இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அதனால் அவரை நன்றாக அறிந்த மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் கன்னட புனித் ராஜ்குமார், ஆந்திரப் பிரதேச சிரஞ்சீவி சர்ஜா உள்ளிட்டவர்கள் 40 வயது முடிவில் உடல் நலக் குறைவால் உயிரிழந்து வருவது கொரோனா பரவலுக்கு பின்னர் தான் இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேனி அல்லிநகரம் சின்னசாமி என்ற பாரதிராஜாவுக்கு (வயது 83) மகன் மனோஜ் (வயது 48) உயிரிழந்ததை அறிந்து மிகவும் சோகத்திலுள்ளார். தென்னிந்திய திரையுலகிவ் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மனோஜ் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
1976 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி இயக்குனர் பாரதிராஜா மற்றும் சந்திரலீலாவதி தம்பதிக்கு மகனாக மனோஜ். மற்றும் ஜனனி என இருவர் உள்ளார். 2006 ஆம் ஆண்டு நந்தனாவைத் திருமணம் செய்த மனோஜுக்கு மதிவதனி மற்றும் ஆர்த்திகா என இரு மகள்கள் உள்ளனர். சென்னை நீலாங்கரை வீட்டுக்கு மனோஜ் உடல் எடுத்து செல்லப்படுகிறது
சென்னையில் இறுதி சடங்கு என தகவல்கள் வெளியாகின. நீலாங்கரை கபாலீஸ்வரன் நகரில் பாரதிராஜாவின் வீடு உள்ளது. மறைந்த மனோஜ் பாரதியின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள இயக்குநர் இமயம் பாரதிராஜா இல்லத்திற்கு இன்று இரவு எடுத்து செல்லப்படுகிறது.
மதியம் 3 மணி வரை அவரது வீட்டிலேயே வைத்துவிட்டு, மாலை 4:30 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகளை நடத்த உள்ளனர்.
தாஜ்மகால், சமுத்திரம், வருசமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட படங்களையும் அதில் மனோஜ் பாரதிராஜாவின் நடிப்பையும் ரசிகர்கள் நான்கு அறிவார்கள். பாரதிராஜா ராதிகா ரோஜா ரஞ்சனி ரூபினி ராதா உள்ளிட்ட நடிகைகளையும் பிரபல நடிகர்களையும் அறிமுகம் செய்த நிலையில் வெற்றி பெற வைத்த இயக்குனர் ஆனால் அது அவர் மகன் விஷயத்தில் நிறைவேறவில்லை.
கருத்துகள்