தமிழ்நாடு அரசின் சிறந்த பத்திரிகையாளர் விருது பெற்றிருக்கும் திரு. நக்கீரன் கோபால் அவர்களுக்கு பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் சார்பில் வாழ்த்துக்கள்
புலனாய்வுச் செய்தியின் பிள்ளையார் சுழி ஆசிரியர் ஷ்யாம் அவர்களின் தராசு வார இதழில் லே அவுட் கலைஞராகத் துவங்கி, அந்தக் குடும்பத்தின் அங்கத்தினராகி தமது தனித்த திறமையால் அரச மரமாகத் தழைத்து நிற்கும் அண்ணன் நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்கள் தமிழ்நாடு அரசு உரிய காலத்தில் பெருமை சேர்த்திருக்கிறது.நாமார்கும் குடியல்லோம் நமனையஞ்சோம் என்ற கொள்கையில் வெளிவந்த இதழ் தராசு அதில் அடையாளம் பெற்ற அனைவருக்கும் பூரிப்புக் கொள்ளும் நாளாக அமையும் மேலும்
நியூஸ் 7 செய்தித் தொலைக்காட்சி ஆசிரியர் சகோதரி சுகிர்தாவுக்கும் விருது கிடைத்தது. வாழ்த்துக்கள்.பழைய இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பின்னர் பிரிந்த விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் பிறந்தவர் பல நூல்களையும் எழுதியுள்ளார். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என ஆர்.ராஜகோபாலாக இருந்து பின்னர் நக்கீரன் கோபால் என பிரபலமான இதழாசிரியர், சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் தொடர் நேர்காணல் நடத்தியதில், பிரபலமானார். நாகப்பா மற்றும் கன்னடிய நடிகர் இராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு நபர்களை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திய போது, தமிழ்நாடு அரசுக்கும் வனக் கொள்ளையன் வீரப்பனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக இருந்தார்.
கருத்துகள்