ஊழல் தடுப்புச் சட்டம் நாட்டில் நன்றாகவே வேலை செய்கிறது, ஆனால் அதை அமல் படுத்த வேண்டியவர்கள் மட்டுமே ஆழ்ந்த நித்திரையில் உள்ள நிலையில் தான் நாட்டின் மக்கள் அவதிப்படும் நிலை வருகிறது
ஒரு மாநில முதல்வரின் எல்லா அதிகாரங்களையும் ஒடுக்கி, அவரைக் குற்றவாளி என அடுத்த மாநிலத்தின் தலைநகரில் தண்டனையை அறிவித்தார்
சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா. தீர்ப்பு வெளிவந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவும் இல்லை.
அவர் அரும்பாடுபட்டு வளர்த்த இரட்டை இலையும் அந்தக் கட்சிக்குத் தங்குமா தெரியவில்லை. சில அறிந்த நபர்கள் தவிர சென்னை போயஸ் தோட்டத்தின் வேதா நிலையத்தில் 35 ஆண்டுகால இரகசியங்களைப்போல, அவரது மரணமும் இரகசியமாகவே போனது. செல்வி ஜெ.ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபாவுடன் ஜெயலலிதா எந்த நாளும் மக்கள் முன் அறிமுகம் செய்யவோ அல்லது வெளிக்காட்டவோ அவர் வாழ்ந்த காலத்தில் இல்லை.
ஆனால் அண்ணன் மகள் தீபாவிற்கு நல்ல திருமண வரன் தேடினார். அதில் சிக்கிய ஜாதகம் தான் வி.என்.சுதாகரன் அதற்காகவே தனக்கு சுவீகாரம் செய்தார். இந்த நிலையில் தீபா வேறு முடிவு எடுத்து ஜெயலலிதா சொல் மீறி சில மட சாம்பிராணிகள் வழிகாட்ட துர் காரியம் செய்து பேட்டரிக் என்ற நபரை விரும்பி திருமணம் செய்தார் (அவர் தான் பின்னர் பெயர் மாற்றம் செய்த மாதவன்) இதில் கோபமான ஜெயலலிதா தனது சுவீகாரம் செய்த மகனுக்கு வேறு மணமகள் தேடியதில் கிடைத்த நடிகர் சிவாஜி கணேசன் மகள் சாந்திக்கும் நாராயணசாமிக்கும் பிறந்த பெண்ணைப் பார்த்து பிரமாண்டமான திருமணம் செய்தார். அதுவே அவரது அரசியல் வாழ்க்கை அதுமுதல் மாறியது.
இதுபோல் ஒரு திருமணம் இந்தியாவில் மக்கள் கண்டது இல்லை. தீபா மட்டும் தனது அத்தை பேச்சைக்கேட்டு நடந்திருந்தால் இன்று அவர் தான் தமிழ்நாட்டில் துணை முதல்வர் இது அரசியல் அறிந்த நபர்கள் நன்கு அறிவார்கள். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீவிரமாக தனது தோழிகளின் ஒருவரான தற்போது ஓய்வு ஐஏஎஸ் அலுவலரான சந்திரலேகா முகத்தில் ஏ.சி.எம். கூலிப்படை மூலம் ஆசிட் ஊற்றிய நிகழ்வு டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியை கோபப்பட வைத்தது மற்றும் காஞ்சிபுரம் சங்கர மடம் மடாதிபதி மீதான சங்கர் ராமன் கொலை வழக்கு மீதான ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை அவரது அரசியல் வாழ்க்கையை மாத்திரமல்ல சொந்த வாழ்வியலும் மாறியது மட்டுமல்ல மாற்றியது தான் அரசியல் ஊழல் சொத்துக்குவிப்பு வழக்கு
2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது மைக்கேல் டி குன்ஹா,
கர்நாடக உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் மற்றும் நீதிபதியாக, தனது சட்டப் பணியத் தொடர்ந்தார் சமீபத்தில் அவரது நண்பர்கள் கலந்துகொண்ட விழாவில், ‘ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பைப் பற்றி நினைத்துப் பார்த்ததுண்டா?’ என ஒருவர் கேட்ட நிலையில்,
'நான் ஓர் அரசாங்க பொது ஊழியன். சட்டம் என்ன சொன்னதோ அதை மட்டுமே செய்தேன். மற்ற வழக்குகளைப் போலவே தான் அந்த வழக்கையும் பார்த்தேன். தீர்ப்பு வழங்கியதோடு என்னுடைய பணி முடிந்தது. எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்பையும் அந்த வழக்கில் நான் காட்டவில்லை' என இயல்பாகப் பேசினார். 'இதுதான் குன்ஹாவின் வழக்கம்' என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
இதே சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ.ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி பங்கு
போயஸ் தோட்டத்தை விட்டு ஜெ.ஜெயலலிதா வெளி வர இத் தீர்ப்பு ஒரு காரணமானது. அதேநேரம், 'குமாரசாமி கால்குலேட்டர்' என விமர்சிக்கும் அளவுக்குக் கெட்ட பெயரையும் பெற்றார்.
“சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விடுதலை என தீர்ப்பு வழங்கிய ஓர் ஆண்டிலேயே குமாரசாமி ஓய்வு பெற்றார்.
பொதுவாக, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால், அவரை அரசு சார்ந்த துறைகளின் விசாரணைக் குழுவின் தலைவராகவோ, அல்லது தனி சிறப்பு அலுவலராகவோ அரசு பயன்படுத்தும்.
ஓய்வுக்குப் பிறகு பத்துக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில் பணியாற்ற விருப்பக் கடிதம் கொடுத்த குமாரசாமிக்கு எந்தப் பணியிலும் கர்நாடக அரசு ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
அவருக்குப் பிறகு ஓய்வுபெற்ற நீதியரசர் சந்திரசேகரை (ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்ய மறுத்த நீதிபதி) பல்வேறு அரசுத் துறைகளில் பயன்படுத்தியது கர்நாடக அரசு.
இதனால் மனம் நொந்து போன குமாரசாமி, மத்திய அரசின் இரயில்வே வாரியத்தின் (Accident claim) பணிக்கு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தையும் மத்திய அரசு நிராகரித்தது.
மீண்டும் கர்நாடக அரசின் அட்மினிஸ்ட்ரேஷன் கிரிமினல் (Criminal Justice Administration) என்ற பணிக்கும் விண்ணப்பித்தார்.
இந்தப் பணியையும் சந்திரசேகருக்கு அளித்து குமாரசாமிக்கு மறுத்தது கர்நாடகா அரசாங்கம்.
ஒரே ஒரு தீர்ப்புக்காக ஒருவர் கொண்டாடப்படுகிறார். மற்றவர் நிராகரிக்கப்படுகிறார். காரணம் ஊழல்
‘நீதிபதிகள் பாரபட்சமின்றி, விதிப்படி கடமையைச் செய்ய வேண்டும்; அப்பொழுதுதான் மக்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள்' என்ற சானக்கிய அர்த்த சாஸ்திர வரிகளை மைக்கேல் டி குன்ஹா நன்றாக அறிந்திருக்கிறார். உண்மையும், நீதியும், நேர்மையும் என்றும் காலத்தால் அழிவதில்லை என்பதற்கு இந்தத் தீர்ப்பும் நல்ல எடுத்துக்காடடாகும். ஆனால் இப்போது உள்ள கேள்வி ஜெயலலிதா மட்டுமா ஊழல் செய்தார் என்பது ஆனால் இப்போது ஊழல் செய்து வரும் பலருக்கும் எதிர்காலம் பதில் தரக் காத்திருக்கும். அதிமுக முன்னாள் பொது செயலாளர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் காலஞ்சென்ற ஜெ.ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளில் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து இனிப்பு வழங்கிய பின்னர் அவர் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா (பேட்ரிக்) மாதவன் ஏற்பாட்டில் நடந்த பிறந்த நாள் விழாவில் அதே போயஸ் கார்டன் பகுதியில் வசிக்கும் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி இனிப்பு வழங்கிய நிலையில்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு அவரது பிறந்தநாளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி இருக்கிறார் - இது வரை மூன்று அல்லது நான்கு முறை ஜெயலலிதா உயிருடன் இருந்த போது சென்றுள்ளார் ..
இன்று அவர் இறந்து பல வருடங்கள் செல்லாமல் - இங்கே செல்ல வேண்டிய அவசியம் அதில் தான் அரசியல் ஒழிந்துள்ளது.
நேரிடையான அதிமுக , ஜெயலலிதா பெயரை பயன்படுத்தி அரசியல் செய்கிறவர்கள் கூட அங்கே செல்லுவதில்லை.. அதனால் எவருக்கும் தற்போது பயன் இல்லை என்பதால் ..
அப்படி இருக்கும் போது ரஜினிகாந்த் மட்டும் அங்கே சென்று பெரிதாக எதையும் அடைய போவதில்லை ..
ஒரே ஒரு விஷயம் .. ஏதோ ஆளும் தரப்புடன் பிரச்சனை ..
ஆளும் திராவிட கழகத்திற்கு ஏதோ ஒரு எதிர்ப்பை தகவலை அவர் தெரிவிக்கிறார் என்று கருத்தாக கொள்ள வேண்டி இருக்கிறது . தீபா மற்றும் தீபக் உடன் நடிகர் ரஜினி காந்த் மட்டுமே சந்தித்திருந்தால் பேசு பொருளாக மாறியிக்காது ஆனால் பெங்களூர் புகழேந்தி உடன் இணைந்து இருக்கும் நிலையில் அதில் தான் நடப்பு அரசியல் கலந்துள்ளது . சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற மராட்டிய சரபோஜி வழி வந்த ஒருவர் கர்நாடக மாநிலத்தில் படித்து வளர்ந்து பேரூந்தில் நடத்துனர் பணி செய்து பிறகு ரஜினிகாந்த் என பெயரை மாற்றி இயக்குனர் கே.பாலச்சந்தரால் திரைத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து வளமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் வெகு நாட்களுக்கு முன்பிருந்து அரசியலுக்கு வருகிறேன் என்றார்! வராமலும் போவேன் என்றார். வந்தாலும் வருவேன் என்று இன்னும் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். 75 வயதை எட்டிய நிலையில் உள்ள கதாநாயகனாக தனக்குப் பெரும் ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டில் இன்றிருக்கும் நிலையில் இவர் போன போக்கில் இன்று போயஸ் கார்டனில் உள்ள செல்வி ஜெ ஜெயலலிதாவின் வீட்டிற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தி விட்டு வருகிறார்! சரிதான்! ஒரு அரசியல் நாகரிகமான செயல் தான்! ஏற்றுக் கொள்வோம்!. ஆனால் இதே ரஜினிகாந்த் தான் 1996 ஆம் ஆண்டில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை “ஆண்டவனாலும் இனி காப்பாற்ற முடியாது” என்று சொல்லி ஜெ.ஜெயலலிதா ஆட்சியை குரல் (வாய்ஸ்) கொடுத்து ஊழல் ஆட்சியைத் தோற்கடித்தார். அது மட்டுமல்ல அதே குழந்தைகளைப் போன்றவர்கள் இணைந்து உருவாக்கிய மதிமுக மூலம் ஒரு மிகச்சிறந்த அரசியலை முன்னெடுத்துச் செல்லுங்கள் கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்தித்த போது ஒரு 20,30 சீட்டுகள் கிடைத்திருக்கக் கூடிய சூழலில் அதையும் இவர் தான் குரல் (வாய்ஸ்) கொடுத்துக் கெடுத்தார் அனைத்தையும் நாசம் பண்ணினார். திமுகவையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து அவற்றுக்குப்பதிலாகத் தான் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாகத் தொடர்ந்து அறிவித்தார். பிறகு வர முடியாது சிஸ்டம் சரியில்லை என்றும் சொன்னார். இப்போது செல்வி ஜெ.ஜெயலலிதா இல்லத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தி விட்டு வருகிறார்.
அதற்கு முன்பு கலைஞர் மு.கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்குப் போய் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டும் வருகிறார் . மேலும் குருமூர்த்தி நடத்தும் சோவின் குடும்ப துக்ளக் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்! இப்படியாகத் நடிப்பில் கதாநாயகனாக இருந்து அரசியலில் கோமாளியாகிப் போன ஒருநபர் தமிழ்நாட்டு மக்களின் முன்பு வேடிக்கை காட்டிக் கொண்டிருப்பதற்காகவா இவர் தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொன்னார். ஏதோ அரசியல் வரலாற்றுத் தத்துவங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்தவர் போல இவர் தமிழ்நாட்டு அரசியலுக்குள் திரிவது ஒரு பெரிய வேடிக்கையாகத் தான் இருக்கிறது இப்படித்தான் இவரது அரசியல் அவ்வப்போது வந்து போயும் இருந்து வருகிறது. அவருக்கு சினிமாவில் புகழ் இருக்கிறது என்பது வேறு! அந்த அளவோடு நிறுத்தி இருக்கலாம். ஆனால் இப்போது நடப்பது அரசியல் அறிவார்ந்தவர்கள் பார்க்க முடியாதது.
சசிகலா நடராஜன் தரப்பில் பிரதிநிதிகள் தான் இப்போது அரசியல் களத்தில் அதிமுகவில் பொதுச்செயலாளர் எனக் கூறும் எடப்பாடி கே பழனிச்சாமியை முந்துகிறார்கள். விரைவில் தீர்ப்பு வர உள்ள நிலையில் தற்போது ஜாக்கி வாசுதேவ் நடத்தும் வெள்ளியங்கிரி சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுகவில் உள்ள வேலுமணி சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. பிறவிப் பெருங்கடலன்றி மரணம் கடப்பதும் அரிது.முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள்
கொண்டாடப்படுகிறது.இறந்தவர்களுக்கு கடந்த காலத்தில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இல்லை நினைவு நாள் மாத்திரம் தான் சிறப்பு ஆனால் தற்போது அணைவரும் கொண்டாடும் நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எனக் கூறும் இணை ஒருங்கிணைப்பாளர் (நீதிமன்றத்தில் தீர்வு வரும் வரை )எடப்பாடி கே பழனிசாமி, அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
எனினும், இந்த நிகழ்ச்சியின் அதிமுக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.ஏ.செங்கோட்டையன், இந்த முறை பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்திலுள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கே.ஏ.செங்கோட்டையன் சட்ட மன்ற உறுப்பினர் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார். இதைத் தொடர்ந்து கோபி செட்டிபாளையத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், "நினைவு நாளாக இருந்திருந்தால் நான் சென்னை சென்றிருப்பேன். பிறந்த நாள் என்பதால் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியால் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வர உதவிகரமாக இருக்கும்." என்றார்.இந்த நிலையில்எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு வேலுமணியின் செயல்கள் பிடிக்காததால் .அதை பற்றிக் கவலைபடாமல் கோயம்புத்தூர் வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை செங்கோட்டையன் ஓ.பன்னீர் செல்வத்துடன் சந்தித்துப் பேச வேலுமணி திட்டம். அதனால் எடப்பாடி கே. பழனிச்சாமி வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கிறார். வேலுமணி எதிர்ப்பாளர்களுக்குப் பதவி தரபோகிறார், வேலுமணி தனது இல்லத் திருமண அழைப்பிதழுடன் பணம் கொடுத்து அழைக்கிறார். அதை செய்யும் அம்மன் அர்ஜுன் பினாமி வீடுகளில் சோதனை! அந்த சோதனையைக் கண்டித்து வருகிறேன் என்கிற சாக்கில் செங்கோட்டையன் அமைச்சர் அமித்ஷாவை வேலுமணியுடன் சேர்ந்து சந்திக்கிறார். ஏற்கனவே உடைந்த அதிமுகவில் மோதல் தற்போது உச்சகட்டத்தில் நடக்கிறதுவி.கே.சசிக்கலா நடராஜன் வசம் அதிமுக வருகிறது பாஜக. சசிக்கலாவுக்கு அவர் கேட்ட அதிமுக பொதுச்செயலாளர் தலைமையைத் தர நாட்டாமை செய்யும் கட்சி சார்பில் முடிவு செய்துள்ளதாக வே தெரிகிறது பாஜக. இந்த கிவ் அண்ட் டேக் பாலிசி ன் எதிர்வினையாக சசிகலா களத்தில் இறங்கி அதிமுகவில் மாவட்டச் செயலாளர் தொடங்கி நிர்வாகிகள் வரை புதிதாக நியமிக்க பட்டியல் தயார் செய்திருக்கிறாராம்! இதுவே எடப்பாடி கே பழனிச்சாமிக்கு கிளியை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள்