தான் பணி செய்யும் அலுவலகம் தீப்பிடித்து எரிந்ததில் சதித் திட்டம் உள்ளதாக ஏடிஜிபி குற்றச்சாட்டும், டிஜிபி மறுப்பும்
தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் காவல்துறை கூடுதல் இயக்குனராகப் பணி செய்துவரும் கல்பனா நாயக்.
2024 ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் ஐஜியாகப் பணியாற்றிய போது, ஜூலை மாதம் 28-ஆம் தேதி அவரது அலுவலக அறை திடீரெனத் தீப்பிடித்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் அணைத்தனர். இந்த விபத்தில் பல முக்கியமான ஆவணங்கள் சேதமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில் இந்த விவகாரம் குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலுக்கு கல்பனா நாயக் கடிதம் அனுப்பியதில்,"நான் என் அறையைச் சென்று பார்த்தபோது, எனது நாற்காலி எரிந்து, கருகிப் போயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். நான் எனது அலுவலகத்திற்கு சற்று முன்பாக வந்திருந்தால் நான் என் உயிரைக் கூட இழந்திருப்பேன். காவல்துறையினரைத் தேர்வுசெய்வதில் அந்த ஆண்டு மட்டுமல்லாமல் அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இருந்த மிகப் பெரிய தவறுகளைச் சுட்டிக்காட்டியதே என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்குச் சென்றுவிட்டது. "தீ விபத்து நடந்ததற்கு அடுத்த நாள், தன்னை பரிசீலிக்காமலும் தன்னுடைய ஒப்புதல் இல்லாமலும் தேர்வுசெய்யப்பட்டவர்களின் புதிய பட்டியல் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் வெளியானது. மற்ற காவலர்கள் சூழ்ந்திருக்கும்போதே ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாதது காவல்துறையின் மீதே களங்கத்தை ஏற்படுத்துகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
‘தனது அலுவலகம் தீப்பிடித்து எரிந்ததில் சதித் திட்டம் உள்ளதாகவும், தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சதித் திட்டம் நடந்துள்ளதாவும் தெரிவித்திருந்தார். மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திலுள்ள குறைப்பாடுகளை நான் சுட்டிக்காட்டியதால் இந்த சதித் திட்டம் நடந்திருக்கலாம் என தான் கருதுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கின்றன.
தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் தனது அறையில் தீ வைக்கப்பட்டதாக ADGP எழுப்பிய குற்றச்சாட்டை DGP மறுத்துள்ளார். மேலும், பெண் ADGP அறையில் நிகழ்ந்த தீ விபத்துக்கு சதித்திட்டம் காரணமல்ல என விளக்கமளித்துள்ளார். DGP சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் :- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி கூடுதல் DGP கல்பனா நாயக்கிடமிருந்து கடிதம் வந்தது. அது தொடர்பாக உடனடியாக விசாரிக்க சென்னை காவல் துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்து விசாரித்தனர். திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையர், தடயவியல் துறை நிபுணர்கள், தமிழ்நாடு தீயணைப்புத் துறை அலுவலர்கள், தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு மற்றும் தனியார் ஏர்கண்டிஷன் நிறுவன நிபுணர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது. இதனிடையே நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையில், அறையிலுள்ள காப்பர் வொயர்கள் மூலம் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பெட்ரோல், டீசல் போன்ற எளிதில் தீப்பிடிக்க கூடிய எந்த எரிபொருளும் அறையில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே கூடுதல் DGP கல்பனா நாயக்கின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவித சதித் திட்டமும் இல்லை என்று நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்-: 2023-ஆம் ஆண்டு 750 சார்பு ஆய்வாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர்கள் தேர்வு நடைபெற்றதன் முடிவுகள் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 5 விண்ணப்பதாரர்கள் வழக்குத் தொடர்ந்தனர். மேலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இதில் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும் வழிகாட்டுதல் அடிப்படையிலும் தேர்வு முடிவுகள் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்.3-ஆம் தேதி வெளியிடப்பட்டன. எனவே கூடுதல் DGP கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் எந்தவித உண்மையுமில்லை. என கூறப்பட்டிருந்தது. இதனிடையே இந்த பிரச்சினை தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் சீனிவாசலு தலைமையிலான தனிப்படை காவல்துறை தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை 31 பேரிடம் விசாரித்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் DGP கல்பனா நாயக் ஐ.பி.எஸ் அவர்கள் தெரிவித்திருப்பதாக வரும் செய்தியில்
"சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்" என அவரின் கூற்று
ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
உடனடியாக ADGP கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களின் குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ளோர் இருப்பின், அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தி பல்வேறு கட்சியின் தலைவர்கள் தெரிவித்த நிலையில் பெண் ஏ.டி.ஜி.பி திருமதி கல்பனா நாயக் கொலை செய்ய முயற்சி சம்பந்தமாக புகார் மனு கொடுத்துள்ளார்
விசாரணை முடிவில் ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்களின் குற்றச்சாட்டுக்கு நீதி கிடைக்குமா என்பது தெரியும்.
காவல்துறை துணை ஆய்வாளர்கள் நியமனத்தில், தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை, ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள் சுட்டிக்காட்டியதற்குப் அவரது அலுவலகம் எரிக்கப்பட்டிருப்பதாக. சந்தேகம் மேலும் தீ விபத்து நடந்த போது அவர் அங்கு இல்லை என்பதே.
கருத்துகள்