இந்திய அரசு பணியாளர்களுக்கு 8 ஆவது ஊதியக் குழுவை அரசு அறிவித்துள்ளது.
இந்திய அரசு பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அலவன்ஸ்களைத் திருத்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி மாதம் 16 ஆம் தேதி, 2025 வியாழக்கிழமை அனைத்து இந்திய அரசு ஊழியர்களுக்கும் 8 ஆவது மத்திய ஊதியக் குழுவுக்கு ஒப்புதல் அளித்தார். 8-ஆவது ஊதியக் குழுவை அமைக்கும் முடிவை பிரதமர் நரேந்திர மோடி எடுத்ததாக மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அலவன்ஸ்களை திருத்துவதற்காக இது அமைக்கப்பட்டுள்ளது.
ஏழாவது ஊதியக் குழு 2014 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது, அதன் பரிந்துரைகள் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி, 2016 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டதன் பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டில் முடிவடையும். "மத்திய அரசு ஊழியர்களுக்கான 8 வது மத்திய ஊதியக் குழுவிற்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்" என. அமைச்சர் வைஷ்ணவ் கூறினார். ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்களெனத் தெரிவித்தார்.
49 லட்சம் இந்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் புதிய ஊதியக் குழுவை அமைப்பதன் மூலம், ஏழாவது ஊதியக் குழுவின் பதவிக்காலம் முடிவதற்குள் அதன் பரிந்துரைகள் நன்கு பெறப்படுவதை உறுதி செய்யும். மத்திய, மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.
1947 ஆம் ஆண்டு முதல், அரசாங்கம் ஏழு ஊதியக் கமிஷன்களை அமைத்தது. அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளக் கட்டமைப்புகள், சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளை தீர்மானிப்பதில் சம்பளக் கமிஷன் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரும்பாலான அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் ஆணையத்தின் பரிந்துரைகளைப் பின்பற்றுகின்றன.
கருத்துகள்