திருப்பரங்குன்றம் ஹிந்து முன்னணி இயக்கத்தின் அறப்போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி குவிந்தது பக்தர்கள் கூட்டம்
ஹிந்து முன்னணி இயக்கத்தின் அறப்போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்த பாஜக மற்றும் ஹிந்து இயக்கங்களைச் சேர்ந்த அனைவரையும் விடுவிக்கவும் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. சில மாற்றங்களை நோக்கி தமிழ்நாடு நகர்ந்து கொண்டுள்ளது எனத் தோன்றுகிறது!
இன்று மதுரையில் கூடிய பெருங் கூட்டமும், அதற்குக் காரணமான நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கும், அரசு தரப்புக்கும் நடைபெற்ற விவாதங்கள் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விவகாரத்தில் மதுரையில் இன்று மாபெரும் பொதுக்கூட்டம் போல எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
இந்த விவகாரத்தில் இன்று நீதிபதிகள்;
“மலைக் கோவிலில் உள்ள ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
மலையில் கால்நடைகளைப்பலியிட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?”
எனக் கேள்வி எழுப்பினர்.
அப்போது அரசுத் தரப்பில்,
அது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து பரிமாற முயன்றதாக 200 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.வழக்கின் விசாரணையில்
மாநில அரசு தரப்பு வழக்கறிஞர், "மதுரையில் மற்றொரு பாபர் மசூதி போன்ற சம்பவம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காகப் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 11-ஆம் தேதி வரை முருகன் கோவில் தை மாதம் பூசம் விழாக்காலம் என்பதால் இதுபோன்ற சூழலில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது" என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிட்டார். அதற்கு
உயர்நீதிமன்ற நீதிபதி:-, "போராட்டத்தில் பங்கேற்றால் சட்ட நடவடிக்கை என்பது சரியான முறை இல்லை" என்றார்!
நீதிபதிகள், “இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பே அதைத் தடுக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” என அறிவுறுத்தினர்.
மேலும், அரசுத் தரப்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் பழங்கானத்தத்தில் நடத்த விருப்பம் தெரிவித்தனர். நீதிமன்றம் அதை ஏற்றது.
“ஆர்ப்பாட்டம் நடத்துவது அரசியலமைப்புக்கு உட்பட்டது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். பழங்காநத்தம் பகுதியில் இன்று மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது.’’ என அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
நீதிமன்றமும், மாநில அரசும் அணுகும் முறை ஒரே கோணத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
மேலும் இன்று மாலை 5.00 மணிக்கு மதுரை பழங்காநத்தத்தில் அறப்போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்த.
நிலையில் மாலை சரியாக 5.00 மணிக்கு மதுரை பழங்காநத்தத்தில் ஹிந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலை காக்கும் அறப்போராட்டம் நடைபெற்றது காரைக்குடியிலிருந்து மதுரை பழங்காநத்தம் நோக்கி ஹெச். ராஜா உள்ளிட்ட நபர்கள்
சென்றனர் இந்த நிலையில் பழனி செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் காவடிகள் புறப்படத் துவங்கியது. இதில் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியுடன் இந்தப் பிரச்சினை அனுகப்படுகிறது
நேற்று முதல் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்லும் வழியிலும், மலை மீதுள்ள காசி விசுவநாதர் கோயில், சிக்கந்தர் சமாதி எனும் தர்ஹாவுக்கு செல்லும் வழியிலும், கீழேயுள்ள பள்ளிவாசல் முன்பும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இன்று காலை பாஜக பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் மதுரையிலுள்ள வீட்டில் காவலில் வைக்கபட்டார். ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார். இதனிடையே காவல் துறையினருக்கு தெரியாமல் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன் பா.ஜ.க. கொடியுடன் வந்து குழுமி முழக்கமிட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
இந்த சூழலில் ஹிந்து முன்னணி சார்பில் தாக்கல் செயப்பட்ட மனுவை இன்று மதியம் விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆர்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் மதம் மற்றும் தனி நபர்களை விமர்சித்தோ, பிரச்னை ஏற்படும் வகையிலோ ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பக்கூடாதென்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாதென்றும் பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது, ஒரு மைக்கிற்கு மேல் பயன்படுத்தக் கூடாது, கட்சிக் கொடிகள் பயன்படுத்தக் கூடாதென்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர். ஹிந்து அமைப்பினருக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் ஆர்ப்பாட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து மதுரை பழங்காநத்தம் ரவுண்டான பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் குவிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த பகுதியைச் சுற்றிலும் தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்