அரசு ஊழியர்களின் சொத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட விபரமல்ல, பொதுமக்கள் கேட்டால் மறுக்காமல் தகவல் தரவேண்டும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.
அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நீர்வளத்துறையில் உதவிப் பொறியாளராகப் பணி யாற்றிய காளிப்பிரியனின்
சொத்துக்கள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் தகவல் உரிமைச் சட்டம் 2005 ன் படி உரிய பொதுத் தகவல் அலுவலருக்கு விண்ணப்பம் செய்தார் 30 நாட்களுக்குள் பதில் தரவேண்டிய அலுவலர் தரவில்லை
அதனால் உரிய முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு 45 நாட்களுக்குள் விண்ணப்பம் செய்தார் அதற்கும் பதில் வழங்காமல் இருக்கவே மாநிலத்தின் தகவல் ஆணையத்திற்கு இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்த நிலையில்
ஆனால், இந்ததகவல்கள் அரசுஊழியரின்தனிப்பட்ட விவரங்கள் எனவும், அவை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி விலக்களிக்கப்பட்டவை எனவும் கூறி, தகவல்கள் வழங்க மறுப்பு தெரிவிக் கப்பட்டது.
அது தொடர்பான உத்தரவை எதிர்த்து சீனிவாசன், தகவல் ஆணையத்தை சேர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். திருமூர்த்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 8 வது பிரிவின் கீழ் ராணுவம் உள்ளிட்ட சில தனிப்பட்ட தகவல்கள் வழங்க மட்டுமே விலக்களிக்கப்பட்டுள்ளது என்றும்,
அரசுப் பணி சார்ந்த நபர்கள் குறித்த தகவல்களை வழங்கலாம் எனவும், அரசு ஊழியர்கள் பற்றிய தக வல்களை அறிந்து கொள் வது ஜனநாயக நாட்டில் மக்களின் அடிப்படை உரிமை எனவும் வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு ஊழியர்களின் செய்யும் பணியை பாதிக்கச் செய்யும் தகவல்கள் பாதுகாக்கப்பட் டவை தான் என்ற போதிலும், அரசு ஊழியர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும், அவை பொதுமக்கள் பரிசீலனையில் இருந்து பாதுகாக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்தவிவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல எனக் கூறிய நீதிபதி தகவல்கள் வழங்க மறுத்த மாநிலத்தின் தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த விவகாரத்தை மீண்டும் மாநிலத் தகவல் ஆணையத்துக்கு அனுப்பிய நீதிபதி, சட்டப்படி மீண்டும் பரிசீலித்து இரண்டு மாதங்களில் முடித்து வைக்கும் படி உத்தரவிட்டார். Assets And Liabilities Of Public Servants Not Private; Service Register Cannot Be Completely Exempted U/S. 8 RTI Act, ஆனால்
இதுபோல் IOB வங்கி மற்றும் CBI -ACB மீது மதுரை மனுதாரர் சார்பில் அதன் PIO மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் மீது வழக்குத் தொடர்ந்து
பதில் பெறவேண்டிய நிலையில் மற்றொரு மனு நிலுவையில் உள்ளது In Madras High Court WP 33854/2024 in the case of C. Srinivasan The same order applies in the other cause Cover to the order என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்