தமிழ்நாடு அரசு கூட்டுறவு பால் நிறுவனம் ஆவினில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 33 பேருக்கு
வேலை தருவதாகக் கூறி அதற்கு லஞ்சம் பெற்றதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சரான கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்ததன் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை டெல்லியிலுள்ள சிபிஐ அலுவலர்கள் பதிவு செய்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கின்றன 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக கே.டி. ராஜேந்திர பாலாஜி என்ற நபர் பதவி வகித்தார். அவரது பதவிக் காலத்தில் ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை தருவதாகக் கூறி 33 பேரிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப்
புகார் எழுந்ததையடுத்து இவர் மீதும், அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை 2021ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஆனால் கே.டி.ராஜேந்திர பாலாஜி
முன்னாள் அமைச்சர் எனும் அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்துவதால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதப்படுத்துகிறார். எனவே இந்த வழக்கில் நியாயம் இப்போது வரை கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார்தாரர் இரவீந்திரன் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர் நீதிமன்றம் விரைந்து குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால், தமிழ்நாடு காவல்துறையிடமிருந்து கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
ஆவினில் கடந்த அதிமுக ஆட்சியில் 33 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி, மாரியப்பன் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அடுத்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள்