இந்தியாவின் 26 ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக, ஞானேஷ் குமார் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட நிலையில்
பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி பதவியேற்றார். 2029ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினம் வரை தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியில் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தோ்தல் ஆணையத்தில் ஒரு தலைமைத் தோ்தல் ஆணையரும், இரண்டு தோ்தல் ஆணையா்களும் இடம்பெற்றிருப்பார்கள். தோ்தல் ஆணையா்களை மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில், குடியரசுத் தலைவா் நியமனம் செய்து வந்தாா். இரு தோ்தல் ஆணையா்களில் பணி மூப்பு பெற்றவா், தலைமை தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு வந்தாா். இந்த நடைமுறைக்கு எதிராக ஜனநாயக சீா்திருத்த சங்கம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனிடையே புதிய சட்டம் இயற்றப்படும் வரை, தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும் உள்ளடக்கிய குழு தேர்வு செய்ய வேண்டுமென்று 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.ஆனால், தலைமை நீதிபதிக்குப் பதிலாக மத்திய அமைச்சர் அடங்கிய குழு, தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
அந்த சட்டத்தின்படி, கடந்த ஆண்டு இரண்டு தேர்தல் ஆணையர்களும், நேற்று முன்தினம் தலைமைத் தேர்தல் ஆணையரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஞானேஷ் குமார், ஜம்மு காஷ்மீருக்கான 370 வது பிரிவு ரத்து, (ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது யூனியன்களாக பிரிக்கப்பட்டது) மற்றும் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் அறக்கட்டளை விவகாரங்களில் முக்கியமான பங்காற்றியவர். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பதவிக் காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. அதையடுத்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய குழு, புதிய தலைமை தேர்தல் ஆணையர் தொடர்பாகக் கூடி ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் தேர்தல் ஆணைய சட்டம் குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருப்பதால் புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரினார் ராகுல் காந்தி. ஆனால் எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டு, ஞானேஷ் குமார் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அறிவிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஞானேஷ்குமார். பி.டெக் 1988-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ். கேரளா மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் பணி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்ட ஞானேஷ் குமார், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றினார். உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றினார். நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சகத்தின் செயலராகவும் ஞானேஷ்குமார் பணியாற்றினார், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிக்கும் காலத்தில் 2025, மற்றும் 2026-ஆம் ஆண்டில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் 2027 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் ஆகியவை நடைபெற உள்ளன.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமாரின் பதவிக் காலம் 2029-ம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முடிவடையும்.
கருத்துகள்