கனடாவிலிருந்து சைபீரியாவுக்கு காந்த துருவத்தின் பயணம், துகள்களின் ஆழ்ந்த நகர்வுகளை அனுமதிக்காது
கனடாவிலிருந்து சைபீரியாவுக்கு பூமியின் வடக்கு காந்த துருவத்தின் நகர்வு பூமியின் காந்த மண்டலத்தில் நடு-உயர் அட்சரேகைகளில் மின்னேற்றம் செய்யப்பட்ட துகள்களின் ஊடுருவல் தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று புதிய ஆய்வு கூறுகிறது. எலக்ட்ரான்கள், குவார்க்குகள், புரோட்டான்கள், அயனிகள் போன்ற மின்னூட்ட துகள்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதன் மூலம் வானிலையைக் கணிக்கக் கூடிய செயற்கைக்கோள் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
பூமியின் காந்தப்புலம், கிரகத்தின் மையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு கவசமாக உள்ளது. திசைகாட்டிகளை வழிநடத்தவும், தீங்கு விளைவிக்கும் சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாக்கவும் உதவிடும் கண்ணுக்குப் புலப்படாத விசைப் புலம் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக மாற்றம் அடைந்து வருகிறது. 1990-ம் ஆண்டு வரை கனடாவில் அமைந்திருந்த வட காந்த துருவம் மெதுவாக சைபீரியாவை நோக்கி நகர்வதை விஞ்ஞானிகள் அறிந்துகொண்டனர். 2020-ம் ஆண்டில், ஆண்டு ஒன்றுக்கு 50 கிலோமீட்டர் என்ற வேகத்தில் இது நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றம் விண்வெளியில் மின்னூட்டம் செய்யப்பட்ட துகள்களின் செயல்பாடுகள் தொடர்பான குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.
பூமியின் காந்த மண்டலத்தில், கதிர்வீச்சு அலைகளின் ஒரு பகுதியானது புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் போன்ற ஆற்றல்மிக்க மின்னூட்டத் துகள்களைக் கொண்டுள்ளது. இந்தத் துகள்கள், பூமியின் காந்தப்புலத்தால் பாதிக்கப்படுகின்றன. அவை பூமிக்கு நெருக்கமாக வரும் போது காந்தப்புலத்தின் வலிமை மற்றும் வடிவத்தைப் பொறுத்து வட காந்த துருவத்தின் இயக்கம் அந்தத் துகள்களின் பாதைகளை எவ்வாறு மாற்றுகிறது என்பதை ஆராய விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
கருத்துகள்