கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகில்
பூதிமுட்லுவைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற நபர் தனது அத்தைக்கு பங்கு பாகமாகக் கிடைத்த, 4 சென்ட் நிலத்தை பட்டா உட்பிரிவு மாறுதல் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்திருந்த நிலையில் நீண்ட நாட்களாகியும் பட்டா மாறுதல் உட்பிரிவு நில அளவர் மூலம் செய்யப்படாமல் இருந்ததாம். காலதாமதமான நிலையில் நிலையில் பணியை விரைந்து முடிக்க, கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சேர்ந்த,
வேப்பனஹள்ளி சர்வேயர் ஜெயகாந்த் (வயது 29), சுரேசிடம், 4,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் பணி நடைபெரும் எனக் கேட்டாராம்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ், அது குறித்து புகாரை கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்துள்ளார். அதன் பின்ர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் அறிவுரைப்படி பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய, 4,000 ரூபாயுடன் அன்று மாலை சுரேஷ், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சென்று கொடுத்துள்ளார்
அங்கு நின்ற சர்வேயர் ஜெயகாந்த் பணத்தை வாங்கி அவரது உதவியாளர் திலீப்குமார் என்பவரிடம் கொடுத்த போது அங்கே மறைந்திருந்த மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன், ஆய்வாளர் பிரபு மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்கள் இருவரையும் பணம் பெற்ற கையுடன் கைது செய்தனர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர் படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
அதேபோல் திருச்சிராப்பள்ளி கே.கே.நகர் இந்திராகாந்தி தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது 52) ரியல் எஸ்டேட் வர்த்தக புரோக்கர் மற்றும் இயற்கை விவசாயம் செய்கிறார். இவர் திருச்சிராப்பள்ளி கே.கே.நகரில் தனது பெயரில் பேட்மிண்டன் மைதானம் கட்டுவதற்கு மும்முனை மின்சார இணைப்பு வேண்டி மின்வாரியத்திற்கு உரிய வழிமுறைப்படி விண்ணப்பித்திருக்கிறார்.
கே.கே.நகர் மின்சார வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர் (வயது 58) என்பவரை அணுகியுள்ளார். அவர் மின் இணைப்புக் கொடுக்க வேண்டுமானால் ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் கட்டாயம் தர வேண்டும் என கேட்டிருக்கிறார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன், திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறிய அறிவுரைப்படி பினாப்தலின் இரசாயனப் பொடி
தடவிய பணத்தை சீனிவாசன் லஞ்சம் கேட்ட மின்சார வாரியத்தின் உதவி செயற் பொறியாளர் சந்திரசேகர் மற்றும் அவரது தனி உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி (வயது 34) ஆகியோரிடம் கொடுத்த போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மடக்கிப் பிடித்துக் கைது செய்தார்கள். பின்னர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
கருத்துகள்