குமார்! ரோகித்து !:
அன்னப்பூரணியின் அட்ரா சக்கை அப்டேட்ஸ் ! பலர் அதிர்ச்சியடைந்த நிலையில்
சிலரோ க்ரைம் ஸ்டோரிகளின் கதாநாயகியாவார்கள் ஆனால் அதிரிபுதிரியாக ஆன்மிக பெண் சுனாமிகளும் உருவாவதுண்டு. அப்படித்தான் கிளம்பியிருக்கிறார் அஜால் குஜால் அன்னபூரணி. இன்றைக்கு 'டாக் ஆஃப் தி தமிழ்நாடு' ஆகியிருக்கும் அன்னபூரணியின் கந்தலான அட்ரா சக்க அப்டேட்ஸ் விடுபட்ட பல விஷயங்கள் உள்ளன. -விளம்பரம்- -விளம்பரம்-
சங்கரநாராயணனின் மரணம் பின்னர் வேலைக்காக சென்னைக்கு மாறி வந்த நிலையில், குடியிருந்த பகுதியில் அன்னபூரணிக்கு சகஜமாக சில ஆண் நண்பர்கள் உருவாகினர். இதனால் அந்த வீட்டுப் பெண்கள் புகார்கள் பல உண்டு, இவர்களின் எதிர்வீட்டுக்கு இண்டீரியர் டெக்கரேஷன் வேலை பார்க்க வந்தவர் தான் அரசு. அவரோடு பழகி, நெருக்கமாகி பின் ஓவர் நெருக்கமாகியிருக்கின்றனர் இருவரும். அதாவது வீட்டுக்குள்ளே ஹக்கிங், ஜாக்கிங் பேக்கிங் என்கிற அளவுக்கு நெருக்கமாம். இது அரசுவுக்கு தெரிந்து, கன்னாபின்னாவென்று பிரச்சனையாகி இருக்கிறது. அங்கே சில பிரச்னைகள் உருவான நிலையில் அன்னபூரணியால். அதன் பின் திருமுல்லைவாயலுக்கு வீட்டை மாற்றியது இவர்களின் பயணம் சென்னை நகருக்குள் பல இடங்களுக்கு நகர்ந்திருக்கிறது. தன்னிடம் பேசுபவர்களை எளிதாக ஈர்க்கக் கூடிய பேச்சுத் திறமை, வல்லமை ஆகியவை அன்னபூரணியின் தனித்திறமை. இதைத்தான் வகையாகப் பயன்படுத்தியுள்ளார் அரசு.
சமூகத்தில் வலைத்தள வாதிகள் வழக்கம் போல, பொழுது போக்கு போல அன்னபூரணியை ஆன்லைனில் ட்ரோல் செய்யத் தொடங்கினர். அதன் மூலம் பிரபலமாகவே திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ராஜாதோப்பு பகுதியில் ஆஸ்ரமம் அமைத்து தனக்கே சிலை வைத்துக்கொண்ட அன்னபூரணி (அரசு) பொதுமக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு எனப் பல மூடர்களுக்கு உளறல்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஆடி மாதம் முன்னிட்டே அன்னபூரணி (அரசு) அம்மா?! என எதையும் யோசிக்காமல் நம்பும் மக்களில் சில பக்தர்கள் அம்மன் வடிவத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காக சூலம், கிரீடம் அணிவித்து அம்மன் வேடத்தில் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் அளித்தனர். கீழ்பென்னாத்தூர் ராஜாதோப்பு பகுதியில் ஆஸ்ரமம் அமைத்து அங்கு குடும்பம் சார்ந்த பிரச்சனை, மனப் பிரச்சினை, வாழ்வாதாரப் பிரச்சினை, திருமணதடை, குழந்தை வரம் உள்ளிட்டவை குறித்து குறி செல்லி வந்த நிலையில் ஆடி மாதம் அம்மன் வேடத்தில் ஆன்மிக சிறப்பு தரிசனமும் மேக்கப் சகிதம் நடைபெற்றது. அப்போது சில ஆண்கள், பெண்கள் பாத பூஜை வரை செய்து கால் தொட்டு வணங்கிச் சூடம் ஏற்றி வழிபட்டனர். இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு அவர் ஆசி பெற்றனர்.. இதில் நாம் சொல்லும் பொது நீதி யாதெனில் :- "இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார். சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார். பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டிப் பாமர மனுஷனை வலையினில் மாட்டி... இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே..!
கருத்துகள்