முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரேமானந்தா அறக்கட்டளையின் சொத்துக்கள் சஃபேமா சட்டத்தின் நோட்டீஸ் செல்லும் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

பிரேமானந்தா ஆஸ்ரம அறக்கட்டளையின் சொத்துக்கள்

சம்பந்தமான சஃபேமா சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது இலங்கையில் ஆசிரமம் நடத்தி வந்த பிரேமானந்தா, அங்கு நடந்த உள்நாட்டு சண்டைக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அகதியாக 1984-ஆம் ஆண்டு வந்து,


புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை பகுதியில் 65 ஏக்கர் பரப்பளவில் சீடர்கள் குழந்தைகள் சகிதமாக ஆசிரமம் அமைத்து செயல்பட்டார். 1994-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டில் வருமான வரித்துறை அலுவலர்கள் ஆசிரமத்தில் சோதனை நடத்தி பல முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றினர்.



அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் ரூபாய். 76 லட்சத்துக்கு நிரந்தர வைப்பீடு வைத்துள்ளதாகவும், ரூபாய்.15 லட்சம் மதி்ப்பில் அந்நியச் செலாவணியாக கரன்சி நோட்டுகள் வைத்திருந்ததாகவும், ஹவாலா பரிவர்த்தனை உள்ளிட்ட ஏனைய முதலீடுகள் குறித்தும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.அதையடுத்து அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி



அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு விசாரி்த்த எழும்பூர் நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்தது. இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றம் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குக்காக அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும்



விதித்த நிலையில் 2005-ஆம் ஆண்டு சஃபேமா எனும் கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடியாளர்களின் சொத்துக்களை முடக்கம் செய்ய வழிவகை செய்யும்The Smugglers and Foreign Exchange Manipulators (Forfeiture of Property) Act, 1976 (SAFEMA)  சட்டத்தின் படி பிரேமானந்தா ஆஸ்ரம அறக்கட்டளையின் சொத்துக்களை முடக்கம் செய்வதற்காக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து பிரேமானந்தா ஆஸ்ரம அறக்கட்டளை சார்பில் 2007-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் இடைக்கால உத்தரவு பிறப்பி்க்கப்பட்டு 17 ஆண்டுகளாக நிலுவையிலிருந்து



வந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது பிரேமானந்தா ஆஸ்ரம அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், “கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பிரேமானந்தா 2011-ஆம் ஆண்டு கடலூர் மத்திய சிறையில் இறந்துவிட்ட நிலையில் அவரது அறக்கட்டளைக்கு எதிராக சஃபேமா சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விதிமுறைகளுக்குப் புறம்பாக உள்ளது.



நோட்டீஸ் சரியான நபர்களுக்கு அனுப்பப்படவில்லை” என வாதிட்டார். மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “இந்த வழக்கில் கடந்த 2006-ஆம் ஆண்டே அறக்கட்டளை தரப்பினர் நேரில் ஆஜராகி ஆட்சேபம் தெரிவித்து, விசாரணையிலும் பங்கெடுத்துள்ளனர்.


அதன்பிறகு ஓராண்டு கழித்து 2007-ஆம் ஆண்டு இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர். சஃபேமா சட்டத்தின் கீழ் இந்த நோட்டீஸ் சட்ட விதிகளைப் பின்பற்றி முறையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.


மத்திய அரசின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், ஏற்கெனவே நடந்த விசாரணையில் அறக்கட்டளை தரப்பு பங்கெடுத்துள்ள நிலையில்,  இந்த நோட்டீஸை ரத்து செய்ய முடியாது. சட்ட ரீதியாகவே நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். எனவே இது தொடர்பான விசாரணையில் முறையாகப் பங்கெடுக்க வேண்டும், என அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு உத்தரவி்ட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மோகன் என்பவர் சட்டவிரோதமான பணத்தில் தங்கம் வாங்கியுள்ளார். பத்மா என்பவர் பல இடங்களில் சொத்துக்களை வாங்கியுள்ளார். அது குறித்து விசாரணை செய்ய வேண்டும். சட்ட விரோதமாக சொத்துக்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக கருதினால் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பலாம். சொத்துக்கள் அறக்கட்டளையின் கீழ் சேர்க்கப்பட்டிருப்பதால்,




தான் அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விளக்கம் கேட்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும்" என தெரிவித்தார். சொத்துக்களை வாங்கியவர்கள் உயிரிழந்தாலும், அது எப்படி வாங்கப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அது சட்டவிரோதமானதாக இருந்தால் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. சந்தேகமிருப்பதாக அமலாக்கத்துறை கருதினால், விளக்கம் கேட்பதில் என்ன தவறு உள்ளது? அறக்கட்டளையின் விளக்கத்தை ஏற்க உரிய காரணமில்லை" எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...