இந்திய ராணுவத்தின் டி-72 ரக பீரங்கிகளுக்கு எஞ்ஜின் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கையெழுத்து
டி -72 ரக பீரங்கிகளுக்கு 248 மில்லியன் டாலர் மதிப்பில் 1000 ஹெச்பி திறன் கொண்ட என்ஜின்களை வாங்குவதற்காக ரஷ்ய கூட்டமைப்பு நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் "இந்தியாவில் உற்பத்தி செய்வோம்" என்ற முன்முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனத் தொழிற்சாலை நிறுவனத்திற்கு தொழில்நுட்ப பரிமாற்றமும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
டி-72 ரக பீரங்கிகள் தற்போது 780 ஹெச்பி எஞ்ஜின் மூலம் இயங்கி வருகின்றன. இதை 1000 ஹெச்பி என்ஜின் திறன் கொண்டதாக மாற்றுவதன் மூலம் இந்திய ராணுவத்தின் போர்க்கள வலிமை அதிகரிக்கும்.
கருத்துகள்