காதலித்த பெண்ணை ரயில் முன் தள்ளிக்கொன்றவனுக்கு மரண தண்டனை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பெற்றோர் எதிர்ப்பு காரணமாக, காதலைக் கைவிட்ட காதலியை ரயில் முன் தள்ளிக் கொலை செய்த சதீஷுக்கு என்பவனுக்கு மரண தண்டனை விதித்து, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை ஆலந்துார் காவல்துறை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் மாணிக்கம். இவர் கார் வைத்து வாடகைக்கு ஓட்டிப்பிழைத்து வந்தார். அவர் மனைவி இராமலட்சுமி: ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்தவர்களது மூத்த மகள் சத்யா, (வயது 20); தியாகராயநகரிலுள்ள தனியார் கல்லுாரியில், பி.சி.ஏ., மூன்றாமாண்டு படித்து வந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை சார்பு ஆய்வாளர், தயாளன் மகன் சதீஷ், (வயது31), என்பவரை காதலித்துள்ளார்.
டிப்ளமோ படித்த சதீஷ். எந்த வேலையும் செய்யாமல் ஊர் சுற்றியுள்ளார். அதன் காரணமாக, சதீஷை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என, சத்யாவை அவரது பெற்றோர் கண்டித்ததையடுத்து, சதீஷ் உடனான காதலை சத்யா கைவிட்டார்.
அதில் மனமுடைந்த சதீஷ், சத்யாவிடம் தன் காதலை ஏற்க போராடி முடியாத நிலையில், 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்., 13 ஆம் தேதியில் கல்லூரி செல்ல. பரங்கிமலை இரயில் நிலையத்தில் முதல் பிளாட்பார்மில் காத்திருந்த சத்யாவை சந்தித்தபோது காதலை ஏற்குமாறு அவரிடம் கூறவே பெற்றோர் அறி வுரையை மீற முடியாது என சத்யா சொன்னதும் ஆத்திரமடைந்த சதீஷ். அவ்வழியே வந்த ரயில் முன் சத்யாவை தள்ளி விட்டதில், படுகாயமடைந்த சத்யா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதையறிந்ததும், தாங்காமல் அன் று தினம், மாண வியின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மகள் கொலையான சில மணி நேரத்தில் தந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்திய
இந்தச் சம்பவம் தொடர்பாசு, கொலை வழக்குப் பதிவு செய்த மாம்பலம் ரயில்வே காவல்துறை சதீஷை கைது செய்தனர்.
தமிழகத்தில் பெரிதும் பேசப்பட்ட சத்யா கொலை வழக்கு, சி.பி.சி.ஐ.டி., காவல் துறைக்கு மாற்றப் பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சத்யாவின் தாய், மகள் இறந்த சோகத் தில் இருந்த நிலையில் அவரும் உயிரிழந்தார்.
கொலை, பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சி.பி.சி.ஐ.டி., காவலர்கள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணை முடிந்த நிலையில், வழக்கின் விசா ரணை அலுவலரான சி.பி.சி.ஐ.டி., காவல் ஆய்வாளர் கே.ரம்யா, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்., 11 ஆம் தேதியில் சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் சதீஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
பின். கடந்தாண்டு மார்ச்சில் இந்த வழக்கு, சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன் றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி விசாரித்து வந்தார். அரசு தரப்பு சாட் சிகள், 70 பேரிடம் விசா ரணை நடத்தப்பட்டது.
காவல் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏ.எம்.ரவீந்திரநாத் ஜெயபால், "சதீஷ் மீதான குற்றச்சாட்டு கடுமையானது என்பதால், அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். என வாதிட்டார்.
வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில், சதீஷ் குற்றவாளி என்றும், அவருக்கான தண்டனை விப ரங்கள், டிசம்பர் மாதம்., 30 ஆம் தேதியில் அறிவிக்கப்படும் என்று டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியில் நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி அறிவித்தார். அதன்படி, நேற்று முன்தினம் தண்டனை விபரங்களை அறிவிக்க, வழக்கு பட்டியலிடப்பட்டது.
புழல் சிறையிலிருந்து குற்றவாளி சதீஷ் கூட்டி வரப்பட்டு மதியம் 1:20 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவரிடம் தண்டனை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு சதீஷ், குறைந்த தண்டனை வழங்க கேட்ட நிலையில் பெற்றோரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தனக்கு உடல் தலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். "இதையடுத்து, பிற் பகல் 3:30 மணிக்கு தண்டனை விபரத்தை, நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி அறிவித்தார்.CBCID - Central Crime Branch, காவல்துறை Chennai குற்ற FIR Cr Number 7 / 2022 ஆகப் பதிவு செய்யப்பட்ட நிலையில்,பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், சதீஷுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன்,
இந்திய தண்டனைச் சட்டம், 302 வது பிரிவின் கீழ் கொலை குற்றத்திற்கு மரண தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
தீர்ப்பை கேட்ட தும் சதீஷ் கண்ணீர் விட்டார். பின், குற்றவாளி பலத்த காவல் துறை பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கூட்டிச் சென்றனர்.
குற்றவாளி சதீஷ் கைதானதிலிருந்து, தீர்ப்பு வரை சிறையில் இருந்துள்ளார்
சம்பவம் நடந்து முடிந்து, மூன்று மாதங்களுக்குள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. விசாரணை துவங்கி ஓராண்டு எட்டு மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏ.எம்.ரவீந்திரநாத் ஜெயபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
"இந்த வழக்கைப் பொறுத்தவரை, குற்றவாளி சதீஷ், ரயில் முன் சத்யாவைத் தள்ளிவிட்டது மட்டுமின்றி, அவர் இறந்து விட்டாரா என உறுதி செய்த பின், அங்கிருந்து தப்பியோடினார் என்பது போன்ற சாட்சியங்கள், வழக்கில் அதிகபட்ச தண்டனை கிடைக்கப் பேருதவியாக இருந்தது.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடு படுவோருக்கு, இந்த வழக்கின் தீர்ப்பு, ஒரு பாடமாக இருக்கும். வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். குறிப்பாக, சாட்சிகள், குறுக்கு விசாரணை உள்ளிட்டவற்றை கவனமாகக் கையாண்டோம். அரிதிலும் அரி தாள் வழக்குகளில் தான், தாக்குத் தண்டனை விதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன் படி, இந்த வழக்கில் குற்றவாளியான சதீஷுக்கு
நீதிபதி மரண தண்டனை விதித்துள்ளார்" எனக். கூறினார். இது போன்ற நிகழ்வுகள் நீதித்துறையின் பேரில் நம்பிக்கையை வளர்க்கிறது. என்பது தான் இங்கு பொது நீதி, விரைவான மற்றும் சரியான நீதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மன நிறைவையும் குற்றங்களைச் செய்பவர்கள் மனதில் பயத்தையும் விதைக்கும் என்பதுதான் இதன் தாத்பரியம்.
கருத்துகள்