மார்ச் 5 ஆம் தேதி தொகுதி மறு சீரமைப்பு பாதிப்பு குறித்து பேச தமிழ்நாட்டில் அணைத்துக் கட்சிக் கூட்டம்
தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தெற்கு மாநிலங்கள் சந்திக்க போகும் பாதிப்பு
சுதந்திரத்திற்குப் பின்னர் 1951, 1961, 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புகளின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுள்ளது.
1951ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிக்கப்பட்ட பின்னர் தொகுதிக்கு சராசரியாக 7.3 லட்சம் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைக்கு 494 தொகுதிகள் என நிர்ணயிக்கப்பட்டது.
1961 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் தொகுதிக்கு சராசரியாக 8.4 லட்சம் மக்கள் தொகை என்கிற அடிப்படையில் நாடாளுமன்றத்திற்கு 522 தொகுதிகள் என நிர்ணயம் செய்யப்பட்டது.
1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின்னர் தொகுதிக்கு சராசரியாக 10.1 லட்சம் மக்கள் தொகை என்கிற அடிப்படையில் மக்களவைக்கு 543 தொகுதிகள் என நிர்ணயம் செய்யப்பட்டது.
தற்போது மக்களவையில் 23.74 சதவீதமாக உள்ள தென் இந்தியாவின் பிரதிநிதித்துவம், 18.97 சதவீதமாகக் குறையும் என தேர்தல் ஆணைய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தலா 8 இடங்களை இழக்க நேரிடும். ஆந்திரப் பிரதேசமும், தெலுங்கானாவும் தலா 8 இடங்களை இழக்க நேரிடும். ஆனால் அதே நேரம் உத்திரப்பிரதேசம், பீகார், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முறையே 11, 10, 6, 4 இடங்களைக் கூடுதலாக பெறும்.
2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டால், தென் இந்தியாவின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 164 ஆக உயரும்.
ஆனால் பிரதிநிதித்துவத்தின் சதவீதம் தற்போது உள்ளதை விடக் குறைவாக 19.34 சதவீதமாகத்தான் இருக்கும்.
உத்தரபிரதேசம் தற்போது 80 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளை கொண்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரை செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 848 ஆக உயரும் போது உத்தரபிரதேசத்தின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிக்கும். தற்போதுள்ள 14.73 சதவீத பிரதிநிதித்துவம் 16.86 சதவீதமாக ஆக அதிகரிக்கும்.
பீகாரில் தற்போது உள்ள 40 இடங்கள் மொத்த எண்ணிக்கை 848 ஆக அதிகரிக்கும்போது 79 ஆக உயரும். தற்போது 7.36 சதவீதமாக உள்ள பிரதிநிதித்துவம் 9.31ஆக அதிகரிக்கும்.
மத்தியப் பிரதேசத்தில் தற்போதுள்ள 29 என்கிற எண்ணிக்கை 848ல் 52 ஆக உயரும். தற்போது 5.34 சதவீதமாக உள்ள மத்திய பிரதேசத்தின் பிரதிநிதித்துவம் 6.13ஆக உயரும்.நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு மார்ச் மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பு :-
1.திராவிட முன்னேற்றக் கழகம்
2.இந்திய தேசிய காங்கிரஸ்
3.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
4.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
5.இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
6.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
7.விடுதலை சிறுத்தைகள் கட்சி
8.மனிதநேய மக்கள் கட்சி
9.அகில இந்திய பார்வர்டு பிளாக்
10.தமிழக வாழ்வுரிமை கட்சி
11.மக்கள் நீதி மய்யம்
12.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
13.ஆதி தமிழர் பேரவை
14.முக்குலத்தோர் புலிப்படை
15.மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
16.மக்கள் விடுதலை கட்சி
17.அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
18.பாட்டாளி மக்கள் கட்சி
19.தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)
20.தேசிய முற்போக்கு திராவிட கழகம்
21.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
22.பாரதிய ஜனதா கட்சி
23.தமிழக வெற்றிக் கழகம்
24.நாம் தமிழர் கட்சி
25.புதிய தமிழகம்
26.புரட்சி பாரதம் கட்சி
27.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
28.புதிய நீதிக் கட்சி
29.இந்திய ஜனநாயகக் கட்சி
30.மனிதநேய ஜனநாயகக் கட்சி
31.இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி
32.இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்
33.பெருந்தலைவர் மக்கள் கட்சி
34.அனைத்து இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்
35.பசும்பொன் தேசிய கழகம்
36.அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்
37.தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி
38.கலப்பை மக்கள் இயக்கம்
39.பகுஜன் சமாஜ் கட்சி
40.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை
41.ஆம் ஆத்மி கட்சி
42.சமதா கட்சி
43.தமிழ்ப்புலிகள் கட்சி
44.கொங்கு இளைஞர் பேரவை
45.இந்திய குடியரசு கட்சி. ஆகிய கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்