காவல் துறை ஆய்வாளர் இராஜினாமா செய்து உள்துறைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பினார்.
காவல் ஆய்வாளரின் பணியில் தலையீடு இருப்பதால், வேலையை இராஜினாமா செய்வதாக, மாநிலத்தின் உள்துறைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உட்கோட்டம், இராஜசிங்க மங்கலம் எனும் ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் சரவணன். 16 ஆண்டுகளாக காவல்துறையில் இருந்து வருகிறார் தமது பணியில் முகாம் அலுவலக எழுத்தர் (ரைட்டர்) குறுக்கீடு மற்றும் தலையிடுவதாகத் தெரிவித்து மாநிலத்தின் உள்துறைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தொடரும் இதுபோன்ற நடவடிக்கைகள் எதிரொலியாக பணியிலிருந்து ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பிய கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;
திருவாடானை உட்கோட்ட முகாம் அலுவலக எழுத்தர் தொடர்ந்து என்னிடம் கேட்காமல் ஆர்.எஸ். மங்கலம் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தன்னிச்சையாக தொடர்ந்து அலுவல்களை நியமித்து தமது பணியில் குறுக்கீடு செய்து தலையிட்டு வருகிறார். இதுதொடர்பாக ஏற்கனவே அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளேன்.
தற்போது காவல் நிலைய சரகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எனது வாகன ஓட்டுநரை வேறு பணிக்கு வருமாறு ஆயுதப்படையிலிருந்து தன்னிச்சையாக எனது கவனத்துக்குத் தெரிவிக்காமல் நேரடியாக காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபோன்ற செயல்களை அவர் தொடர்ந்து செய்து வருவதால் எனது காவல் பணியை திறம்படச் செய்ய முடியவில்லை. தற்போது உத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனத்துக்கு ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்திலிருந்து ஆய்வாளர், 14 காவலர்களை என்னிடம் எவ்வித அறிவிப்புமின்றி தன்னிச்சையாக பணிக்கு நியமித்துள்ளனர். என அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்