ஹிந்து சமூகத்தின் மிகப்பெரிய திரிவேணி சங்கமத்தில் மகாகும்பமேளா விழா
உத்தரப்பிரதேச மாநிலம் பழைய பிரயக்ராஜ் (அலஹாபாத்) நகரில் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி துவங்கி நடக்கிறது. கும்பமேளாவிற்குச் சாதுக்களும், முனிவர்களும், நிர்வாணிகளும், நிர்மோஹிகளும், ஆண் பெண் துறவிகள் மற்றும் பல்துறை சார்ந்த பிரபலங்களும் வந்து குவிகின்றனர். அங்கு ஆண்டு தோறும் யாராவது பிரபலமாவது நிகழும் இந்த ஆண்டு
கும்பமேளாவில் பாசி மணி, பூ, ருத்ராட்ஷ மாலை வியாபாரம் செய்ய வந்த ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சிவப்பு நிற ஆடையுடன் இளம் பெண் சாதுவைப் போல வசீகரமான தோற்றத்தின் மூலம் காட்சியளித்த அந்தப்பெண் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தார். அவர் மாலை விற்பனை செய்யும் விதம் கும்பமேளாவிற்கு வந்த பக்தர்கள் மற்றும் மீடியா குழுவினரைக் கவர்ந்தது. அவர் மாலை வியாபாரம் செய்யும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதன் காரணமாக அவரைச் சுற்றி எப்போதும் புகைப்படங்கள் எடுக்க வந்த கலைஞர்கள் சூழ்ந்திருந்தனர். இதனால் அவரால் தொடர்ந்து பாசி மணி மற்றும் உத்தராட்ச மாலைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து அவரது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவரது சொந்த ஊரான இந்தூருக்கு அவரது குடும்பத்தினர் அனுப்பி விட்டார்கள். இந்தூருக்குச் சென்றவுடன் அங்கு அழகு நிலையமான சலூன் கடை ஒன்றுக்குச் சென்று தனது அழகை மேம்படுத்திக்கொண்டாவர்
சலூன் கடையில் மேக்கப் செய்து கொள்ளும் காணொளிக் காட்சி (வீடியோ) சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகியது. அதோடு கும்பமேளாவில் தனக்குக் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த மோனலிசா, சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றைத் துவங்கி, அதில் தான் சலூனில் மேக்கப் செய்து கொண்ட வீடியோவை வெளியிட்டி இருந்தார்.
டிவிட்டர் பக்கத்திலும் அதனைப் பகிர்ந்தார். பெண் துறவியைப் போன்று சிவப்பு ஆடையுடன், பாசி மாலை அணிந்து அவர் தனது முடியைச் சலூனில் சரி செய்யும் வீடியோவை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தனர். மோனலிசாவை முன்மாதிரியாக வைத்து சிலர் ஓவியம் வரைய ஆரம்பித்தனர். மோனலிசாவும் தினமும் புதுப்புது வீடியோக்களை கடந்த ஐந்து நாட்களாக வெளியிட்டு வருகிறார். அது பார்வையாளர்களைகா கவர்கிறது. - விளம்பரம் -
-விளம்பரம்-மோனலிசாவைப் போன்ற உருவத்துடன் இருக்கும் மோனலிசா போஸ்லே அடுத்தகட்டமாக தொலைக்காட்சி தொடர்களில் நுழைவது குறித்துப் பரிசீலிக்கிறார். மாலை விற்பனை செய்த பெண் இப்போது சோசியல் மீடியா பிரபலமாகி இருக்கிறார்.
அவரை சோசியல் மீடியாவில் பலரும் அவரை நேரில் பார்க்காமல் பாராட்டிப் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே கும்பமேளாவில் புல்லட் பாபா, கோல்டன் பாபா, ஐ.ஐ.டி பாபா என ஏராளமான நபர்கள் பிரபலம் அடைந்தனர். கும்பமேளாவில் சாதுக்கள் அதிக அளவில் வந்து குவிந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பல துறவிகள் பக்தர்களின் கவனத்தை ஈர்க்கின்றனர். அந்த வரிசையில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷா ரிசாரியா என்ற இளம் பெண் துறவி கவர்ந்துள்ளார்.
கும்பமேளாவில் அழகான துறவியாகக் கருதப்படும் ஹரிஷா தன்னை ஒருபோதும் துறவி என்று சொல்லிக்கொண்டதில்லை என்கிறார். ஆனால் அவர் துறவிக்கான உடையணிந்து, ருத்ராட்ஷ மாலை அணிந்து கும்பமேளாவில் காணப்படுகிறார்
மகா கும்பமேளாவில் துறவறம் மேற்கொள்ள 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்
ஜனவரி மாதம் 27-ஆம் தேதி முதல் நடைபெறும் சேர்க்கையில் இணைய சுமார் 1,000 பெண்கள் வரை பதிவு செய்துள்ளனர். மகா கும்பமேளாவில் நாட்டின் 13 அகாடாக்களும் முகாமிட்டுள்ளன. ஜனவரி மாதம் 13-ஆம் தேதி துவங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மஹா கும்பமேளாவில் இளம் தலைமுறையினர் துறவறம் பூணும் நிகழ்ச்சி அகாடாக்களில் நிகழும்.
இந்த முறை மகா கும்பமேளாவில் வரலாறு படைக்கும் வகையில் பெண்கள் துறவறம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டினர். இதுகுறித்து ஜுனா அகாடாவின் மூத்த துறவி திவ்யா கிரி கருத்து, “எங்கள் அகாடாவில் மட்டும் இந்த முறை 200 பெண்கள் துறவறத்துக்காக பதிவு செய்துள்ளனர். மேலும் 12 அகாடாக்களையும் சேர்த்தால் துறவியாகும் பெண்கள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டுகிறது. இதற்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெறுகின்றன.
இவர்களுக்கு துறவறம் மேற்கொள்ள வைக்கும் நிகழ்ச்சி இரண்டு நாட்கள் முன்பு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது” என்றார். ஜனாதன தர்மத்தில், துறவறத்துக்கான பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன. இந்தத் துறவறத்தை ஒரு சாமானிய மனிதர் முதல் இல்லர வாசம் துறந்து யாரும் மேற்கொள்ளலாம் எனக் கருதப்படுகிறது.குடும்பத்தில் ஏற்படும் விபத்து மற்றும் விஷக்கடி மரணத்தில் தப்பிக்க, மற்றும் உலக வாழ்க்கையில் வெறுப்பு, அளவுக்கு மீறிய புகழ் மற்றும் பணம் அல்லது ஆன்மிக அனுபவத்தில் திடீர் மாற்றம் போன்றவை இதற்குக் காரணமாகின்றன. இந்த ஆண்டு துறவறம் மேற்கொள்ள உள்ள பெண்களில், உயர்க் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். - விளம்பரம்- -விளம்பரம்-
குஜராத் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதத் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு செய்யும் ராஜ்கோட்டின் ராதே நந்த் பாரதி கருத்து, “எனது தந்தை மிகப்பெரிய செல்வந்தர். எனது வீட்டில் எனக்காக அனைத்து வசதிகளும் உள்ளன. அதில் இல்லாத ஆன்மிக அனுபவத்துக்காக நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். ஜுனா அகாடாவில் எனது குருவிடம் சீடராக நான் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்கிறேன்” என்கிறார்.
அதைவிட இந்த பாசி மணி விற்பனை செய்து வந்த மோனாலிசா போஸ்லே கதை கடந்த 400 ஆண்டு காலத்திற்கு முன்பே மராட்டிய மாநிலத்திலிருந்து சரபோஜி படையெடுப்பு மூலம் படை முன்னோடியாக தஞ்சாவூர் நோக்கி மிருக வேட்டை நடத்தி முன்வந்த நாடோடி (நரிக்குறவர்) மக்களின் பிள்ளையைப் போலவே ஒரு பூனைக் கண் அழகால் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை
உத்தரபிரதேஷ மாநிலத்தின் கும்பமேளாவுக்கு ராஜஸ்தான் மாநிலம் இந்தூரிருந்து கிளம்பி குடும்பத்தோடு பாசி மணி, ஊசி மாலைகள், விற்க வந்துள்ள அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மோனாலிசா போஸ்லே என்ற பெண்
தற்போது டைரி ஆஃப் மணிப்பூர் என்பது, மணிப்பூரில் நடந்த வன்முறையைப் பற்றி எழுதப்பட்ட படம் ஒரு பதிவு.
இந்தப் பதிவு, மணிப்பூரில் நடந்த வன்முறையைப் பற்றி எழுதப்பட்ட ஒரு முக்கியமான பதிவு.
இந்தப் பதிவு, மணிப்பூரில் நடந்த வன்முறையை சமாளிப்பதில் உதவியது.
மணிப்பூர் வன்முறை சம்பந்தப்பட்ட வழக்கு டைரிகளை என்ஐஏ கைப்பற்றியது.
மணிப்பூர் வன்முறை சம்பந்தப்பட்ட மூன்று வழக்குகளை மீண்டும் பதிவு செய்தது என்ஐஏ. இந்த நிகழ்வு குறித்து படம் தயாரித்த இயக்குனர் தற்போது மோனாலிசாவுக்கு வாய்ப்புகள் வழங்கிய நிலையில் டைரி ஆப் மணிப்பூர் என்ற பாலிவுட் படத்தின் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தனது அடுத்த படத்தின் வாய்ப்பு வழங்கியுள்ளார்! அவர் ஒரு ராணுவ கமாண்டர் மகளாக நடிக்கிறார் அதற்கு விரைவில் நடிப்புப் பயிற்சி
மோனலிசாவிற்கு வழங்குவார்கள் மேலும் அவரது குடும்பம் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் விரைவில் திரையுலகில் ஒரு நடிகையாக மோனாலிசா வலம் வருவார்,
ஒரு கும்பமேளா திருவிழா இவரது வாழ்க்கையை ஒரே நாளில் மாற்றியமைக்கிறது அந்த திரிவேணி சங்கமம்
கருத்துகள்