முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2025-26 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல்

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண்மை நிதிநிலையை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று காலை தாக்கல் செய்து உரையாற்றினார்.

அதற்கு முன்னதாக, சென்னை மெரீனாவில் உள்ள டாக்டர் சி.என்.அண்ணாதுரை, டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து பங்கேற்றனர்.

வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள் என்பதால் விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது

ரூபாய்.42 கோடி செலவில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் ஆலோசனைகள் வழங்கிட வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் மூலம் 1000 முதல்விரின் உழவர் நல சேவை மையங்கள்.

நெல் உற்பத்தியினை அதிகரித்திட ரூபாய்.160 கோடி ஒதுக்கீடு

ரூபாய்.102 கோடியில் முதல் முறையாக 34 இலட்சம் ஏக்கரில் டெல்டா அல்லாத மாவட்டங்களில் செயல்படுத்துதல்

ரூபாய்.58 கோடி செலவில் டெல்டா மாவட்டங்களில் 18 இலட்சம் ஏக்கரில் செயல்படுத்துதல்.


இயற்கை சீற்றங்களால் பயிர் பாதிப்பிலிருந்து உழவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ரூபாய்.841 கோடி ஒதுக்கீட்டில் பயிர் காப்பீட்டுத் திட்டம்.

2024-25 ஆம் நிதியாண்டில் அரவை பருவத்தில் 1 இலட்சத்து 30 ஆயிரம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூபாய்.349 சிறப்பு ஊக்கத்தொகை - ரூபாய்.297 கோடி. 3 இலட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்திட உழவு மானியமாக ரூ.24 கோடி

நுண்ணீர் பாசனத்திட்டம் - 3 இலட்சம் ஏக்கர் பரப்பிற்கு ரூபாய்.1,168 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் முதல் முறையாக முந்திரி வாரியம் உருவாக்கம் - ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

முதன் முறையாக 20 உழவர் சந்தைகளில் பசுமைக் காய்கறிகளை நுகர்வோர் தங்கள் இல்லங்களில் நேரடியாக பெற்றுக்கொள்ள உள்ளூர் இணைய வர்த்தகத் தளத்துடன் (Online Door Delivery) இணைக்கப்படும்.


வேளாண் விளைபொருட்களுக்கான நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். 17,000 உழவர்கள் பயனடையும் வகையில் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்திற்காக ரூ.215 கோடியே 80 இலட்சம் ஒதுக்கீடு

63 ஆயிரம் மலைவாழ் ஆதிதிராவிட பழங்குடியினருக்கு மலை வாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்திட ரூபாய்.22 கோடியே 80 இலட்சம்

 முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம் திட்டம் 15 திட்டக் கூறுகளுடன் செயல்படுத்திட ரூபாய்.142 கோடி ஒதுக்கீடு

2,338 கிராம ஊராட்சிகளில் தன்னிறைவு பெற்று உழவர் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடும் உன்னத முயற்சியில் ரூபாய்.269 கோடியே 50 இலட்சம் ஒதுக்கீட்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.

வேளாண்மை விளைபொருட்களுக்கு 100 மதிப்புக் கூட்டும் அலகுகள் அமைத்திட முதற்கட்டமாக ரூபாய்.50 கோடி ஒதுக்கீடு. இதற்கு அதிகபட்சமாக அலகு ஒன்றுக்கு 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

ரூபாய்.50 கோடியே 79 இலட்சம் மதிப்பீட்டில் 11 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படும்.

மக்காச்சோளம் விவசாயிகள் அதிக வருமானம் பெற 1,87,000 ஏக்கர் பரப்பளவில் ரூபாய்.40 கோடி ஒதுக்கீட்டில் மக்காக்சோளம் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் செயலாக்கம் நிலக்கடலை, எள், சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் 90 ஆயிரம் விவசாயிகள் ரூபாய்.108

கோடியே 6 இலட்சத்தில் பயனடையும் வகையில் எண்ணெய் வித்துக்கள் இயக்கம்.

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ரூபாய்.52 கோடியே 44 இலட்சத்தில் செயல்படுத்தப்படும்.

உயிர்ம வேளாண்மையினை (Organic Farming) பரவலாக்கம் செய்திட ரூபாய்.12 கோடி ஒதுக்கீடு.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பண்ணை சுற்றுலா

ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியின சிறு, குறு உழவர்களுக்கு கூடுதல் மானியம் வழங்க ரூபாய்.21 கோடி ஒதுக்கீடு

குறைந்த நீர்த்தேவையுள்ள பயிர்களை ஊக்குவித்திட ரூ.12 கோடியே 50 இலட்சம் ஒதுக்கீட்டில் மாற்றுப்பயிர் சாகுபடித் திட்டம்

தளர்வில்லா விளைச்சல் பெற தரமான விதை உற்பத்திக்கு ரூபாய்.250 கோடி ஒதுக்கீடு

ரூபாய்.12 கோடியே 21 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் பருத்தி உற்பத்தி பெருக்கத் திட்டம்

“தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை”  உயர் மதிப்பு மரங்களை வளர்ப்பதற்கும், அதனை பதிவு செய்து வெட்டுதல் மற்றும் விற்பனைக்கு எடுத்து செல்லுதல் போன்ற அனைத்து நடைமுறைகளையும் எளிதாக்கி பசுமை தமிழ்நாட்டை உருவாக்குதல். ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் ரூபாய்.125 கோடியில் - வீட்டுத் தோட்டத்திற்காக - காய்கறி விதைகள், பழச்செடிகள், பயறு வகைகள் ஆகிய 25 இலட்சம் தொகுப்புகள் வழங்கப்படும்.

4,000 நடமாடும் காய், கனி விற்பனை வண்டிகள் மானியத்தில் வழங்கப்படும்.

 ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டம் ரூபாய்.35 கோடியே 26 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூபாய்.10 கோடியே 50 இலட்சம்.

காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப் பகுதிகளிலும், கல்லணை பகுதிகளிலும் உள்ள “சி” மற்றும் “டி” கால்வாய்களில் தூர்வாரும் பணிகளில் மீதமுள்ள 2,925 கிலோ மீட்டர் நிலத்திற்கு ரூபாய்.13 கோடியே 80 இலட்சம் ஒதுக்கீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

 முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டம் ரூபாய் 24 கோடி செலவில் 1000 விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

நெல், மக்காச்சோளம், வாழை, நிலக்கடலை, உளுந்து ஆகிய பயிர்களுக்கு விதைப்பு முதல் அறுவடை முடிய உள்ள சாகுபடியில் இயந்திர மயமாக்குதலை கடைபிடிக்க 1,500 ஏக்கர் பரப்பளவில் ரூபாய். 3 கோடி ஒதுக்கீட்டில் இயந்திர சாகுபடி செயல் விளக்கத் திடல்கள் (Demonstration Plots) அமைக்கப்படும்.

ரூபாய். 20 கோடி மதிப்பீட்டில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் 9 ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்படும் 56 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூபாய்.39 கோடியே 20 இலட்சம் செலவில் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் புதியதாக ஒருங்கிணைத்து, உழவர்கள் தேசிய அளவில் வர்த்தகம் செய்து, கூடுதல் வருமானம் பெற வழிவகை செய்யப்படும்.

50 உழவர் சந்தைகளில் ரூபாய்.8 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்துதல்

வட்டாரந்தோறும் தேர்வு செய்யப்பட்ட பொது சேகரிப்பு மையங்களில் வேளாண்மை வர்த்தகம் நடத்திட ஏற்பாடு செய்யப்படும்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு பொருளீட்டுக் கடன் ரூ.10 இலட்சம் வரை வழங்கப்படும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் புதிய கண்டுபிடிப்பிற்காக டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதியாக ரூபாய் 1 கோடி ஒதுக்கீடு.வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையொட்டி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதோடு பாமக உறுப்பினர்கள் அனைவரும் பச்சைத் துண்டு அணிந்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன் நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் தவிர மற்ற திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பச்சைத் துண்டு அணிந்தனர். வேளாண்மை நிதிநிலை அறிக்கை குறித்து குறித்து எதிர் கட்சிகள் கருத்து வருமாறு:-  இந்த வேளாண் பட்ஜெட்டில் முளைக்காத விதை, உபயோகமற்ற உயிர் உரங்கள் என முறைகேடு செய்வதற்கான வசதியான திட்டங்களைத் தவிர, விவசாயிகளுக்கு பயன்படும் எந்தவிதமான திட்டமும் இல்லை. விவசாயிகளுக்கு என்று தனியாக வேளாண் பட்ஜெட் என்பது போலியானது. விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட். விவசாயிகளை ஏமாற்றுவதில் தி.மு.க.,வினர் வல்லவர்கள் என்று நிரூபித்துள்ளனர். தனி பட்ஜெட் என்று கூறி விவசாயிகளை தி.மு.க., அரசு ஏமாற்றி உள்ளது. வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நன்மை என்று எதுவும் இல்லை. என எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக சார்பில் எடப்பாடி  கே.பழனிசாமி விமர்சித்துள்ளார்  பாட்டாளி மக்கள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர், ஜி.கே மணி

வேளாண் பட்ஜெட்டில் சிறுதானிய உற்பத்திக்கு முன்னுரிமை அளித்துள்ளதை வரவேற்கிறோம். வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு விற்பனைக் கிடங்கு அமைக்க வேண்டும் என்றார்.

பாரதிய ஜனதா கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்., வானதி சீனிவாசன்

வேளாண் பட்ஜெட்டில் ஒவ்வொரு தலைப்பின் கீழ் பார்த்தால் சிறு தானியங்கள் உள்ளிட்டவற்றில் கூடுதலாக தொகை ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்கள்.

பிரதமர் மோடியின் திட்டங்களை இவர்கள் அமல்படுத்துகிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

பருவ கால பாதிப்பு உள்ளிட்டவற்றிக்கு ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்வதற்காக ஒரு பெரிய திட்டங்கள் ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. என்றார்.  இதில் பொது நீதி யாதெனில்:- பச்சை துண்டு போடுவதால் மட்டும் பூமியில் பசுமை வருமா என்பதே எழுவினா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...