முதன் முதலாக அத்திக்கடவு - அவினாசி நீர் வழித்திட்டத்தை நிறைவேற்றக் கோரி
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரப்பக் கவுண்டர் தமிழ்நாடு அரசிடம் 1957ஆம் ஆண்டு கோரிக்கை வைத்தார். அறுபதாண்டு காலமாக நிலுவையிலுள்ள அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி பகுதி மக்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக, திட்டத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில், 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தை 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதியன்று தாக்கல் செய்த தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இந்தத்திட்டம் 34 மாதங்களில் நிறைவடையும் என அறிவித்தார். இந்த நிலையில் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வரான போது அடிக்கல் நாட்டப்பட்டு,
ரூபாய்.1652 கோடி நிதி ஒதுக்கப்பட்டதால், அத்திக்கடவு – அவிநாசித் திட்ட கூட்டமைப்பு மற்றும் 3 மாவட்ட விவசாயிகள் சார்பில், அவருக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையன்று, கோயமுத்தூரில் பாராட்டு விழா
நடந்தது. எடப்பாடி கே.பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்ற நிகழ்வில். அதிமுக மூத்த தலைவரும், திட்டத்தில் பயனடையும் பகுதியின் தற்போதய சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்காததுடன் டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை, சென்னை இராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காணொளிக் காட்சி வாயிலாக எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார். அதிமுக மூத்த தலைவர்கள் பெரும்பாலானோர் பங்கேற்ற நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் அதிலும் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனுக்கொடுக்க வந்த கே.ஏ.செங்கோட்டையன், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.
கோபிசெட்டிப்பாளையமா நகராட்சியுடன் சில ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிராக மனுக் கொடுக்க வந்ததாகக் கூறியவர், பாராட்டு விழாவில், பங்கேற்காததற்கான காரணத்தை கூறினார்.
பாராட்டுவிழா அழைப்பிதழில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என விழா ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்ததாகக் கூறிய செங்கோட்டையன், ''நீங்கள் கலந்து பேசியிருந்தால் என்னுடைய உணர்வுகளைக் கூறியிருப்பேன். 3 நாட்களுக்கு முன்புதான் அழைப்பிதழ் கொடுக்கிறீர்கள்'' என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூறினேன் என்றார்.
அத்துடன், '' பாராட்டு விழாவை புறக்கணித்தேன் என்பதை விட என் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறேன் '' எனத் தெரிவித்தார். எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவை, அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. விவசாயிகள் கூட்டமைப்புதான் ஏற்பாடு செய்தது. அதில் அனைத்துக் கட்சி விவசாயிகளும் உள்ளதால் அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்பதற்காக எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை அவர்கள் வைக்கவில்லை.'' என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
டி.ஜெயக்குமார் பேட்டி வெளியான சிறிது நேரத்தில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், ''எம்ஜிஆர் கட்சி துவக்கிய நாளிலிருந்து, செங்கோட்டையன் இருக்கிறார். 1977 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அவர் தற்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் தொண்டன் என்ற முறையில், அவர் சரியாகச் சொல்லியிருக்கிறார் எனக் கருதுகிறேன். அதிமுக தொடர் தோல்விக்கு எடப்பாடி கே.பழனிசாமி காரணமாகவுள்ளார். அவர் விரைவில் அதிமுகவுக்கு மூடுவிழா நடத்திவிடுவார் என்று நான் கூறிவருகிறேன். அதை ஏற்கும் விதமாக செங்கோட்டையன் கருத்துத் தெரிவித்துள்ளதாக நினைக்கிறேன்.'' என்றார். அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தை ஆய்வு செய்யச் சொல்லி முதலில் நிதி ஒதுக்கியது ஜெயலலிதா தான்; அவருடைய ஆட்சியின் நீட்சி தான் பழனிச்சாமியின் ஆட்சி அப்படியிருக்கையில் ஜெயலலிதாவின் படத்தைப் போடாததை ஏற்க முடியாது'' என டி.டி.வி. தினகரன் கருத்துத் தெரிவித்திருந்தார், இந்த நிலையில் அதிமுகவில் அடுத்த விரிசலை நோக்கி பயணிக்கும் நிலை நன்றாகவே தெரிகிறது.
கருத்துகள்