ரூபாய் 16 கோடி மோசடி மாவட்ட வருவாய் அலுவலர் சென்னையில் கைது.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தில் (டிட்கோ) வருவாய் அலுவலரான சூர்யப்பிரகாஷ் சென்னை மாநகராட்சியின் அம்மா உணவகத்தின் இயக்குனர் பொறுப்பிலும் சில ஆண்டுகள் பணியாற்றினார். 4 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றிய போது கரூர் நல்லமுத்து எனும் நபரிடம் அஸ்ஸாமில் கொசுவலை மற்றும் சூரிய மின்சக்தி பேனல் நிறுவுவதற்கு உத்தரவு பெற்றுத் தருவதாகக் கூறி, 3 தவணைகளில் ரூபாய்.16 கோடி வரை பணம் பெற்றதாகத் தெரிகிறது. பணம் பெற்றுவிட்டு உத்தரவு பெற்றுத் தராததால் கரூர் மாவட்டக் குற்றப்பிரிவில் நல்லமுத்து புகார் அளித்ததன் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில்
கரூர் மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல்துறைக் கண்காணிப்பாளர் முத்துகுமார் தலைமையிலான தனிப்படையினர் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷை சென்னையில் இன்று காலை கைது செய்தனர். விசாரணைக்காக இன்று மாலை கரூர் அழைத்து வரப்பட்ட சூர்யபிரகாஷிடம் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியதன் பின்னர்
கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடத்தி கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-1 ல் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்படுத்தியனர், சூர்யபிரகாஷை ஏப்ரல் 11 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
கருத்துகள்