புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் வெங்களூரைச் சேர்ந்த ஜகுபர் அலி (வயது 58). அ.தி.மு.க. சார்ந்த முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினரான
இவர் திருமயம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சிறுபான்மை நலப் பிரிவு செயலாளராகவும் தமிழ்நாடு அமொசூர் கபடி கழகத்தில் மாவட்டச் செயலா ளராகவும் இருந்தார்.
சமூக ஆர்வலர் என பலரும் கூறும் நிலையில் இவர் திருமயம் பகுதியில் துளையானூர் பகுதியில் இயங்கும் கல் குவாரிகளின் முறைகேடுகளை புகார் மூலம் தெரிவித்து வந்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கும் தொடர்ந்தார். அதையடுத்து தவறான கல் குவாரி நடத்தியவர்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது ஆனால் அபராத் தொகையை வருவாய் வட்டாட்சியர் லஞ்சம் பெற்றுக் கொண்ட காரணத்தால் வசூலிக்கப்படவில்லை.
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்ட பின்பும் அபராத்தொகையை வசூலிக்காதது குறித்து மீண்டும் ஜகுபர் அலி அரசு அலுவலர்களிடம் கேள்வி எழுப்பவே மேலும் 20 ஆயிரம் டாரஸ் லாரி அளவுக்கு கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு அனுமதி இல்லாத இடத்தில் கொட்டப்பட்டுள்ளது கனிம வளத்துறை உதவி இயக்குநரிடம் புகார் மனு அளித்தார். அதைத் தொடர்ந்து அந்த கனிம வளம் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் இரவோடு இரவாக அகற்றும் பணி ஆதாரங்கள் அழிப்பு வேலை நடைபெற்றுள்ளது. இது குறித்து ஜனவரி மாதம் 13 ஆம் தேதி மீண்டும் புகார் அளித்தார்
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் "அரசு அலுவலர்களிடம் கனிமவளக் கொள்ளை குறித்து மனு அளித்தும் எந்தவிதமான பயனுமில்லை. எனவே மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளேன் என பகிரங்கமாகத் தெரிவித்த நிலையில் ஜனவரி மாதம் 17-ஆம் தேதி ஜகுபர் அலி அவரது ஸ்கூட்டரில் சென்றபோது லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். முதலில் திருமயம் காவல் துறை அதை விசாரணை நடத்தாமல் விபத்து வழக்காகப் பதிவு செய்தது
பின்னர் ஜகுபர் அலி மனைவி மரியம் அவரது சாவில் சந்தேகமிருப்பதாகவும், கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து புகார் தெரிவித்து வந்ததால் திட்டமிட்டுக் கொலை செய்திருக்கலாம் எனவும் திருமயம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் சந்தேக மரணம் என வழக்கு மாற்றம் செய்து பதிவு செய்யப்பட்டு பின்னர் காவல் துறை
நடத்திய புலன் விசாரணையில் இரண்டு கல்குவாரி நடத்தும் உரிமையாளர்கள் கூட்டு சதி செய்து சேர்த்து திட்டமிட்டு அவரை லாரி ஏற்றிக் கொலை செய்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து திருமயம் பகுதியைச் சேர்ந்த மினி லாரி உரிமையாளர் முருகானந்தம் (வயது 36)
சரணடைந்ததைத் தொடர்ந்து லாரியை ஏற்றி சமூக ஆர்வலரைக் கொலை செய்ததாக காவல்துறை அவரைக் கைது செய்தனர்.
மேலும் இராமநாதபுரத்தை சேர்ந்த வாரி ஓட்டுநர் காசிநாதன் (வயது45) கைது செய்யப்பட்டார். இவர் சமூக ஆர்வலரின் நடமாட்டத்தைக் கண்காணித்து முருகானந்தத்திற்கு தகவல் கொடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொலை பின்னணியில் சுஸ்குவாரி உரிமையாளர்களான திருமயம் பாப்பாத்தி ஊரணியைச் சேர்ந்த ராசு (வயது 45),அவரது மகன் தினேஷ்(வயது28) மற்றும் மற்றொரு கல்குவாரி உரிமையாளரான இராமையா ஆகியோர் செயல்பட்டது. கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் இந்தக் கொலையை திட்டமிட்டுச் செய்திருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் காவல்துறையினர் கல்குவாரி உரிமையாளர் இராசு மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோரையும்
கைது செய்தனர். இராமையாவை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை காவல் துறை பல்வேறு இடங்களில் அவரைத் தேடி வருகின்றனர். இதற்கிடையே கைதான
லாரி உரிமையாளர் முருகானந்தம் காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதில் கூறியிருப்பதாவது:- "அவர் கல்குவாரி அதிபர்கள் இராசு மற்றும் இராமையா ஆகியோரின் சதித் திட்டத்தின் படி திட்டமிட்டு ஜகுபர் அலியை கொலை செய்தோம்
அவர் மசூதியிலிருந்து திரும்பி வரும் வழி குறிந்து எனது மினி லாரி டிரைவர் காசிநாதனை கண்காணிக்க வைத்து தகவல் அளிக்கும் படி சொன்னேன்.
அவரும் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்து எனக்குத் தகவல் அளித்தார். அதன் பின்னர் அவர் மீது திட்டமிட்டபடி லாரியை மோதச் செய்தேன். முதல் முறை மோதிய போது படு காயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.கனிமவளத்துறையின் சுரண்டலுக்கு எதிராகப் போராடியும், அலுவலர்களிடம் ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும், நீதிமன்ற நடவடிக்கை மூலமாகவும் போராடிய புதுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகுபர் அலி என்பவரை லாரி ஏற்றிக் கொலை செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்
திருமயம் தாலுகா காட்டுப்பாவா பள்ளிவாசல் ஊராட்சி மற்றும் துளையானூர், வலையன்வயல், லெம்பலாக்குடி பகுதிகளில் ஆர்.ஆர் கிரஷர், புனித ஆரோக்கிய அன்னை கிரஷர், ஈஸ்வர் எண்டர்பிரைசஸ், ஆகிய கிரஷர் யூனிட்களை இராமைய்யா, இராசு, அழகு, சின்னம்மாள் ஆகியோர் ஒரு பெரிய நிறுவனமாக கூட்டாக கனிமவள புவியியல் சுரங்கத்துறைக்கு மாமூல் கொடுத்து நீண்ட நாட்களாக நடத்தி வருவதாகவும், அவர்கள் பட்டா நிலத்திலும் அரசு நிலத்திலும் அரசின் அனுமதி பெற்றும் சிலவற்றில் பெறாமலும் தொழில் செய்து வந்ததாகவும் சொல்லப்படும் நிதி. மேலும் அவர்கள் எப்பொழுதெல்லாம் தொழில் செய்கிறார்களோ அப்பொழுதெல்லாம் அரசு அனுமதித்த அளவை விட பல மடங்கு அதிகமாகவே பாறைகள் கொண்ட கனிமத்தை வெட்டி எடுத்ததாகச் சொல்கிறார்கள். இது அரசின் பார்வைக்குத் தெரிந்து சுமார் 25 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அதை அரசுக்கு கட்டாமல் ஏதாவது ஒரு வழக்கைப் போட்டு அரசை நீண்ட காலமாக ஏமாற்றி வருவதாகவும் சொல்லப்படும் நிலையில் மேற்கண்ட நான்கு
நபர்களுக்கும் தற்போது அரசு அனுமதி பெற்ற
குவாரிகள் எதுவுமில்லை என்றும், ஒரு
ஆண்டுக்கு முன்பே முடிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களுடைய 3 கிரஷர் யூனிட்டுகளும் 2 எம் சான்ட் யூனிட்களும் நிறுத்தாமல் இயங்கி வருகிறது. குவாரி அனுமதிக்காலம் முடிந்து தொடர்ந்து கிரஷர் யூனிட்களை இயக்க வேண்டுமென்றால் அதற்கு உண்டான கழிவு சக்கைகளை அரசு அனுமதி பெற்ற குவாரிகளிலிருந்து தான் வாங்க வேண்டும். அப்படி இவர்கள் யாரிடமும் விலை கொடுத்து வாங்கியதற்கு உண்டான இசைவாணைச் சீட்டோ அல்லது வேறு வகைகளில் சக்கையை வாங்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்கிறார்கள். ஆனால் துளையானூரில் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் பட்டா இடங்களில் சுமார் 150 க்கும் மேற்பட்ட வேலையாட்கள் 10 பொக்கலின் மற்றும் ஏராளமான துளையிடும் இயந்திரங்களை வைத்து 50 க்கும் மேற்பட்ட லாரிகளில் வருவாய்துறை, காவல்துறை அலுவலர்கள் உதவியுடன் திருட்டு சாம்ராஜ்யமே நடத்தியிருக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு 6 யூனிட் கொள்ளளவு கொண்ட டாரஸ் லாரிகளில் தினமும் 300 நடைக்கு மேல் பாறை சக்கைகளைத் திருடி அதை விற்பனைக்குத் தேவையான எம் சாண்டாகப் பிரித்து கிட்டத்தட்ட 800 கோடிக்கு மேல் மதிப்புள்ள கனிமங்களை இருப்பு வைத்துக் கொள்ளை அடித்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் அதிமுக பிரமுகருமான ஜகுபர் அலி என்பவர் இது குறித்து கோட்டாட்சியரிடம் புகார் கொடுத்த நிலையில் தான் ஜனவரி மாதம் 17 ஆம் தேதி காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியிலிருந்து வந்த, ஜகுபர் அலி வந்த இருசக்கர வாகனத்தின் மீது, மணல், கற்கள் ஏற்றிவந்த மினி டிப்பர் லாரி வேகமாக மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால் முதலில் இதை காவல்துறை கொலை வழக்காக ஏற்றுக்கொள்ள வில்லை
இதனால் ஒருவேளை உயிர் பிழைந்து விடுவார் எனக் கருதிய நான் இரண்டாவது முறையாக மீண்டும் மோதி அவரைக் கொலை செய்தேன்.எனவும். உயிர் பிழைத்துவிடுவார் என்ற பயத்தில் 2 முறை லாரியை மோத விட்டு கொன்றேன். கைதான லாரி உரிமையாளர் பரபரப்பு வாக்குமூலத்தில் தெரிவித்துற்ளார்.
அதன் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் நமது செய்தியாளர்கள் நடத்திய விசாரணையில் தெரிய வந்த தகவல்கள் வித்தியாசமானது , சமூக ஆர்வலர் ஜகுபர் அலி என்பது ஏற்புடையதாக இல்லை, மேலும் அதே குவாரியை அதே நபர்களுடன் சேர்த்து நடத்தியவர். இதில் பண பேர விஷயத்தில் இவருக்கு பங்கு உள்ளது குறித்து மக்களிடையே பேச்சு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்