சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக அரசுக்கெதிராக பல
போராட்டங்களை முன்னெடுக்கும் அதிமுக-வும் பாரதிய ஜனதா கட்சியும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தங்களின் பலத்தைக் காட்டி யிருக்க வேண்டும். இது அந்தக் கட்சிகளுக்கான சுய பரிசோதனையாகவும் இருந்திருக்கலாம் ஆனால், கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டு அந்தக் கட்சிகள் அரசியல் கட்சியினர் தலைமைப் பீடம் பிழையை செய்துள்ளது. ஆளுங்கட்சியின் பணபலம் படைபலத்தை எதிர்த்து நின்றாலும் கௌரவமான வாக்குகளைப் பெறமுடியாமல் போனால் அதுவே ஆளும் கட்சிக்கு நற்சான்றிதழ் அளித்தது போலாகிவிடும் என்பதால் எதிர்க்க ஆளில்லாத களத்தில் எதிரி இல்லாமல் ஆடிப் பார்க்கட்டும் என எதிர்க்கட்சிகள் விட்டுவிட்டன.
ஆனால், சீமான் சார்ந்த நாம் தமிழர் கட்சி ஒன்றும் பலசாலியான கட்சி இல்லை ஆனால் பாஜக நடத்தும் பொதுத்தேர்தல் பரிட்சையில் இந்த முறை எழுதும் மாணவன் தான் நாதக ஆனால் கடந்த முறை பரிச்சை எழுதிய மாணவன் பாமக இந்த பரிசோதனை இந்த இடைத்தேர்தலை ஒரு சவாலாக ஏற்று களமிறங்கியுள்ளது போல தெரிந்தாலும் அடுத்ததாகவரும் பொதுத் தேர்தலுக்கான அளவு மானி தான் ஈரோடு தேர்தல் குறிப்பாக, பெரியார் என அழைக்கப்படும் ஈ.வே ராமசாமி நாயக்கர் குறித்த சீமான் கடும் விமர்சனங்களை முன்வைத்ததன் பின்னணியிலும் பாஜகவின் கைதான் ஓங்கியுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய சீமான், அவர் பிறந்த சிவகங்கை மாவட்டத்தை விட அவர் சார்ந்துள்ள நாடார் சமூகத்தினர் ஈரோட்டில் குறைவு மண்ணிலேயே கருத்தியல் யுத்தத்தை நடத்த தேர்தலில் போட்டி என்ற முடிவை தைரியமாக எடுத்துள்ளார் என பொது வெளியில் அரசியல் தெரியாத நபர்கள் வேண்டுமானால் பேசலாம் ஆனால் இதில் தான் பாஜக பெரியார் எனும் ஈ.வே ராமசாமி எனும் வாங்கு வங்கியை அளவீடு செய்யும் கருவியாக நா த க வை இயக்கி உள்ளது தான் இங்கு நடைபெறும் அரசியல் .என்டிஏ தேர்தலைப் புறக்கணித்தாலும், தொண்டர்கள் மனச்சாட்சிப்படி வாக்களிப்பார்கள்” என்று பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளதால் கடந்த தேர்தல்களைப் போல் அல்லாமல் இம்முறை நாதக பாஜக வாக்கில் கணிசமான பல வாக்குகளைப் பெறக் கூடிய வாய்ப்பிருக்கிறது
அங்கீகார அடையாளத்தைப் பெற்ற பிறகு நாதக சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் ஈரோடு கிழக்கில் நாதக-வையும் வீழ்த்த ஆளும் கட்சி எந்த எல்லைக்கும் போக வேண்டிய அவசியம் இல்லை என கணிக்கலாம் ஈரோடு எம்ஜிஆர் காலம் தொட்டே அதிமுக வாக்கு வங்கி அதிகம் சீமான். அதனால், தானே களத்தில் இறங்கினால் என்ன என தனக்கு நெருக்கமானவர்கள் மட்டத்தில் ஒரு ஆலோசனையும் நடத்தினாராம். அது சரியாக இருக்காது என்பதால் இறுதியாக, உள்ளூர் முகமான சீதாலட்சுமியை நிறுத்தி இருக்கிறார். திமுக வேட்பாளர் சந்திரகுமார் முதலியார் என்பதால், கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சீதாலட்சுமியை தேர்வு செய்திருக்கிறார் சைமன் என்ற சீமான். இவர் ஏற்கெனவே ஈரோடு, திருப்பூர் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டவர். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் அறிவிப்பு இது:-
தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை, Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின் போது, பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், திமுக, தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம்.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை.
மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு. நன்றி.
என பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அறிக்கை ஒரு பக்கம் இதில் காங்கிரஸ் விலகி திமுகவின் களமாக மாறியது கூட அரசியல் தான் பெரியார் என்ற ஈ.வே. ராமசாமி என்ற நாத்தீக அரசியல் மற்றும் அதற்கு எதிராக நடக்கும் ஆத்வீக ஆன்மீக அரசியலுக்கும் நடக்கும் மல்லுக்கட்டு இதில் நடிகர் சீமான் கட்சி ஜாமீன் தொகை பெறாமல் போனால் தாங்கள் ஐந்து துண்டாக உடைத்து அரசியல் செய்த பாஜகவின் செயல் மீண்டும் அதிமுகவில் அணைத்து பிரிவும் ஒன்று சேர்க்கும் முயற்சி நடிக்கலாம். அதுவும் தேர்தல் முடிவு வெளிவந்த உடன் இதுவே இப்போது நடக்கும் ஈரோட்டு அரசியல் இதில் அரசியல் பலியாடு சீமான் கட்சி வேட்பாளர் தான் என்பதே பொது ஜனங்கள் பார்வை இதில் பொது நீதி யாதெனில்:- சாமானிய மக்கள் மீது பாஜகவின் பார்வை திரும்பாத வரை மேட்டுக்குடி அரசியல் நடத்தி தமிழ்நாட்டில் ஆட்சியில் பாஜக அமரும் என்பது கனவே. சீமான் பேச்சு மட்டுமே மக்கள் குறித்து வரும் வாக்குகள் வருவது அவ்வளவு எளிதல்ல இதுவே கள நிலவரம்
கருத்துகள்