நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வாரம் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 5000 அபராதமும் விதித்துத் தீர்ப்பு
தமிழகத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்களுக்கு நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவித்த நிலையில்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வாரம் சிறைத் தண்டனையும், ரூபாய் 5000 அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஹெலின் ரோனிகா ஜேசுபெல். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்:
திசையன்விளை சமாரியா செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில், தற்காலிக உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன்.
இங்கு ஏற்கனவே பணியாற்றிய ஆசிரியர், பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், காலியாக இருந்த அந்தப் பணியிடத்தில் நியமிக்கப்பட்டேன். என் நிய மனத்தை அங்கீகரிக்க, பள்ளி நிர்வாகம், மாவட்டக் கல்வி அலுவலருக்குப் பரிந்துரை செய்தது. பல காரணங்களைக் கூறி, என்னை பணி நிரந்தரம் செய்ய, மாவட்டக் கல்வி அலுவலர் மறுத்துவிட்டார். என் நியமனத்தை அங்கீகரிக்கக் கோரி,
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம். 2023 ஆம் ஆண்டில் என் நியமனத்தை அங்கீகரிக்கவும், பணி நியமனத் தேதியிலிருந்து, அதற்குரிய பணப்பலன்களை வழங்கவும் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை என் நியமனத்தை அங்கீகரிக்க வில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத,
பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவ டிக்கை எடுக்க வேண்டும். எனக் கூறப் பட்ட நிலையில்.எதிர் தரப்பினராக 1.காகர்லா உஷா, 2) அறிவொளி, 3)சின்னராசு,4) தயாபதிநல்லதம்பி, ஆகியோர் சேர்க்கப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் அம்ஜத் கான் ஆஜரான நிலையில்
இந்த மனு, நீதிபதி எல். விக்டோரியா கௌரி முன்னிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
2019 ஆம் ஆண்டிலிருந்து ஒப்புதல் அளிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டதை நிறைவேற்ற வில்லை.
அதற்கு மாறாக, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒப்புதல் அளித்ததாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்; இது ஏற்புடையதல்ல.
அவர், நீதிமன்றத்தில் ஆஜராக, நோட்டீஸ் பிறப்பித்தும் ஆஜராகவில்லை; நீதிமன்றத்தின் உத்தரவும் நிறைவேற்றப் படவில்லை. எனவே, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசுக்கு, ஒரு வாரம் சாதாரண சிறைத் தண்டனையும் மற்றும் ரூபாய் 5000 அபராதமும் விதிக் கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றி, பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்த மாவட்டத்தில் மட்ட்டுமல்ல புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதே நிலையில் தான் உள்ளது.
சமீப காலமாக, உயர் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல் லஞ்சம் எதிர்பார்த்து தட்டிக் கழித்து வரும் அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்களின் செயல்களுக்கு, நீதிமன்றம் அவ்வப்போது அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்துத் தான் வருகிறது.
இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், முதன்மைக் கல்வி அலுவலருக்கு தண்டனை விதிக் சுப்பட்டிருப்பது, அரசு அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில் உள்ளது. காரணம் தவறு செயுயம் அரசு சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்களுக்கு மக்கள் மற்றும் அரசாங்கம் மற்றும் நீதிமன்றத்தின் மீதிருந்த பயம் 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அறவே இல்லாமல் போனதும் ஒரு காரணம். அந்த நிலை மாற வேண்டும் இல்லை மாண்புமிகு நீதிமன்றம் தான் மாற்ற வேண்டும்.இந்த ஊழல் அரசு அலுவலர்களை நினைத்தால் மலைக்கள்ளன் திரைப்படத்தின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது
"எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார். சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்.
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டிப் பாமர மனுஷனை வலையினில் மாட்டி. எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே.. நம் நாட்டிலே....!?"
கருத்துகள்