டாஸ்மாக் மோசடி விவகாரத்தில் நாடகமாடுவதை விடுத்து மேல்நடவடிக்கை எடுக்க தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் கோரிக்கை
டாஸ்மாக் மோசடி விவகாரத்தில் நாடகமாடுவதை விடுத்து மேல்நடவடிக்கை எடுக்க தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கோரிக்கை :-
அண்மையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, அதில் ரூபாய்.1,000 கோடி முறைகேடுகளுக்காக மத்திய அரசின் அமலாக்கத் துறை துரிதமாகச் செயல்பட்டு மேல்நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்று ஏதும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.மாறாக, அமலாக்கத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய பாஜக ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு பாஜகவினர், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை! நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள ஆளும் கட்சியினர். முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்? மற்ற மாநிலங்களில் இது போன்ற மோசடிகள் நடைபெற்ற போது என்ன நடந்தது? தமிழ்நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? எதற்காக இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்? என வினா எழுப்பினார்.
கருத்துகள்