தமிழ்நாடு ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் வழக்கில் இரு முக்கியமான குற்றவாளிகளை என்ஐஏ கைது செய்தது.
ஆறு இடங்களில் நடத்திய சோதனைகளின் விவரங்கள் தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புத் தஹ்ரீரின் செல்வாக்கை அகற்றுவதற்கான ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.
NIA இன் இந்த சோதனை அதிகாரப்பூர்வமான அறிக்கையின்படி சென்னை, மன்னார்குடி உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் என்ஐஏ அலுவலர்கள் சோதனையில் ஈடுப்பட்டதில்
மன்னார்குடியில் பாபா பக்ருதீன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டிலிருந்து ஒரு பென் டிரைவ் மற்றும் வங்கிக் கணக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில்
உறுப்பினராக இந்ததாகக் கூறப்படுகிறது.காலையிலேயே காவல்துறை பாதுகாப்புடன் 5 மணி நேரத்துக்கும் மேலாக என்ஐஏ சோதனை நடைபெற்றது. தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக வந்த தகவலின் பேரிலும், ஏற்கனவே கிடைத்த தகவலின் அடிப்படையிலும் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின. தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக வந்த தகவலின் படி, சென்னை, மன்னார்குடி உள்ளிட்ட 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் மன்னார்குடியில் ஒரு வீட்டில் நடந்த சோதனையில், பாபா பக்ருதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாபா பக்ருதீனிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் என்ஐஏ அலுவலர்கள் சோதனை நிறைவடைந்த பிறகே, இது தொடர்பான முழு விவரம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது
கருத்துகள்