நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் குகேஷின் சாதனையை பாராட்டி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்
உலக சாதனையை உரிய முறையில் கௌரவிக்க வேண்டும் எனக் கோரிக்கை உலக செஸ் ஜாம்பியன் குகேஷ் பரிசுத்தொகைக்கு வரிவிலக்கு காரணமாக தப்பும் ரூபாய் நான்கு கோடி - சட்ட வழி அனுமதி கிடைக்கும். இந்தத் தொடரின் மொத்தப் பரிசுத்தொகை ரூபாய்.21 கோடி
வருமான வரித் துறை சட்டப் பிரிவு 10(17A) ன் படி உள்ள விலக்கு பொருந்தாது
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடந்து முடிந்ததில் இந்தியா சார்பில் பங்கேற்ற இந்திய வீரர் குகேஷ் சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி ஜாம்பியன் பட்டத்தை பெற்றதன்மூலம் 18 வயதில் உலக ஜாம்பியன் இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.
இந்த உலக செஸ் ஜாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ் சுமார் ரூபாய். 11 கோடி பரிசுத் தொகையை வென்றுள்ளார். அதாவது இந்தத் தொடரின் மொத்தப் பரிசுத்தொகை ரூபாய்.21 கோடி.
போட்டியின் விதிமுறைப்படி 13 சுற்றுகளில் யார் முதலில் 6.5 புள்ளிகளைப் பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாகக் கருதப்படுவார்கள். விதிமுறைகளின்படி, ஒவ்வொரு வெற்றிக்கும் அந்த வீரருக்கு சுமார் ரூபாய்.1.68 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை இருவருக்கும் சரிசமமாகப் பிரித்து வழங்கப்படும்.அந்த வகையில், குகேஷ் மொத்தம் மூன்று வெற்றிகளைப் பெற்று இருந்த நிலையில் அவருக்கு ரூபாய்.5.04 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. டிங் லிரன் இரண்டு வெற்றிகளைப் பெற்ற நிலையில்,
அவருக்கு ரூபாய். 3.36 கோடி கிடைத்தது. மீதமுள்ள பரிசுத் தொகை இருவருக்கும் இடையே சரி சமமாகப் பிரித்துத் தரப்பட்டதன் மூலம் குகேஷ் இந்த உலக செஸ் ஜாம்பியன்ஷிப் போட்டி மூலமாக ரூபாய். 11.34 கோடியைப் பரிசுத் தொகையாகப் பெற்றுள்ளார். இந்த முழுத் தொகை குகேஷுக்கு அப்படியே போகாதென்றும் வரி பிடித்தம் செய்யப்படுமென்றும் கூறப்பட்டது.
வருமான வரிச் சட்டம், 1961 ன் பிரிவு 10(17A) ன் படி, மத்திய அரசு, மாநில அரசு வழங்கியிருந்தால், பொது நலன் கருதி விருது அல்லது வெகுமதியாக, பணமாகவோ அல்லது பொருளாகவோ வழங்கப்படுவதற்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இருப்பினும், குகேஷுக்கு வழங்கப்பட்ட விருதை சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) வழங்கியுள்ளது, இது செஸ் விளையாட்டிற்கான உலகளாவிய நிர்வாக அமைப்பாகும், இது இந்திய மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக தகுதி பெறவில்லை.
எனவே, பிரிவு 10(17A) ன் கீழ் உள்ள விலக்கு பொருந்தாது, ஏனெனில் இந்த ஏற்பாட்டின் பயன் இந்திய அரசு அதிகாரிகள் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் விருதுகளுக்கு மட்டுமே. இந்த நிலையில், குகேஷ் பரிசுத் தொகையான ரூபாய்.11 கோடியில் ரூபாய்.4 கோடியை வரியாக செலுத்துகிறார் என்று தகவல் பரவியது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சுதா கடிதம் எழுதினார். மேலும் சில அரசியல் தலைவர்களும் இணைய வாசிகளும் இதுகுறித்து கவலை தெரிவித்த நிலையில் குகேஷின் பரிசுத்தொகையில் ரூபாய். 4 கோடி வரி பிடித்தம் செய்யாமல் விலக்கு அளிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்.
இதுதொடர்பாக பேசிய நிதியமைச்சக அலுவலர் ஒருவர், நாட்டிற்கு குகேஷ் கொண்டு வந்த மகத்தான பெருமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
அவரது வெற்றிகளுக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிப்பது மிகவும் பொருத்தமானது, மேலும் அவர் தனது எதிர்காலத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தவும், அவரது திறனை மேம்படுத்தவும் அது அனுமதிக்கும் என்க் கூறியுள்ளார்.
கருத்துகள்