கடந்த 04.11.2021 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த
திரைப்படத்தை சென்னை காசினோ திரையரங்கில் பார்ப்பதற்காக 30 அக்டோபர் 2021 ஆம் தேதியன்று
முன்பதிவு 'டிக்கெட் நியூ' இணையதளம் மூலம் பதிவு செய்த
சமூக ஆர்வலர் கோ. தேவராஜனிடம். காசினோ திரையரங்கு ரூபாய் 159.50 காசு வசூலித்த தாகவும். இது தமிழ்நாடு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக உள்ளது என்பதால் சென்னை நுகர்வோர் குறைத்தீர் ஆணையர் (வடக்கு)
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் வழக்கினை விசாரணை செய்த ஆணையத்தின் தலைவர் கடந்த 25 நவம்பர் 2024 ஆம் தேதியன்று விசாரணையை முடித்து
உத்தரவினைப் பிறப்பித்ததில் மன உளைச்சல்கள், சேவைக் குறைப்பாடு இழப்பீட்டுத் தொகை மற்றும் வழக்கு செலவு தொகை சேர்த்து ரூபாய் 12,000/- வழங்கிட வேண்டுமென்றும் தவறும் பட்சத்தில் 9 சதவீதம் வட்டியுடன் மனுதாரருக்கு வழங்க வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்தார்.
கருத்துகள்