"வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே". - பாசுரம் வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர்
ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோவிலில் தெப்பத் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
மதுரை பாண்டிய நாட்டுத் திருத்தலங்களில் இடம்பெற்றுள்ளது. முவரும், தேவர்களும், ரிஷிகளும் கூடி ஹிரண்யகசிபுவைக் அழிக்க உபாயத்தைக் கண்டறிந்த இடமாக இந்தஸ்தலம் கோஷ்டி (கூட்டம்) கூடிய இடமாக அமைந்ததால் திருக்கோஷ்டியூர் என்று அழைக்கப் பெற்றது. மஹாவிஷ்ணு நரசிம்மராக அவதரித்து ஹிரண்யகசிபுவை அழித்தார். இங்கு அமைந்த திருக்கோஷ்டியூர்
சௌமியநாராயணப் பெருமாள் கோயில் நான்கு புறமும் பெருமதில்கள் சூழ்ந்த, உயர்ந்த இராஜகோபுரத்தோடமைந்த பெருங்கோவிலாகும். பெருமாளின் நின்ற, நடந்த, இருந்த முக்கோலங்களும் அமைந்துள்ளது. திருவரங்கத்திலிருந்து ஆச்சாரியார் இராமானுஜர் 17 முறை திருக்கோஷ்டியூர் வந்து நம்பியிடம் உபதேசம் பெற முயன்று சந்திக்க இயலாது திரும்பிய நிலையில்
18 வந்து முறை வந்து உபதேசம் பெற்றார் (நான் செத்து வா ) அடியேன் என்பது அடக்கம் நான் என்பது அகந்தை இந்த நிலையில் இராமானுஜர் பொதுமக்கள் அனைவருக்கும் கருவரை விமானம் மீதேறி உபதேசம் செய்தார் இது வரலாறு. தற்போது அந்த கோபுரம் விமானம் தங்கத் தகடுகள் பொறுத்தும் பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில் தெப்பத்திருவிழா
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலர் மேதகு இராணி டி எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் ஆளுகைக்கு உட்பட்ட
திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெரும் மாசி மகத் தெப்பத்திருவிழா இந்தாண்டு மார்ச் மாதம் 5-ஆம் தேதி துவங்கியது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிம்ம வாகனம், ஹனுமன் வாகனம், கருட சேவை, சேஷ வாகனம்,
திருவீதி புறப்பாடு, ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி, சூர்ணாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்ததில் தமிழ்நாடு எங்கும் இருந்து பல மாவட்டங் களைச் சேர்ந்த பல லட்சம் வைணவ பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. -விளம்பரம்-
-விளம்பரம்- பௌர்ணமி அன்று காலையில் தங்க தோளுக்கினியான் அலங்காரத்தில் திருவீதியுலா புறப்பாடு நிகழ்ச்சியும், பகலில் தெப்ப நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தில் சுவாமி உலா நிகழ்ச்சியும் நடை பெற்றதில் தமிழ்நாடு முழுவதுமிருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பெண்கள் பிராத்தனை வேண்டுதல்கள் நிறைவேற தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள நான்கு கரைகளில் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். -விளம்பரம்- -விளம்பரம்-நேற்று முன்தினம் காலை கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியுடன் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது. விழா
ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவ லர் இராணி டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் உத்தரவில் தேவஸ்தானத்தின் மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் சரக தேவஸ்தானத்தின் கண்காணிப்பாளர் சர வணகணேசன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்களின் வாகனங்கள் நெரிசல் ஏற்படுத்திய நிலையில் போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நிகழ்வு உள்ளிட்ட வேறு நிகழ்ச்சியும் இருந்த நிலையில் காவல் துறை பங்களிப்பு குறைவாகவே இருந்தது மாவட்ட நிர்வாகம் பிற மாவட்டங்களில் உள்ள காவல்துறை உதவியைப் பெறாது உள்ளூர் காவல்துறை போக்குவரத்தை சரிசெய்ய சிரமப்பட்டனர்.
தற்காலிகமாக அமைந்த திருவிழா கடைகள் சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்த நிலையில் வெளியூர் வரவு பக்தர்கள் வழி நெடுக சிரமப்பட்டு தான் தெப்பத்திருவிழா காணவேண்டிய நிலை ஏற்பட்டது. "பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
கருத்துகள்