இலஞ்சம் வாங்கிய புகாரில் மதுரை மத்திய GST துணை ஆணையர் சரவணகுமார் உள்ளிட்ட 3 அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
வரிப் பாக்கியைக் குறைப்பதற்காக லஞ்சம் பெற்றபோது கையுடன் சிக்கியுள்ளனர்.நாடெங்கும், மத்திய மாநில அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் புரையோடிப் போன நிலையில் யாரும் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அலுவலர்களே, லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடுகளைச் செய்யும் அவலம் ஆங்காங்கே நடந்து வருகிறது.
2023 ஆம் ஆண்டு மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றிய அலுவலர் அங்கித் திவாரி, திண்டுக்கல் அரசுப் பணி மருத்துவரிடம் லஞ்சம் பெற்றபோது கையுடன் சிக்கினார். அமலாக்கத்துறை அலுவலரே லஞ்சம் வாங்கியதாக வந்த செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மதுரையில் GST அலுவலர்கள் லஞ்சம் பெற்ற போது சிக்கிய நிகழ்வு பரபரப்பாகியுள்ளது.
கருத்துகள்