விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவில் சூலக்கரை மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த அமர்நாத் (வயது 38).
சிவகாசி நகர் தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் உதவியாளராகப் பணியாற்றியவர். ஓராண்டுக்கு முன்னர் அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் அயற்பணியாக பணிபுரிந்த போது, கணிணி தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி பிறரது சிறுகச் சேமித்து வைத்த அஞ்சலக சேமிப்புப் பணம் ரூபாய்.5 கோடியை இவரது தனிநபர் வங்கி சேமிப்புக் கணக்கிற்கு வரவு வைத்து முறைகேடு செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட கணினி வழி குற்றப்பிரிவு காவல்துறையினர் 18.05.2024 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அமர்நாத்தை தேடி வந்தனர். இவரைப் பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் படி, விருதுநகர் மாவட்ட கணிணி வழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோகன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மீனா. சார்பு ஆய்வாளர் பாரதிராஜா, காவலர் பொன்பாண்டி ஆகியோர்கள் கொண்ட காவல்துறை தனிப்படையினர் அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில்.
, தலைமறைவாக இருந்த அமர்நாத் அருப்புக்கோட்டை அருகில் பந்தல்குடி அருகிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் தனிப்படைக் காவல்துறையினர் அமர்நாத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அமர்நாத் விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். அவர் முறைகேடு செய்த பணம் ரூபாய்.5 கோடியில் இதுவரையில் ரூபாய்.4,58,90,068 மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மீதமுள்ள பணத்தை மீட்க கணினி வழி குற்றப் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் அஞ்சல் அலுவலகம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது அதை விசாரணை செய்யும் அதிகாரம் கொண்ட அமைப்பு CBI-ACP அது இனிமேல் விசாரணை நடத்தும்.
கருத்துகள்