திருச்சிராப்பள்ளி கணேசன் (வயது 58), விருதுநகர் மாவட்டத்தில், கலால் வரித்துறையின் உதவி ஆணையராக பணியாற்றுகிறார்.
இவர் விருதுநகர் மாவட்ட தனியார் மெத்தனால் ஆய்வகங்கள் மற்றும் பார்களில் மது விற்பனை செய்வதற்கு லஞ்சம் பெறுவதாக விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது
இவர் விருதுநகர் மாவட்ட தனியார் மெத்தனால் ஆய்வகங்கள் மற்றும் பார்களில் மது விற்பனை செய்வதற்கு லஞ்சம் பெறுவதாக விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துரையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் பேரில் விசாரணை நடத்திய அலுவலர்கள் உதவி ஆணையர் கணேசனை பொறி வைத்துப் பிடிக்கத் திட்டம் தீட்டினர். இதற்காக பணி முடிந்து கணேசன் காரில் மதுரை நோக்கி புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த போது, அவரது காரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழிமறித்தனர். அவரது காரில் ரூபாய்.3 லட்சத்து 75 ஆயிரத்து 500 ரூபாயை இருந்ததையும் பறிமுதல் செய்தனர். தனியார் மது விற்பனைக் கூடங்களிலும் மெத்தனால் ஆய்வகங்களிலும் இந்த பணத்தை லஞ்சமாகப் பெற்றது தெரியவந்தது.
காரில் வைத்திருந்த கணக்கில் வராத ரூபாய்.3.75 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், விருதுநகர் கலால் உதவி ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று அவரிடம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாலை 5 மணி வரை விசாரணை நடத்தினார்.அதைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி விமான நிலையம் அருகே மின்சார வாரியக் காலனியில் உள்ள அவரது வீட்டிலும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர். கலால் உதவி ஆணையர் கணேசன் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். அதேபோல் திருப்பூர் மாவட்டம் அவிநாசி முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42) சமீபத்தில் ஊத்துக்குளி வட்டம்
இடையபாளையத்தில் 2.25 ஏக்கர் நிலத்தை இவர் வாங்கிய நிதி அந்த இடத்துக்கான சிட்டா அடங்கலில் பெயர் சேர்ப்பதற்காக, இடையபாளையத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் உரிய ஆவணங்களோடு கார்த்திகேயன் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், பட்டா பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் பிரபு (வயது 44) மற்றும் தலையாரி (உதவியாளர்) கவிதா (வயது 36) இருவரும் ரூபாய்.7 ஆயிரம் லஞ்சம் கேட்டார்களாம். அதனைக் கொடுக்க விரும்பாத கார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை, கார்த்திகேயன் கொண்டு வந்து கொடுத்ததை சோதனை முடிந்த பிறகு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை அலுவலர்கள் கொடுத்தனர். அதை, கிராம நிர்வாக அலுவலர் பிரபு, மற்றும் தலையாரி கவிதாவிடம் கார்த்திகேயன் கொடுத்த போது அவர்கள் இருவரையும் பணம் பெற்ற கையுடன் திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர் கிராம நிர்வாக அலுவலர் பிரபுவை திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் மற்றும் உதவியாளர் கவிதாவை ஊத்துக்குளி தாசில்தார் முருகேஸ்வரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
கருத்துகள்