ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, ரூபாய்.5 லட்சம் லஞ்ச பணம் பேரம் நடத்தி, ரூபாய் பத்தாயிரம் முன்பணமாக வாங்கிய வட்டாட்சியர் கைது
சேலம் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, ரூபாய்.5 லட்சம் லஞ்ச பணம் பேரம் நடத்தி, ரூபாய் பத்தாயிரம்
முன்பணமாக வாங்கிய வட்டாட்சியரை சேலம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மஞ்சுளா நில அளவீடு செய்து நீரோடை நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக , கெங்கவல்லி வட்டாட்சியர் பாலகிருஷ்ணனிடம் அணுகியபோது, நீரோடை நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, வட்டாட்சியர் ரூபாய்.5 லட்சம் லஞ்சம் தரவேண்டும் எனக் கேட்டுள்ளார். முன்பணமாக தை அமாவாசை அன்று ஜனவரி மாதம்.29 ஆம் தேதி பத்தாயிரம் ரூபாய் முன்பணம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மஞ்சுளா, இது குறித்து சேலம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ருபாய் பத்தாயிரத்தை முன்பணமாக பினாப்தலின் தடவிய நிலையில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணனிடம் மஞ்சுளா கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் லஞ்ச பணத்துடன் வட்டாட்சியரை பணம் பெற்ற கையுடன் பிடித்தனர் கைது செய்யப்பட்டவரிடம் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்