சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி நடிகர் இயக்குனர் நாம் தமிழர் கட்சியின் தலைமை
ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 12 வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தொடர்ந்து சீமான் மீதான வழக்கை காவல்துறை விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 15 பேர் விசாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாகச் சம்பந்தப்பட்ட நடிகை விஜயலட்சுமியிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றனர். இதற்கிடையே நாளைய தினம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி வளசரவாக்கம் காவல்துறையினர் சீமானுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீமான் தரப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் முன்வைத்த வாதங்களும், அனைத்து அம்சங்களும் முறையாகக் கருத்தில் கொள்ளவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணையை காவல்துறையினர் 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவுக்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என சீமான் தரப்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகையும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெங்களூர் வசிக்கும் விஜயலட்சுமி அளித்த பாலியல் வன் கொடுமைப் புகாரில் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்திலிருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகர் மற்றும் இயக்குனருமான சீமானுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.நேற்று (பிப்ரவரி 25) இரவு சென்னை வளசரவாக்கம் காவல் துறையினர் பெங்களூர் சென்றனர். ஒரு பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் சென்ற இந்த காவல்துறையினர் சீமான் மீது புகார் அளித்த நடிகை விஜயலட்சுமியை சந்தித்து அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.
முன்னதாக திருவள்ளூர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜராகி குற்ற விசாரணை நடைமுறை சட்டம் பிரிவு 161 ன்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார் நடிகை விஜயலட்சுமி. அதில் கூறப்பட்ட விவரங்களோடு மேலும் கூடுதல் விவரங்களையும் ஆதாரங்களையும் விசாரணைக் குழுவினரிடம் விஜயலட்சுமி ஒப்படைத்து இருக்கிறார். அவற்றைப் பெற்றுக் கொண்ட காவல்துறை சென்னை திரும்பினர். இன்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும் போது, விஜயலட்சுமியிடம் பெற்ற கூடுதல் ஆதாரங்களின் அடிப்படையில் சீமானிடம் விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. ஆனால் ஆஜராவாரா ? தெரியவில்லை
பெங்களூருவில் வைத்து நடிகை விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் தனது புகார் குறித்து விஜயலட்சுமி விரிவாக எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கடந்த 2022 ஆம் ஆண்டு விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.நடிகர் ஸ்ருஜன் லோகேஷ் என்பவருடன் திருமண உறுதி செய்யப் போவதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். மூன்று வருட உறவுநிலைக்குப் பிறகு மார்ச், 2017 இல் திருமணம் நடைபெற இருப்பதாகத் தெரிவித்தார். பின் சில காரணங்களால் திருமண உறுதி நடைபெறவில்லை. நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் உடன் நடிகை கௌதமி திருமணம் செய்து கொள்ளாமல் 13 ஆண்டு காலம் வாழ்ந்து வந்தார் அதுபோல சீமான் நடிகை விஜயலெக்ஷ்மி விவகாரத்தில் நடந்தாக பேசப்படும் நிலையில் அவர் காலங்கடந்த நிலையில் பாலியல் புகார் கூறினாரா என்பதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்
நடிகர் சீமான் ஒன்றும் அவ்வளவு பெரிய தலைவர் இல்லை அது போல நடிகை விஜயலட்சுமி மீதான தவறுகளையும் இங்கு உற்று நோக்க வேண்டும் ய. இந்த நிலையில் இன்று சீமான் நேரில் ஆஜராக வேண்டுமென வளசரவாக்கம் காவல் நிலையத்திலிருந்து சம்மன் அனுப்பி இருந்தனர். அதை அடுத்து சீமான் அங்கு ஆஜராவாரா என்பது எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை சீமான் ஆஜராகாத நிலையில், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. சீமான் தற்போது கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருப்பதால் நேரில் ஆஜராக முடியாது எனவும் காவல்துறையினரின் கேள்விகளை பெற்று அதற்கு பிறகு பதில் அளிக்கப்படும் என கூறுகின்றனர் நாம் தமிழர் கட்சி தரப்பில் வழக்கறிஞர்கள். மேலும் சீமான் சார்பாக அவரது வழக்கறிஞர் ஒருவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் எனவும், வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் சீமானிடம் பெற்று தகவல் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இயக்குனர் மற்றும் நடிகர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போது நடந்த கைது விவகாரத்தில் தொலைக்காட்சி ஊடகங்களின் நடவடிக்கைகள் அருவருக்கத்தக்க வை.
காவல்துறையினர் துப்பாக்கி வைத்திருக்கும் முன்னாள் பணி ஓய்வு பெற்ற இராணுவத்த்தினர் ஒருவருடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதில் கேமராவை நீட்டிக் கொண்டிருக்கிறது......என்ற ஊடகத்தின் செய்தியாளர் சில ஊடகங்களும். தள்ளுமுள்ளு நடந்து கையை உதறினாலே கேமார விசிறியடிக்கப்பட்டுவிடும்.
அந்த அலுவலர் 'கொடுக்கத்தகுந்த மரியாதை'யுடன் தான் பேசுகிறார். உடனே ஊடகங்களைத் தடுக்கிறது காவல்துறை என மைக்கில் பேசுகிறார் ஓர் உரிய பயிற்சி இல்லாத செய்தியாளர்.
காவல்துறை என்ன கண்காட்சியா நடத்துகிறது? குளோசப்பில், வைடு ஆங்கிளில் காட்சிகள் எடுப்பதற்கு அனுமதிக்கவில்லை என்று கேட்பதற்கு?
அதைவிட மோசமானது சீமான் மனைவியும் முன்னாள் அமைச்சர் டாக்டர் கா.காளிமுத்துவின் இரண்டாம் மனைவியின் மகளான கயல்விழி நல்லிரவு உடையான நைட்டியுடன் வெளியில் வந்து காவல்துறை அலுவலரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு திரும்பச் செல்லும் போது அவருக்கு முன் மைக்கை நீட்டுவது? எந்த வகையான
ஊடக தர்மம் பயிற்சி இல்லாத பணியிலுள்ள நிருபர்களுக்கு நிறுவனங்கள் இது அருவறுப்பு எனக் கூற வேண்டும். செய்தி சேகரிப்பு என்பது வேறு என்பது அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வளசரவாக்கம் காவல் நிலைய பாலியல் வன்கொடுமை வழக்கில், காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஒட்டிய சம்மனை கிழித்ததாக நீலாங்கரை காவல் ஆய்வாளர் எதற்காக அந்த வீட்டிற்குச் செல்ல வேண்டும். சம்மனை வாங்க மறுத்து, சீமான் தவிர்த்தால், நீதிமன்றம் வாரண்ட் பிறப்பிக்கப் போகிறது.
BNSS, 2023 – பிரிவு 84 ல் கண்டுள்ள விபரம்:-
84.தலைமறைவு நபருக்கான அறிவிப்பு (Proclamation for person absconding).
(1) ஏதேனும் நீதிமன்றம், தன்னால் வழங்கப்பட்ட வாரண்ட் காரணமாக ஒரு நபர் தப்பியோடினார் அல்லது ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பதைக் காணக்கூடிய காரணம் இருப்பதாக நம்பினால் (சாட்சியங்களை எடுத்த பிறகு அல்லது இல்லாமல்), அந்த வாரண்டை நிறைவேற்ற முடியாத வகையில் இருந்தால், அந்த நபர் ஒரு குறிப்பிட்ட இடத்திலும், ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் (அறிவிப்புத் தேதி முதல் குறைந்தது 30 நாட்கள் கழித்து) சமுகமளிக்க வேண்டுமென ஒரு எழுத்து மூலமான அறிவிப்பை வெளியிடலாம்.
(2) அந்த அறிவிப்பு (Proclamation) பின்வருமாறு வெளியிட வேண்டும்:
(i) (a) அந்த நபர் வழக்கமாக வசிக்கும் நகரம் அல்லது கிராமத்திலுள்ள ஒரு தெளிவாக காணக்கூடிய பொதுவான இடத்தில் பொதுவாகப் படிக்கப்பட வேண்டும்;
(b) அந்த நபர் வழக்கமாக வசிக்கும் வீட்டின் அல்லது வீட்டுத்தொகுதியின் ஒரு தெளிவாக காணக்கூடிய இடத்தில் அல்லது அந்த நகரம் அல்லது கிராமத்தின் ஒரு முக்கிய இடத்தில் ஒட்டப்பட வேண்டும்;
(c) அதன் ஒரு நகல் நீதிமன்ற வளாகத்தின் ஒரு முக்கிய இடத்தில் ஒட்டப்பட வேண்டும்;
(ii) நீதிமன்றம் தேவையானால், அந்த நபர் வழக்கமாக வசிக்கும் இடத்தில் பிரசுரமாகும் தினசரி செய்தித்தாளில் அறிவிப்பையும் வெளியிட உத்தரவிடலாம்.
சிலர், BNS, 2023 சட்டப்பிரிவு. 207-ன் கீழ் சம்மனை கிழித்தது குற்றம் என தவறான விளக்கமளிக்கிறார்கள் எனத் தெரிகிறது. சட்டப்படி ஒட்டப்பட்ட அழைப்பானையை கிழித்தால் தான் பிரிவு 207 பொருந்தும் என்பது குறிப்பிடதக்கது. அதாவது தலைமறைவாக இருப்பவரை தலைமறைவு குற்றவாளி என பிரகடனப் படுத்தும் நடைமுறையின்போது மட்டும் தான் சம்மனை வீட்டில் ஒட்ட முடியும். அப்படி ஒட்டப்படும் சம்மனை கிழித்தால் தான் குற்றமாகக் கருத முடியும்!
நடிகர் இயக்குனர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் absconding Accused கிடையாது!
BNSS, 2023 சட்டபிரிவு. 64(2) -ஐ பின்பற்றாமல் காவல்துறை சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் தரப்பில் தவறு செய்துள்ளார்கள்.
“அழைப்பாணை, சாத்தியமானவரையில், அழைக்கப்பட்ட நபருக்கே தனிப்பட்ட முறையில் வழங்கப்பட வேண்டும், அதாவது, அழைப்பாணையின் நகல் ஒன்றை நேரடியாக வழங்குதல் அல்லது அளித்தல் மூலம் அது மேற்கொள்ளப்பட வேண்டும்”
அடிப்படையிலேயே தவறு! போடப்பட்ட வழக்கும் தவறு! கைதும் தவறு!
சீமான் வீட்டில் சம்மன் ஓட்டப்பட்ட விவகாரத்தில் சட்ட மீறல் நடந்துள்ளது! இது வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது தெரியும். பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் (BNSS) - 'பாரதிய நகரிக் சுரக்ஷ் சன்ஹிதா', 2023, சட்டப்பிரிவு.62 சம்மன் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது:- அழைப்பாணை எப்படி வழங்கப்படும்: (1)அழைப்பாணை ஒவ்வொன்றும் ஒரு காவல் பணி செய்யும் அலுவலரால் வழங்கப்படும், அல்லது இது தொடர்பாக மாநில அரசு உருவாக்கிய விதிகளுக்கு உட்பட்ட வகையில், அதை வழங்கும் நீதிமன்ற அலுவலரால் அல்லது பிற அரசு ஊழியர்ளால் வழங்கலாம்: இதற்காக காவல் நிலையம் அல்லது நீதிமன்றப் பதிவாளர் ஒருவர் பதிவேட்டைப் பராமரிக்க வேண்டும், அதில் முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் மாநில அரசு விதிகளின் மூலம் குறிப்பிடப்படும் பிற விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். (2)அழைப்பாணை வழங்குவதில் சாத்தியமானால், அழைக்கப்பட்ட நபருக்கே தனிப்பட்ட முறையில் வழங்கப்பட வேண்டும், அதாவது, அழைப்பாணையின் நகல் ஒன்றை வழங்க வேண்டும். நேரடியாக வழங்குதல் அல்லது அளித்தல் மூலம் அது மேற்கொள்ளப்பட வேண்டும்: மேலும், நீதிமன்ற முத்திரையின் படிமம் (படம்) கொண்ட அழைப்பாணை மின்னணு தகவல் தொடர்பு மூலம் வழங்கப்படலாம், மேலும் அதன் வடிவம் மற்றும் முறைமை மாநில அரசு விதிகள் மூலம் தீர்மானிக்கப்படும். (3)தனிப்பட்ட முறையில் அழைப்பாணை வழங்கப்பட்ட நபர், வழங்கும் அலுவலர் அழைப்பாணையின் மற்றொரு நகலின் பின்புறத்தில் அதை பெற்று கொண்டதை உறுதிப்படுத்தும் விதத்தில் கையொப்பமிட வேண்டும். “தனிப்பட்ட முறையில்” என்றால் நேரிடையாக அந்த நபரிடம் சார்வு செய்ய வேண்டும் என்பது தெரியாதா? நடிகர் இயக்குனர் சீமான் வீட்டில் நீதிமன்றத்தின் சம்மனை ஓட்ட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதா? எனில் இல்லை? சம்மன் வீட்டில் ஓட்டுவதற்குப் பின் அரசியல் இருக்கிறது! நீதிமன்ற நடவடிக்கைகளில் அரசியல் செய்தது நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது!சம்மனை ஏன் ஒட்ட வேண்டும் னும் அதை ஏன் கிழிக்க வேண்டும்? அவ்வாறு ஒட்டியது சட்டபூர்வ நடவடிக்கை இல்லை! சம்மன் சேவை மேடையில் (வாரண்ட் பிறப்பிப்பதற்கு முன்னர்) காவல்துறை சம்மனை வீட்டில் ஓட்டுவது சட்டப்படி அங்கீகரிக்கப்படாத நடைமுறை. வீட்டில் சம்மனை ஓட்டியது முற்றிலும் தவறாகும். தலைமறைவான குற்றவாளிக்கு, பிரகடனம் செய்யும் நடைமுறையில் (பிரகடனம்) தான் சம்மனை வீட்டில் ஓட்டுவதற்கு சட்டம் வழிவகுத்துள்ளது! ஆரம்ப நிலையில் இருக்கும் ஓரு வழக்கில், தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படாத நபரை, நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காத பட்சத்தில், வீட்டு வாசலில் யார் உத்தரவின் பேரில் சம்மன் ஒட்டப்பட்டது? என்பதே இங்கு எழுவினா?காவல் ஆய்வாளர் நாடார் தான நீ.என்றா கேட்டார் .
அப்படி இல்லை வெளையாடதடா நீ உள்ள போ என்று அந்த போலீஸ்காரர் சொல்கிறார்.
இது பாலிமர் டிவியில் வரும்போது பாஸ்ட் அடிச்சி போட்ருக்கான் நாடார் தான நீ என்று கேட்கிறது.
களத்தில் எடுக்கபட்டட எடிட் செய்யப்படாத வீடியோவை பத்திரிகை செய்தியாளர் அனுப்பியுள்ளார்
அந்த வீட்டில் காவல் காக்கும் செக்யூரிட்டி சீருடை அணியாத காவலரை வெளியே போகச் சொல்லி கதவுக்கு வெளியே வருகிறார் சீருடை அணியாத காவலரும் சீருடை போட்ட அலுவலயும் இடித்துக்கொண்டு அவரைத் தாக்க செக்யூரிட்டி திருப்பி தாக்குகிறார்.
செக்யூரிட்டி துப்பாக்கியை வாகனத்திற்குள் ஏறியதும் எடுத்துக் கொடுக்கிறார் அதை பயன்படுத்தவோ மிரட்டியதாகவோ இல்லை என்பது தெரிகிறது.
சரி சம்மன் ஒட்ட வருகிற காவல்துறை அலுவலர் வீட்டுக்குள்ள புகுந்த ஆட்களை அடிக்கலாம் என எந்த சட்டத்தில் உள்ளது ?
தேவையில்லாமல் யாராவது தாக்கினால் திருப்பித் தாக்குவதோ தடுப்பதோ தான் மனித இயல்பு.நடிகை விஜயலட்சுமி செப்டம்பர் மாதம் 2023 ல் மீண்டும் புகார் கொடுத்தது மட்டுமல்ல மகிளா நீதிமன்றத்தில் 161 வாக்குமூலமும் கொடுத்துள்ளார்
2011 FIR மேல் அப்போது வளசரவாக்கத்தில் விசாரணை மற்றும் சில வாரங்களில் புகாரை திரும்பப் பெற்றார்
2011 FIR & 2023 மகிளா கோர்ட் வாக்குமூலம் தான் சீமான் Quash petition போட்டு சிக்குவதற்கு காரணம் தற்போது சீமான் இங்கு இல்லையெனத் தெரியும், எதுவுமே சொல்லாமல் சம்மனை ஒட்டியுள்ளார்கள்
சம்மனை நான் தான் கிழிக்கச் சொன்னேன், படிப்பதற்காக கிழிக்கச் சொன்னேன்
எங்கள் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் எந்தத் தவறும் செய்யவில்லை என சீமான் மனைவி கயல்விழி தகவல். நடிகர் சீமான் வீட்டில் நேற்று மீண்டும் போலீசார் சம்மனை ஒட்டினர். அதில் பிப்ரவரி 28 ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்மனை வீட்டில் இருந்த உதவியாளர் கிழித்ததாகவும்
காவல் ஆய்வாளரை உள்ளே விடாமல் தடுத்ததால் சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ்க்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காவல் ஆய்வாளர் சீருடை கிழிந்ததாகவும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து காவலாளி அமல்ராஜ் மற்றும் உதவியாளர் சுபாகர் ஆகியோரை கைது செய்தனர். பொது இடத்தில் ஆபாசமாக, அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பொது இடத்தில் பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை முயற்சி, சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளும் பொழுது உரிமம் உள்ள துப்பாக்கியை தொழில் முறையில் பயன்படுத்துதல், துப்பாக்கி உரிமத்தின் நிபந்தனைகளை மீறிச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமானை வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறும் சம்மன் அளிக்கப்பட்டிருந்ததன் படி நேற்று வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால் அரசியல் பணிக்காக வெளியூர் செல்வதால் 4 வார காலம் அவகாசம் கேட்டு சீமான் தரப்பு வக்கீல் மனு அளித்துள்ளார்.
கைதானவர்களை இன்று காலை சோழிங்கநல்லூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு காவலர்கள் ஆஜர்படுத்தினர். அப்போது அமல்ராஜ் மற்றும் சுபாகரை மார்ச் மாதம் 13 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் கைதான அமல்ராஜ் என்ன விவரம் என்று கேட்பதற்குள் காவல் ஆய்வாளர் உட்பட மற்ற காவலரும் தாக்கி ஜீப்பிற்கு அழைத்துச் சென்றதாக வாக்குமூலம் கொடுக்கப்பட்டுள்ளது. அம்ல்ராஜ் மற்றும் சுபாகரை ஜீப்பில் தாக்கியதாகவும் மேலும் வேறு ஒரு இடத்தில் ஜீப்பை நிறுத்தி கடுமையாக தக்கிய பின்னரே காவல் நிலையம் அழைத்துச் சென்றதாகவும் சீமான் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
காவல் நிலையம் அழைத்து சென்றும் இரும்பு ராடால் தாக்கியதில் அமல்ராஜிற்கு கை மற்றும் கால்களில் அடிபட்டதாகவும் அதனை நீதிபதியிடம் காட்டி வாக்குமூலம் அளித்ததாகவும் கூறினார்.
அப்புறம் அனுமதி இல்லாமல் வீட்டுக்குள்ளே புகுந்து மைக்கை நீட்டும் சில மீடியாக்காரர்கள் திருந்தவில்லை எனில் விரைவில் மக்களே அவர்களுக்கு பாடம் புகட்டும் நிலை வரலாம்.
அதிகாரம் எப்போதும் ஒரே பக்கம் இருக்காது பொதுஜனங்கள் ஜனநாயக நாட்டில் மாறுவார்கள்.
மீண்டும் சொல்கிறேன் இந்த நடிகை விஜயலட்சுமி வழக்கால் நடிகர் சீமானை ஒன்றும் செய்ய முடியாது சில நாட்களுக்கு அவமானம் செய்து அதன் அரசியல் பலன் மட்டுமே அடையலாம் என்பது காவல்துறைக்கும் தெரியும் தண்டிக்கும் அதிகாரம் விசாரணை நீதிமன்றம் தான் முடிவு செய்யும். அது உச்சநீதிமன்றத்தில் தான் முடிவாகும் இது நடிகர் சீமானுக்கும் தெரியும். மக்களுக் பரபரப்பான செய்தி மட்டுமே மிஞ்சும்.. இதில் பொதுநீதி யாதெனில்: சீமான் நாம் தமிழர் கட்சியை களைத்தால் பிரச்சினைகள் முடிந்துவிடும். இதில் கடைசி தகவல். இன்று மாலை 6 மணிக்கு சீமான் ஆஜராக உள்ள நிலையில் காவல்நிலையம் வருமாறு நாதகவினருக்கு தலைமையகம் அழைப்பு விடுத்தது. கட்சிக் கூட்டம் வருவதால் காவல் துறையினர் அதிக அளவில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படலாம். விசாரணை முடிவில் கைதாவாரா ? இல்லை பரிசோதனை நடக்குமா ? என்பது தெரியும்
கருத்துகள்