உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி நியமனம். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா
தலைமையிலான கொலீஜியம் கூட்டம் சமீபத்தில் நடந்ததில், மேற்கு வங்காள மாநிலத்தின் கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ஜாய்மால்யா பாக்சியை, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கும்படி குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
அதற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். அதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக ஜாய்மால்யா பாக்சி நியமிக்கப்பட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதியில், கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக ஜாய்மால்யா நியமிக்கப்பட்டார்.
அதன்பின், 2021 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34 ல் 33 ஆக அதிகரிக்கும் நிலை உள்ளது.
கருத்துகள்