இந்தியாவில் விற்பனை செய்யும் நெஸ்லே செரிலாக் குழந்தை உணவில் சர்க்கரை அளவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்
பன்னாட்டு உணவுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை
நிறுவனமான நெஸ்லே தயாரிக்கும் குழந்தைகளுக்கான பால்+தானிய அடிப்படையிலான நிரப்பு உணவான செரெலாக்கில் உள்ள சர்க்கரை உள்ளடக்கம் குறித்து திடுக்கிடும் கண்டுபிடிப்புகள் தற்போது வெளிவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கடுமையான வழிகாட்டுதல்கள் குழந்தை உணவுப் பொருட்களில் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளைத் தடை செய்தாலும், Cerelac
இந்தியாவில் நடக்கும் விற்பனையில் சராசரியாக 3 கிராம் சர்க்கரையைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தை ஸ்தலமாகக் கொண்ட சர்வதேச குழந்தைகள் உணவு நடவடிக்கை நெட்வொர்க்குடன் (IBFAN) பொது ஜனங்களுக்கு, தானிய தயாரிப்புகளை சோதிப்பதற்காக பெல்ஜியத்திலுள்ள ஆய்வகத்தை அணுகியது. நெஸ்லேவை தலைமையிடமாகக் கொண்ட சுவிட்சர்லாந்திலுள்ள ஆய்வகங்கள் அவர்களின் கோரிக்கையை நிராகரித்தன.
பரிசோதிக்கப்பட்ட 15 இந்திய செரிலாக் தயாரிப்புகளில், ஆய்வகப் பகுப்பாய்வுகளில், தானியத்தின் ஒவ்வொரு விற்பனை பொருட்களிலும் 2.7 கிராம் அளவுக்கு மேல் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. நெஸ்லேவின் லேபிளிங் ஊட்டச்சத்துக்களை முன்னிலைப்படுத்தினாலும், சேர்க்கப்பட்ட சர்க்கரை வெளிப்படையாகக் காட்டப்படுவதில்லை.ஆராய்ச்சியாளர்கள் ஒரு அசாதாரண இரட்டைத் தரத்தை அம்பலப்படுத்தினர், அங்கு நிறுவனம் ஏழை நாடுகளில் உலக சுகாதார நிறுவனம் (WHO) வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை, ஆனால் அதிக வருமானம் கொண்ட நாடுகளுக்கு ஆதரவாகவே இருந்தது. "ஜெர்மனி மற்றும் யுனைடெட் கிங்டமில் நெஸ்லே விற்கும் ஆறு மாத குழந்தைகளுக்கான செரிலாக் கோதுமை அடிப்படையிலான தானியங்களில் கூடுதல் சர்க்கரை இல்லை, அதே தயாரிப்பில் எத்தியோப்பியாவில் ஒரு விற்பனைப் பொருள் 5 கிராம் மற்றும் தாய்லாந்தில் 6 கிராம் உள்ளது "இதேபோல், சுவிட்சர்லாந்தில், நெஸ்லே தனது பிஸ்கட்-சுவை கொண்ட தானியங்களை
"சேர்க்கப்பட்ட சர்க்கரை இல்லை" என்ற கூற்றுடன் ஆறு மாத குழந்தைகளுக்காக விற்பனை அதிகரிக்கும் செயலில் விளம்பரப்படுத்துகிறது, அதே நேரத்தில் செனகல் மற்றும் தென்னாப்பிரிக்காவில், ஒரு விற்பனைப் பொருளில் 6 கிராம் கூடுதல்
சர்க்கரை உள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 70 மில்லியன் பெரியவர்கள் உடல் பருமனுடன் வாழ்ந்து வருகின்றனர், ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை முறையே 44 மில்லியன் மற்றும் 26 மில்லியன் என இரு மடங்குப் பெண்களுடன், சமீபத்திய உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 11 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் நீரிழிவு நோயாளிகள் மற்றும் 35.5 சதவீதம் பேர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பொதுவான உடல் பருமனின் பாதிப்பு 28.6 சதவீதமாக இருந்தாலும், வயிற்றுப் பருமன் 39.5 சதவீதமாக உள்ளது, ஜூன் மாதம் 8 ஆம் தேதி, 2023 அன்று தி லான்செட் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தின.தரநிலைகளின் படி, குழந்தை உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரை, உற்பத்தியைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை அனுமதிக்கப்படுகிறது. குழந்தை தானியங்களுக்கு, 20 சதவீதம் வரை அனுமதிக்கப்படுகிறது.
குழந்தை உணவுகளுக்கான கோடெக்ஸ் தரநிலைகளுடன் உலக சுகாதார நிறுவனம் (WHO) உடன்படவில்லை, குறிப்பாக சர்க்கரைகள் சேர்ப்பதைத் தடை செய்வதன் மூலம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து நடப்பு குளிர்கால கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசுகையில் இந்தியாவில், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவாக விற்கப்படும் நெஸ்லே செர்லாக்கின் ஒரு கரண்டி மாவில், 2.7 கிராம் சர்க்கரை இருப்பதாகவும், அதுவே இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் சர்க்கரை சேர்க்கப்படாமல் விற்கப்படுவதாகவும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
குழந்தைகளுக்கு இளவயதில் உடல்பருமன் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுக்கு உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை வழிகோலும் என்பதால், இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் உணவில் சர்க்கரை சேர்க்கக்கூடாது என்ற உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலை நெஸ்லே நிறுவனம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, இதுபோன்று குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உலகளாவிய சுகாதாரப் பரிந்துரைகளுக்கு இணங்க, குழந்தைகள் உணவுத் தயாரிப்பிற்கான தரநிலையை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். "நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" என வள்ளுவம் சொன்னது இதற்கான உபதேசம் அதனால் தான் சுவிட்சர்லாந்து முறையாகக் கையாள்கிறது. நம் நாட்டில் சர்க்கரையை நாம் அளவுக்கு மேல் நுகர்கின்றோம் நமது நாட்டில் 60 சதவீத நபர்கள் உடம்பில் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியாத
அளவு உள்ளது. எனத் தெரிவித்தார் ஆனால் நம் மக்கள் முன் உள்ள சந்தேகம் இதுக்குப் பதிலாக நீங்கள் தாய்மார்களிடம் யாரும் நெஸ்லேவை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள் எனச் சொல்லியிருக்கலாமே, இது இந்திய மக்கள் நல் வாழ்வின் மீது தொடுக்கப்பபட்டுள்ள போராகவே தோன்றுவதால்
சர்க்கரை நோய், உடல் பருமன் பிரச்னை உண்டாக்கி அதை சரி செய்யும் மருத்துவ மாஃபியாக்கள் மருந்துகள் விற்பனை செய்வதற்கு போட்ட திட்டமா
என அச்சம் மக்கள் மத்தியில் உள்ளதால் அதை மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வு செய்வதற்கு நடவடிக்கை தேவை என்ற நிலையில் உள்ளது என்பதே உண்மை.
கருத்துகள்