முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளையராஜா தவறுதலாக மிதித்த குலசேகரப் படி ஆகம விதி மீறலானதை சுட்டிக் காட்டிய ஜீயர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திவ்ய பாசுரம் இசைக்கச்சேரியில் பங்கேற்ற இளையராஜா அங்குள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோவிலில் வழிபாடு நடத்தினார்.


அங்கு ஆடிப்பூர விழாப் பந்தலில் நடைபெற்ற விழாவில் இளையராஜா இசையமைத்துப் பாடிய திவ்ய பாசுரம் இசைக்கச்சேரியும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றதில் பங்கேறப்பதற்காக வந்திருந்த இளையராஜா ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனத்திற்காகச் சென்றார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.  கருவறை முன்புள்ள அர்த்த மண்டபத்தின் குலசேகரப் படி மீது தெரியாமல் ஏறி நிற்கிறார்  பாரதிய ஜனதா கட்சியின்  நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ள இசையமைப்பாளர் இளையராஜா 108 திவ்ய தேசங்களான வைணவக் கோவில்களில் அர்த்த மண்டபத்தின் படியாக 13 ஆழ்வார்களின் ஒருவரான குலசேகர ஆழ்வாரே இருப்பதால் அந்தப் படி "குலசேகரப் படி" என்றே அழைக்கப்படுகிறது. 
குலசேகரப்படியை
திருமலை ஆண்டவன் சன்னிதி உள்ளிட்ட 108 ஆலயங்களில் ஆண்டவனின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டுமென்றும், அதற்காக தன்னை அவர் கோவில் வாசற்படியாகவே வைத்துக் கொள்ளவேண்டுமென்றும் அரசர் குலசேகரர் எனும் குலசேகர ஆழ்வார் மனமுருக வேண்டிப் பாடிய பாசுரம்:

"செடியாய் வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே".
இதனால் இன்றும் வெங்கடேசப் பெருமாளின் வாசற்படிக்கு குலசேகரப்படி என்ற பெயர் வழங்குகிறது.


இவர் திருவேங்கடவனிடம் இவ்வாறு வேண்டி நின்றாலும் ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்ற காரணத்தால் ஸ்ரீரங்கநாதன் கோயிலிலும் கர்ப்பகிருகம் முன்னிருக்கும் படி குலசேகரன் படி என்று அழைக்கப்படுவதைப் பார்க்கலாம்.

அந்தக் குலசேகரப் படி மீது ஏறி நிற்க வேண்டாம் என்று ஜீயர் ஸ்வாமிகள் ஹைதராபாத்தை சேர்ந்த ஜீயர்கள் ஆண்டாள் கோயிலிலுள்ள மணவாளன் மாமுனிவர் மடத்தின் சடகோபர் ராஜனுஜர் ஜீயரும் பங்கேற்றார். இளையராஜாவிடம் ஆகம விதிப்படி அறிவுறுத்த இளையராஜா அறியாமல் செய்த தவறை உணர்ந்து பின் வாங்குகிறார் இதுவே உண்மை நிலை,                    தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கோம்பை-பண்னைப்புரம், கரியமனம்பட்டி  இராஜய்யா எனும் இளையராஜா  கருவறைக்குள் நுழையவும் இல்லை! 

அதே சமயம் கோவில் அர்ச்சகர்கள் இசைஞானியாக இன்று அழைக்கப்படும் இளையராஜாவுக்கு  பரிவட்டம் கட்டி ஆண்டாள் தாயார் மற்றும் ஸ்ரீ ரங்கமன்னாரின் மாலையையும் பிரஸாதமாகக் கொடுத்து உரிய மரியாதை அளிக்கத் தான் செய்தார்கள்!  

ஆனால் ஊடகங்களால் இதை சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதே, இதை எப்படி மடைமாற்றுகிறார்கள்.      இதில் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்கள் கூட இதை பெரிதாக பேசுகிறார்கள் இந்த ஆலயங்களில் மன்னர்கள் வந்தாலும் அதை நிலை தான் 


இளையராஜா வேதனையோடு கவலைப்பட்டு கண்ணீர் மல்க, தான் செய்யமுனைந்தது தன்னையறியாமல் செய்தபிழை என வருந்தி தழுதழுக்கும் போது. அவருக்காக இங்கே பலர் முகநூலில் கூட குற்றம் சாட்டுகிறார்கள். இது புதுக்கோட்டை மாவட்டம். வேங்கைவயலில் நடந்த அக்கிரமத்தைக் கண்டித்தவர்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.



அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கே அதிபரானாலும் வாடிகனில் போப்பாண்டவர் ஆசனத்தில் அமரமுடியுமா? அதுபோலவே இதுவும் என் பலரும் வினா எழுப்பும் நிலையில், இப்போது இப்படி நவீன கால பொது வெளியில் வேலை இல்லாத. ஒருவன் 'பூனையைப் பிடித்து சானை பிடித்த கதை' போல ஆகிவிட்டது சமூக நிலை. பக்தி மார்க்கத்தில் ஆகம விதிப்படி தான் அணைத்து நடைமுறைகளும். இசைஞானியாகப் பார்க்கப்படும் இளையராஜா சாமி கும்பிட மட்டும் தானே வந்தார்; பூஜை செய்ய அல்லவே!. இதுவே பொது நீதி. "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.     


              "
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்" இதை அழகான தமிழில் "கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்; கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்".. என வரலாறு கூறும்  "ஸ்ரீவில்லிபுத்தூர்     வடபத்ரசாயி (ரெங்கமன்னார்) ஆண்டாள் திருக்கோயில்" பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த. திருத்தலம்.108 திவ்ய தேசங்களில் ஒன்று.வில்லி என்ற மன்னன் ஆண்டதால். வில்லிபுத்தூர் என்றும், மஹாலக்ஷ்மி அவதாரம் ஆண்டாள் பிறந்த ஊராதலால், 'ஸ்ரீ'எனும் திருநாமத்தோடு ஸ்ரீவில்லிபுத்தூர் அழைக்கப்படுகிறது.  இதன் சிறப்பம்சம் 192 அடி உயர இராஜகோபுரம் (இது தமிழ்நாடு அரசு முத்திரையில் அலங்கரிக்கும்) பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டில். நிறுவப்பட்டது. இக் கோபுரத்தைப் பற்றி கவிச்சக்கரவர்த்தி கம்பர்,   ”திருக்கோபுரத்துக்கு இணை அம்பொன் மேரு சிகரம்'' என,அழகான பொன்னிறமுடைய மேருமலை சிகரத்திற்கு ஒப்பாகப் பாடியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் முகுந்தபட்டர், பத்மவல்லி. தம்பதியர் வசித்து வந்தனர். இவர்கள் தங்கள் ஊரிலுள்ள வடபத்ரசாயி கோவிலில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு கருடாழ்வாரின் அம்சமாக, ஐந்தாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு,“விஷ்ணு சித்தர்’ எனப் பெயரிட்டனர்.இவரும் பெருமாள் மீது தீராத பக்தி கொண்டிருந்தார்.

பெருமாளின் துணைவியான பூமாதேவி, இவருக்கு வளர்ப்பு மகளாக ஐந்து வயதுக் குழந்தையாக துளசித்தோட்டம் ஒன்றில் ஆடி மாத பூரம் நட்சத்திரநாளன்று     அவதரித்தாள். அவளுக்கு, “கோதை’'என்று பெயர். சூட்டப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் மூலவரான வடபத்ரசாயிக்கு, விஷ்ணுசித்தர் தினமும் மாலை கட்டி சூட்டுவார். அந்தப் பெருமாள் மீது ஆண்டாள். காதல் கொண்டாள். தன்னை அவரது மனைவியாகவே கருதி, அவருக்கு சூட்டும் மாலையை தன் கழுத்தில் போட்டு, அழகு பார்த்து, அனுப்பி விடுவாள்.இதையறியாத விஷ்ணு சித்தர், பெருமாளுக்கு அதை அணிவித்து வந்தார்.ஒருநாள், கூந்தல் முடி. ஒன்று மாலையில் இருக்கவே, அதிர்ந்து போன ஆழ்வார்,அது எவ்வாறு வந்தது என நோட்டமிட ஆரம்பித்தார். தன் மகளே அதைச்சூட்டி அனுப்புகிறாள் என்பதை அறிந்து, மகளைக் கடிந்து கொண்டார்.  மறுநாள் மாலையைக் கொண்டு சென்ற போது, அதை ஏற்க பெருமாள் மறுத்துவிட்டார்.“கோதை சூடியதையே நான் சூடுவேன். மலரால் மட்டுமல்ல,மனதாலும் என்னை ஆண்டாள் உம் பெண்…’ என்று குரல் எழுந்தது. அன்று. முதல் கோதைக்கு, “ஆண்டாள்’ எனும் திருநாமம் ஏற்பட்டது. ஆண்டாள்

`சூடிக்கொடுத்த சுடர் கொடியாள்' ஆனாள்.ஒருநாள் பெரியாழ்வார் கனவில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் தோன்றி, "உனது மகளை ஸ்ரீரங்கம் அழைத்து வா.அங்கே யாம் அவளை மணந்து கொள்வோம்'' என்றார். அதன்படி ஆண்டாளை பல்லக்கில் அமர வைத்து. ஸ்ரீரங்கம் அழைத்து சென்றனர்.ஸ்ரீரங்கத்தின் எல்லையை அடைந்தபோது திடீரென்றுஆண்டாள் மாயமாகிவிட்டார். பெரியாழ்வார் அதிர்ச்சி அடைந்து பெருமாளை நோக்கி வேண்டினார். அப்போது ஆண்டாளுடன் பெருமாள் காட்சி கொடுத்தார்."உமது மகள் இலட்சுமியின் அம்சம். அவளையாம் ஏற்றுக் கொண்டோம்'' என்றார். ஆனால் அதை பெரியாழ்வார் ஏற்றுக்கொள்ளவில்லை. "தாங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து முறைப்படி என் மகளை மணந்து செல்ல வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார். அதன்படி பங்குனி உத்திர நட்சத்திரத்தில்  ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாளை மணந்தார் பெருமாள்.             "தையொரு திங்களும் தரைவிளக்கித்

தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்

ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து

அழகினுக் கலங்கரித் தனங்கதேவா

உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி

உன்னையு மும்பியையும் தொழுதேன்

வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை

வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே". -ஆண்டாள், நாச்சியார் திருமொழி, முதல் திருமொழி, முதல் பாசுரம்.  இதில் பொது நீதி யாதெனில்: வழிபாடு நடத்திவிட்டு வந்தவர் அமைதியாக உள்ளார்


ஆனால் சில ஊடகங்களும் தெய்வமறுப்புக் கொள்கை உள்ளவர்கள் இதில் பிரச்சினைகள் வராதா என நெருப்பைப் பற்ற வைத்து ஊதுகிறார்கள் வேறில்லை. அதே இளையராஜா இந்த அளவு வளர உதவிய பஞ்சு அருணாசலம் மற்றும் தூயவன் மீண்டு வந்தாலும் ஆன்மீக ஆகம விதிகளை இங்கு மீற முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...