மதுரை எஸ்.எஸ்.காலனி
தங்கமுருகன் மகள் கவிதா, சில மாதங்களுக்கு முன், ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜீவாநகர் பகுதியில் வசித்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் நடந்த ஒரு அடிதடி வழக்கு தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் கவிதா புகார் அளித்ததில், தொடர்புடைய 2 நபர்களைக் கைது செய்தனர். மேலும் இருவரைத் தேடிவந்தார்கள். அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு, ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றும் சண்முகநாதன்(வயது 35) லஞ்சம் கேட்டதாக கவிதா, மதுரை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தார்.
அதையடுத்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சத்தியசீலன், ஆய்வாளர்கள் குமரகுரு, ரமேஷ்பிரபு, சூர்யகலா ஆகியோர் கொண்ட குழுவின் ஆலோசனைப்படி, பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய கவிதா தந்த பண நோட்டுகளை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர்,
கவிதாவிடம் கொடுத்து. லஞ்சம் கேட்ட நபரிடம் அந்தப் பணத்தை அரசு சாட்சிகள் முன்னிலையில் கொடுக்கக் கூறிய நிலையில் அதைப் பெற்றுக் கொண்ட கவிதா, இரவு மதுரை புதூர் பகுதிக்கு சென்ற போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த காவல்துறை சார்பு ஆய்வாளர் சண்முகநாதன், கவிதாவிடமிருந்து பணத்தை வாங்கி மோட்டார் சைக்கிளின் முன் பையில் வைத்துள்ளாராம்.
உடனே அந்த பகுதியில் மறைந்திருந்த, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், பணம் பெற்ற கையுடன் சண்முகநாதனைக் கைது செய்தனர். தொடர்ந்து சண்முகநாதனிடமிருந்த பணத்தை மீட்டு, அவரிடம் விசாரணை நடத்தினர். லஞ்சப் புகாரில் கைதான சார்பு ஆய்வாளர் சண்முகநாதன் சில ஆண்டுகளுக்கு முன்பு சிறந்த பணிக்காக மாவட்ட ஆட்சியர் விருது பெற்றவர் என்கிறது ஒரு தகவல். சார்பு ஆய்வாளர்
சண்முகநாதன் ரூபாய்.1 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், பின்னர் ரூபாய்.70 ஆயிரம் கொடுத்தால், தங்களுக்குச் சாதகமாக செயல்படுவதாக கூறினாராம். மேலும், முன்பணமாக ரூபாய்.30 ஆயிரத்தை, புதூர் பகுதியில் வைத்து கொடுக்கும்படி, கவிதாவிடம் கூறினாராம்.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது சிறையில் உள்ளார்.
கருத்துகள்